- வர்தா புயல் போன்று ஒரு முகமது நபி(ஸல்) அவர்கள் கால சம்பவம் : ஒரு ஜும்மா உரையில் நபி(ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் மழைக்காக பிராத்திக்க கேட்டு நபி அவர்கள் பிராத்தனை செய்கிறார்கள், அடுத்த வாரம் ஜும்மா அன்று அதே நபி தோழர் மழையை நிறுத்த பிரதிக்குமாறு கேட்கிறார்கள். அப்பொழுது அவர் மக்களுக்கு ஏகத்துவம் பற்றியும் பாவம் பற்றியும் எச்சரிக்கை செய்யும் குர்ஆன் வசனங்களை கூறி பின் அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்பு தேடி பிறகு மழை நிற்க பிராத்தனை செய்கிறார்கள்.
- மக்கள் இறை அச்சத்திலிருந்து விலகி உலக வாழ்கையில் மூழ்கி அநீதங்களை செய்யும் பொழுது அல்லாஹ் தன் சோதனையை மக்கள் மீது இறக்குகிறான்.
- ஆனால் மக்கள் சோதனையிலிருந்து படிப்பினை பெறாமல், ஒவ்வொரு சோதனை முடிந்த பின்னும் எதுவுமே நடக்காதது போல் மீண்டும் அநியாயங்களை தொடர்ந்து செய்பவனாக இருக்கிறான்.
- சோதனைகளிலிருந்து படிப்பனை பெறாத சமூகத்தை அல்லாஹ் அழித்துவிடுவான்.
- இறையச்சம் பெற்றவர்களாக திருக்குர்ஆனை தொடர்ந்து வாசிப்பவர்களாக நன்மை நாம் ஆக்கிகொள்ளவ் வேண்டும், அதன் படி நடப்பவர்களாக நம்மை நாம் மாற்றி கொண்டால் அல்லாஹ் நம் மீதான சோதனைகளை மாற்றிவிடுவான்.
உரை நிகழ்த்தியவர் : பாதுர்ஷா
இடம் : ஆகா மொய்தீன் பள்ளிவாசல் - மைலாபூர்
நாள் : 12/16/16
No comments:
Post a Comment