இன்னொரு முறை சஹராத்து ஹாலில் இருக்கும் போது திடீரென நினைவு வந்து விழிப்பு வந்ததும் இது எந்த வக்து என்று அருகில் இருந்த அலி(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்.
இது லுஹருடைய நேரம் என்று சொன்னதும் என்னை பள்ளி வாசலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றுச் சொல்கிறார்கள்..
அலி(ரலி) அவர்கள் ஒரு தோளிலும் அப்பாஸ்(ரலி) அவர்கள் மறு தோளிலும் தாங்கிக் கொள்ள ரஸூல் (ஸல்) அவர்களின் கால் விரல்கள் தரையில் கோடுப் போட்ட வண்ணம் அழைத்து வந்து பள்ளியில் தொழுகிறார்கள்.
இந்த முறையும் நபியவர்கள் உட்கார்ந்து தொழுகிறார்கள்..
ஆக வாழ்நாளில் இரு முறை தான் ரஸூல் அவர்கள் உட்கார்ந்து தொழுதிருக்கிறார்கள்..அதுவும் எந்த நிலையில்
யார் ரமழான் காலங்களில் #நின்று வணங்குகிறார்களோ அவர்களுடைய முந்தய,பிந்தய பாவங்கள் மன்னிக்கப்படும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...
No comments:
Post a Comment