தோழரே...........................!
=====================Yembal Thajammul Mohammad
தொல்காப்பியர் காலத்தில் தலைவன் / தலைவிக்குத் தொடர்பிலிருந்த பன்னிரண்டு வகை நட்பினரில் “தோழர்,தோழி” முதலிடம் பெற்றவர் ஆவர்.
“தோழன்,தோழி” எனும் சொற்கள் சங்ககாலத்தில் பெருமளவில் வழக்கத்தில் இருந்தவை.
மதீனாவைத் தலைநகராகக் கொண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆட்சி செய்த காலத்திலும் அவர்களைப் பின்பற்றியோர் அவர்களுடைய “தோழர்கள், தோழியர்” என்றே அறியப்பட்டனர்.
கம்பரின் இராமாயணம்,வீரமாமுனிவரின் சதுரகராதி முதலிய நூல்களில் தோழமை,தோழர் முதலிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.....
திராவிட இயக்கத்தில் அண்ணன்,தம்பி உறவு பேசப்படுவதற்கு முன்னரும் பின்னரும் “தோழர்” எனும் தூய தமிழ்ச் சொல் பெரிதும் வழக்கத்தில் இருந்ததுதான்...
தோழர் என்ற சொல்லுக்கும் நமக்கும் பெரும் தொடர்பு இருக்கிறதே...
என்ன, நான் கூறியதைக் கவனித்தீரா,தோழர்?
Yembal Thajammul Mohammad
No comments:
Post a Comment