தனி பள்ளியை போல தனி மையவாடி என்பது அவ்வளவு எளிதானதல்ல. இது சார்ந்த அரசு அதிகாரிகளிடம் பேசிப்பாருங்கள், புரியும். ஒரு சமூகத்திற்கென ஒரு இடத்தை ஒதுக்கினால், அதே சுற்றுவட்டாரத்தில் அதே சமூகதிற்கென இன்னொரு மையவாடிக்கு அனுமதி கிடைப்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.
பாண்டிச்சேரியின் வொயிட் டவுன் பகுதிக்கான மையவாடி, முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிமீ தொலைவில் உள்ளது. வொயிட் டவுன் பகுதியில் பல பள்ளிகள் இருந்தும், அவற்றிற்கு சொந்தமான, பள்ளிகளுக்கு பின்னால் பரந்த நிலங்கள் இருந்தும், மற்றொரு மையவாடியை வொயிட் டவுன் பகுதிக்குள் ஏற்படுத்திக்கொள்ள அனுமதி கிடைக்கவில்லை. ஒரு சமூகத்தில் இருக்கும் இரு பிரிவுகளை விடுங்கள், ஒட்டுமொத்த சமூகம் தங்கள் வசதிக்காக கேட்டபோதும் அதே பதில் தான்.
இது முஸ்லிம்களுக்கு என்று இல்லை, எல்லா சமூகத்திற்கும் இந்த நிலை தான்.
தனி மையவாடி குறித்த தவறான புரிதல்கள் சமூகத்திற்குள் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடுவோ என்ற எண்ண ஓட்டத்திலேயே இதனை இங்கு பதிகின்றேன். சந்தேகம் இருப்பவர்கள், உங்கள் நகர அரசு அதிகாரிகளை தொடர்புக் கொண்டு விபரங்களை பெறவும்..
No comments:
Post a Comment