இஸ்லாம் மதுவை முற்றிலுமாக ஒழித்ததுபோல
சாதீய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்தது.
நவீன தகவல் தொடர்புகளற்ற அந்தக்காலத்திலேயே
இஸ்லாம் மூன்றே வருடங்களில் மது ஒழிப்பை சாத்தியமாக்கியதெனில்
அனைத்து படைபலங்களையும் பயன்படுத்தினால்
மூன்றே மாதங்களில் கடும் பிரச்சாரம் மற்றும்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மனித மனங்களில்
மாற்றங்களைக் கொண்டுவர முடியும்
டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில்
குற்றவாளிகளீல் ஒருவன் கோர்ட்டில்
"என்னைத் தூக்கிலிடுங்கள்,
நான் பெரும் கொடுஞ்செயலைச் செய்துவிட்டேன்"
என்று கதறியதை எல்லா மீடியாக்களிலும் தொடர்ந்து
பரப்புவதன் மூலமே பல மனமாற்றங்களைச்
சாத்தியமாக்க முடியும்.
ஆனால் அரசாங்கம் அதற்கு இசைய வேண்டும்.
மக்கள் நலன் பேணும் அரசாங்கமெனில் இது சாத்தியம்.
அதேபோல சாதீயவெறி மற்றும் சாதீயமேலாதிக்கம் போன்ற சீர்கேடுகளை தன் இதமான பிரச்சாரம் மூலம் அழித்து ஒழித்தார்கள் நபிகள் பெருமகனார்.
இது இஸ்லாமிய பிரச்சாரம் அல்ல,
நம் சிந்தனைகளைத் தூண்டுவதற்கான ஒரு தகவல் மட்டுமே.
எதையும் குறைகாண்பது எளிது,
ஆனால் நிறைகளைப் புறக்கணிக்கும் ஒரு சமுதாயம் முன்னேறியதாகச் சரித்திரம் இல்லை...!!
-நிஷா மன்சூர்
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment