Thursday, January 12, 2017

ஜும்மா முபாரக்...


ஜும்மா முபாரக்...
Sirajudeen Bin Mustafa Kamal
வெள்ளிக்கிழமை ஆனால் முஸ்லிம்களில் சிலர் ஜும்மா முபாரக் என்று சொல்வார்கள்... அப்படி என்றால் என்ன? அது எப்பொழுது உருவானது என்று என் ஊரைச் சேர்ந்த, எனது நண்பர் ஷேக் அஹமது எஸ்எஆர் கேட்டிருந்தார்... அவருக்கான விளக்கப்பதிவு. உங்களுக்கும் உதவக்கூடும் நண்பர்களே..
1989 ம் வருடம்...
மார்கழிப் பனிபொழியும் டிசம்பர் மாதம்...
ஒரு வெள்ளிக்கிழமை...

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் தஞ்சை மாவட்டத்தின் எல்லையை ஒட்டிய இயற்கை எழில் கொஞ்சும், உலகின் அழகிய கிராம என்று யுனெஸ்கோவால் சான்றிதழ் வழங்கப்பட்ட அரசர்குளம் என்னும் கிராமத்தில் முபாரக் என்ற 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்தான். இதே நாளில் மதியம் 12.30 க்கு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவனை மதிய தொழுகைக்காக பள்ளிக்கு கூட்டி செல்ல அவனது நண்பன் வந்தான்.
முபாரக் முபாரக் என்று கூப்பிட்டான்.. பதில் இல்லை... சிறிது நேரத்தில் அவன் அம்மா வந்து அவன் தூங்குவதாக சொன்னார். தொழுகைக்கு அழைக்க வந்தேன் ஆண்ட்டி என்று சொன்னான். கொஞம் பொறு அவனை எழுப்புறேன்னு சொல்லிட்டு உள்ர போய் முபாரக்க எழுப்பினாங்க.
"முபாரக்... எந்திரி. தொழுக போகணும்" - அம்மா
"கொஞ்சம் லேட்டா தொழுதுக்கிறேன்மா...நல்லா தூக்கம் வருது.. ப்ளீஸ் மா" - முபாரக்
(இஸ்லாமிய வரையறைபடி தூங்கி விட்டால் அந்த நேர தொழுகையை எழுந்ததும் தொழுது கொள்ளலாம் என்பது சட்டம்)
முபாரக் அன்று வெள்ளி என்பதை மறந்துவிட்டான்...
(வெள்ளிக்கிழமை மதிய தொழுகையை இஸ்லாமியர்கள் ஜும்மா என்று சொல்வார்கள்)
"ஜும்மா முபாரக்" - அம்மா
ஜும்மா நாள் என்று தெரிந்ததும் முபாரக் துள்ளி குதித்து எழுந்து அவன் நண்பனுடன் தொழுச் சென்றான்.
குட் பாய் தானே? ஆனால் விதி அவனை விட வில்லை...
அதன் பின் வந்த நாட்களில் அவனது நண்பர்கள் அவனை ஜும்மா முபாரக், ஜும்மா முபாரக் என்று கிண்டல் பண்ணி வந்தார்கள்.
முபாரக் ரொம்ப அமைதியான இஸ்லாமிய பையன்... வீண் தர்க்கம் புரிபவர்கள் இருந்தால் அவர்களுடன் வாதிக்காமல் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும் என்பதும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களில் ஒன்று...
முபாரக் கடை தெருவில் நடந்து செல்லும் போது நண்பர்கள் ஜும்மா முபாரக் என்று கிண்டல் செய்வார்கள். கேலி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு மிக பவ்வியமாய் லேசாக குனிந்து கையை வாய் வரை குவித்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி விட்டு சென்று விடுவான்...
இதை பார்த்த இவர்களின் நண்பர்கள் அல்லாத முஸ்லிம்கள்...இவர்கள் ஜும்மா முபாரக் சொல்கிறார்கள், அந்த பையன் குனிந்து பவ்யமாய் பதில் சொல்றான்.. அப்ப இது ஒரு மார்க்க வழிமுறை போல... இப்படி செய்தால் நன்மை போல என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் சொல்ல.. இப்படியே ஜும்மா முபாரக் பரவி விட்டது...
அனைவருக்கும் "ஜும்மா முபாரக்"... :)
Sirajudeen Bin Mustafa Kamal

வெள்ளிக்கிழமை - குர்ஆன் அத்தியாயம்: 62
ஸூரத்துல் ஜுமுஆ - வசனங்கள்: 1-11.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails