தாயை விட இரக்கமுள்ளவன், தந்தையை விட நெருக்கமுள்ளவன், உறவுகளை விட உயர்வானவன், நண்பர்களை விட நாணயமானவன், மனிதர்களின் உற்ற தோழமைகள் எல்லாவற்றிற்கும் மேலானவன் - அன்றிலிருந்து இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறான் எல்லோருக்கும் மேலாய் இருந்து கொண்டிருக்கும் ஒருவன். சரியான புரிதல் இல்லாததினால், காது கொடுத்து கேட்டு என்ன சொல்ல வருகிறான் என்பதையே புரிந்து கொள்ள முடியாத பெருங்கூட்டமாய் உலக மனிதர்கள். என்னதான் பெரிய தப்பு தவறு செய்திருந்தாலும், கண்டித்து விட்டு, முந்தானையில் நனையும் தன் கண்ணீரை துடைத்து விட்டு, பெற்ற பிள்ளையை அருகே அழைத்து, தலையை கோதி விட்டு, முகம் தடவி, உச்சி மோந்து போகட்டும் கண்ணே, இனி அப்படி செய்யாதீங்கடா என் கண்மணி ராசா என்று தளுதளுத்த குரலில் உலகத்தாய் ஒருத்தி சொல்ல முடியும் என்பது சாத்தியம் என்றிருந்தால்...
.....
தாய்க்கெல்லாம் தாயாக, தயாளனாக இருந்து கொண்டிருக்கிற அப்படியான அந்த ரப்புல் ஆலமீன் அவன் குழந்தைகள் நாம், என்னவென்றே அறியாமல் அல்லது தெரிந்தே செய்து விடும் பிழைகளை பொறுக்காமலும் வாரி அணைத்து விடாமலுமா இருந்து விடுவான், அவன் சொல்கிற சொல்லில் பொய் சொல்பவனல்ல. இரங்குவதிலும் மன்னிப்பு அருள்வதிலும், அவன் சொன்னதையும் செய்வான், சொல்லாதவற்றையும் செய்து முடிப்பான், அதனால்தான் அவன் இறைவன், அந்த இறையை இறைவன் என்கிற நிலையில் புரிந்து கொள்வது என்பது மனிதர்களின் பெறுகிற வரம். வரம் பெறுவோம் வரம்பில்லாதவனை புகழ்வோம் !
No comments:
Post a Comment