Sunday, July 26, 2015

என்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்.!

தன்னை ஒரு நிமிடம் எண்ணிப்பார்
உன்னைக் கவர்ந்த ஒவ்வொன்றும்
உனக்கெதிராய் சாட்சி சொல்லும்


மண்ணைக் கவ்வும் மனிதர் நாம்
மறுமைவாழ்வை மனதில் வை
மாயவாழ்வில் சிக்குண்டு
தன்னை அறியா நிலையினிலே
தவறி விழாதே வலையினிலே

வெற்றியென்றும் நிச்சயம்
வென்றிடு பல அவமானம்
அவமானம் ஒரு மூலதனம்
அக்கட்டுரையில் உம்புகழ் ஆணித்தரம்

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுடன்
சென்னை வந்த கவிஞனன்றோ
இன்றும் செவிக்கு விருந்தாய் உம்பாடல்
சபித்த வாயிலும் முனுக்கிறதே

எத்தனை எத்தனை தத்துவங்கள்
எண்ணமுடியாத முத்துக்கள்
அத்தனையும் உமது சிந்தையிலே
ஆழமாய் பதிந்தது விந்தையன்றோ

பட்டிதொட்டியெல்லாம் உம்பாட்டு
பம்பரமாய் சுழல்கிறதே பறைசாற்ற
வெட்டிப் பேச்சுப் பேசியவரும்
விரக்தியுற்றுக் கேட்டனரே

சொக்கத்தங்கமாம் உம்வரிகள்
சொக்கியே நின்றனர் தமிழ்மக்கள்
சொப்பனத்தில் கூட செவிதிறக்கும்
சர்ப்பணம் பாடிய பாலும் பழமும்

எண்ணிப் பார்க்கிறேன் இன்றுநானும்
என்னை யாரென்று எண்ணிஎண்ணி
எழுதிய  கண்ணதாசனை


அதிரை மெய்சா
http://adiraimysha.blogspot.ae
  இந்தக் கவிதை கடந்த 12/06/2015 வெள்ளிக் கிழமை துபாய் கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் நடத்திய கவிஞர் கண்ணதாசனை நினைவுகூறும் கவிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 
அதிரை அளவில் 10, 12 வகுப்பில் முதலிடம் வந்த மாணவர்களை லயன்ஸ் கிளப்பில் பாராட்டி பரிசுகொடுத்து சான்றிதழ் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். அதில் முதலிடம் வந்த என் மகன் இமாமுதீன் பரிசும் சான்றிதழும் பெற்றுள்ளான்.
 Muhiyadeen Sahib Mysha



அதிரை மெய்சா Muhiyadeen Sahib Mysha

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails