Saif Saif
சில நேரங்களில் நாம் ஒழுங்காக தானே இருக்கிறோம் ..அல்லாஹ் நம்மை ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ ..
அநியாயம் பண்றவனெல்லாம் நல்லா தானே இருக்கான் ..
என்று நினைக்க தோன்றும் ..
ஆனால் அது உண்மையல்ல.
வெளி தோற்றத்தில் அவ்வாறு இருக்குமேயன்றி உண்மை அதுவல்ல ..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருந்து கொண்டு தானிருக்கும் .
இன்னும் நல்லவர்களுக்கான பெரும்பாலான தண்டனைகள் உடனுக்குடன் அவனுக்கு கொடுக்கப்பட்டு அவன் வழி தவறா வண்ணம் இறைவன் பார்த்துக்
கொள்கிறான் .
அவன் விரும்பாத மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு கடைசியில் கையை விரித்து விடுகிறான் ..
இந்த உடல் உயிர் அவன் தந்தது தானே ..
நீ தாங்கும் அளவுக்கு தான் உன்னை சோதிப்பேன்.என்கிறான் ..
பிறகு ஏன் கவலை ..
சோதனைகளும், வேதனைகளும் நம்மை பண்படுத்தவேயன்றி புண் படுத்துவதற்காக அல்லவே...
அவனுக்கு பிடித்தவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்கிறான்.
பிடித்தவர்களை சோதிப்பதில் அவனுக்கு கொஞ்சம் கூடுதல் இஷ்டம் ..
அதனால் அவர்கள் அந்த தவறை மீண்டும் தொடராமல் பாதுகாக்கிறான் ..
அப்படி அவன் சோதனைகளை தரும் போது அவனை ஏசுபவர்களை விட பொறுமையாக இருப்பவர்களை மிக அதிகம் விரும்புகிறான் ...
இங்கு படும் சோதனைகள் எல்லாம் நம்மை தூய்மையாக்கி இறைவன் பால் நெருங்குவதற்கு தானன்றி வேறில்லை ...
அவனுக்கு எல்லாம்
தெரியும் ..
உருவத்தை மட்டும் பார்ப்பவன் மனிதன் ..
#உள்ளத்தை பார்ப்பவன் இறைவன் ஒருவன் தான் ...
No comments:
Post a Comment