Wednesday, January 4, 2017

பற்று வேறு வெறி வேறு.

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
- நூல்: அஹ்மத்
இறைவன் ஞானம் வழங்கிய எந்த இஸ்லாமிய அறிஞரும் இன மத வெறியர்களாக இருக்கவில்லை..
- உலக தீவிரவாத்தில் மிக சொற்பமாக இஸ்லாமிய தீவிர வாதிகள் இருந்த போதிலும், ஐ.எஸ் உட்பட அனைத்து தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அறிஞர்களும் பிரச்சாரம் செய்பவராகவே இருக்கின்றனர்.

- கொடுமைகளுக்கு குண்டு வெடிப்பு போன்று தீவிரமாக மார்கத்திற்கு முரணான முறையில் எதிர்வினை ஆற்றிய ஒரு சிலர்ர்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் ஆதரிக்கவில்லை.
- எத்தனையோ நிழல் உலக தாதக்கள் இந்த துணைக்கண்டத்தில் இருந்தும் ஒரு சில அரபி பெயர்தாங்கிகளை ஊடகங்கள் முன்னிலைபடுத்தி பேசி வருகின்றன ஆனால் அவர்களையும், கொலை கொள்ளை நிகழ்த்துபவர்களையும் அவர்கள் செயல்களையும் இஸ்லாமிய அறிஞர்கள் விமர்சிப்பவர்களாகவே கண்டனம் செய்பவர்களாகவே உள்ளனர்.
தினமும் அறிஞர் வாயிலாக இறைவனின் போதனைகளை கேட்கும் திருக்குரானை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்த உண்மை இது.
எனவே இஸ்லாம் போதிப்பது மட்டுமின்றி அதிகார, மத, இன வெறி என அனைத்தையும் நடைமுறையில் தடை செய்துள்ளது.
பற்று வேறு வெறி வேறு.
அல்ஹம்துலில்லாஹ்.
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails