குரல் கொடுத்த கோமான் நாகூர் ஹனீபா
பதறுகள் எல்லாம் நெஞ்சு நிமிர்த்தி
நடைபோடும் நவீன உலகில்
சமகால தோழரை கொண்டாடிய
நெஞ்சுறுதி மிக்க பெருமகன்.
ஆம்
அய்யா கலைஞரும்
நாகூர் ஹனீபாவும் நண்பர்கள்.
அதை ஒப்புக்கொண்டு
உடைந்து அழுத அய்யா கலைஞரின்
முகம் கண்டு சொல்கிறேன்.
திருமண நாள் மாப்பிள்ளை தோழரும் கூட
குரலில் தனித்து நின்றாய் நீ
தனித்து இஸ்லாத்தை சொன்னாய் நீ
கவிக்கு பொருளை குரலில் கொடுத்தவர் நீ
கவிஞர்களின் குரலாய் ஒலித்தவர் நீ
கண்ணியம் இதுவென உரைத்தவர் நீ
கணமும் நிலை தடுமாறா குணாளன் நீ
குணங்குடிக்கு குரல் தந்த பாக்கியம் பெற்றவர் நீ
தமிழின் சுவைக்கு புது வழி சொன்னவர் நீ
உனை சுத்தம் செய்யும் பாக்கியம் பெற்றேன்
உனை தனித்து தூக்கி சுமந்த பாக்கியமும் பெற்றேன்.
தமிழகத்தின் வரலாறு
தமிழின் இன்னொரு மகன்
எல்லா சமூகமும் ஏற்றுக்கொள்ளும்
இரண்டாவது இஸ்லாமிய ஆளுமை நீ
சிவாலயங்கள் போற்றும் சிறப்புக்குரியவர் நீ
சூபிகளும் போற்றும் செழுமைமிகு நீ
எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்
இன்னொருவர் கிடைப்பாரோ இனி
எங்களை ஏங்கவிட்டு போனாயே நீ
என்னுயிரே என் ஹனீபா
இறைவா ...
அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து
அவரை புண்ணியவான் ஆக்கி அருள்வாய் ரஹ்மானே ... !
ஏக்கம் நிறைந்த மரியாதையுடன்
அ.மு.அன்வர் சதாத்
1 comment:
ஆமீன் ...
Post a Comment