Tuesday, November 9, 2010

நமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்

அன்பார்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

இரண்டு மூன்று நாட்களாக நானெழுதி வரும் எழுத்துக்களை கண்ணுறும்   சகோதரர்கள் சிலர் நான் தவ்ஹீத் ஜமாத் அனுதாபியோ என்றெண்ணலாம் என்னைப் பொறுத்தவரை இசுலாத்திற்கு ஊழியம் செய்யும் அனைவர்களையும் நான் நேசிக்கிறேன். 

நான் அறிந்த சில விசயங்களை உங்களோடுப் பகிர்ந்து கொள்வதே நமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும் என்பதற்காகத் தான்

மேலும் இந்த வேகமான காலத்தில் நீண்ட கட்டுரைகளைப் படிக்க நம்மில் யாருக்கும் நேரமில்லை என்பதால் தினமும் சிறிய அளவில் பதிவு செய்கிறேன். 

ஒரு முறை மத்ஹபுகளைப் பின்பற்றாதச் சகோதரர் ஒருவர் என்னிடத்தில் தப்லீக்கைப்பற்றி குறைப்பட்டுக் கொண்டார் அவர்கள் செய்வது சரியில்லை என்றார். நான் சொன்னேன் இஸ்லாத்தை வளர்ப்பத்தில் அவரவர்கள் அவரவர்களுக்குரிய பங்களிப்பைச் செய்கிறார்கள் அந்த முறை அடிப்படை இசுலாத்தை தகர்க்காதவரை அதையேன் குறை சொல்கிறீர்கள் என்றேன்


இன்று நம்மில் யாரும் காதியானியிசத்தை (அஹ்மதியா முஸ்லிம் கொள்கையை) ஏற்க மாட்டோம் ஏனென்றால் அது அடிப்படை இசுலாத்தையே கேள்வி கேட்பது இறுதி நபித்துவத்தை ஏற்க மறுப்பது என்பதால்

ஏன் என்றேன் நண்பரிடம் “ இல்ல தப்லீக் கிதாபுல ஒரு வேளை தொழுகையை விட்டா ஒரு ஹூகப் காலம் நரகமாம் இது எங்கேங்க உள்ளது...... இதை ஏத்துக்க முடியுமா என்றார்

நான் அவரிடம் அதையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.  ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.  நம்ம வீட்டில் சிறு குழந்தையைப் பார்த்து பால்கனிக்கு போகவேண்டாம் என்கிறோம் .

அது அறியாப் பிள்ளை நாம் எதற்கு சொல்கிறோம் என்று புரியாத வயது.  நாமும் அங்கே போய் எட்டிப் பார்த்தால் கீழே விழுந்திடுவாய் என்று சொன்னால் அதற்கும் புரியாது அல்லது அப்படி செய்து பார்த்திடுமோ என்று பயப்படுவோம்.............  எத்தனை தடவைச் சொன்னாலும் அது கேட்க மாட்டேங்கிறது ஆர்வக்கோளாறில் பால்கனிக்கு சென்று வெளிஉலகை ஆசையோடு பார்க்கிறது நமக்கோ உள்ள வேலை பிள்ளையோடே இருக்க முடியாது...... 

எனவே அந்தப் பிள்ளையைப் பார்த்துச் சொல்கிறோம்.......”அங்க போகக் கூடாதும்மா......... ஊ இருக்குது பேக்கா இருக்கான் என்கிறாம்............ அதற்குப் புரியாது இருந்தாலும் நம் கண்ணையும் தொனியையும் சாடையையும் வைத்து ஐயோ அங்கே ஏதோ ஒரு வேண்டாத பொருள் இருக்கு போலிருக்கு என்று பயந்து அங்கே போகாமலிருக்கிறது. 

நம்முடையது நல்ல நோக்கம் ....பிள்ளை பால்கனிக்குப் போகக் கூடாதென்பது விழுந்திடுமே என்பதால் ......ஆனால் நல்லதனமாகச் சொன்னால் கூட புரியாததால் கேட்கவில்லை.  எனவே ஒரு தவறான முறையை கையாளுகிறோம்.  கையாண்ட முறை தவறானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறது அப்படி எடுத்துக் கொள்ளுங்களேன்.  

வேப்ப மர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப்  போகையில
சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க என்ற  பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருகிறது.


தப்லீக் கிதாபில் உள்ளது........... தொழ வைக்க வேண்டும் என்பது நோக்கம் அதற்காக ஒரு பயமுறுத்தலை அதாவது ஒரு தொழுகையை விட்டால்  (ஒரு ஹூகப் காலம்) நரகமாம் ( இதற்கான ஆதாரம் எனக்குத் தெரியாது ) என்று வைத்துக் கொள்ளுங்களேன் என்றேன்.

அவர் பேசவில்லை மறு பேச்சு.   நாளை நான் என் நண்பன் வாழ்வில் தப்லீகால் ஏற்பட்ட திருப்பு முனையோடு வருகிறேன்.  இன்ஷா அல்லாஹ் தொடரும் 
With best regards
Kamal
by mail from Kamal

Monday, November 8, 2010

இந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்!

இவ்வருடம் (2010) ஹஜ் பயணத்தை மேற்கொள்வோருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் உதவிடும் வகையில் இந்திய அரசு, முதல் முறையாக 24 மணி நேர சேவையினை மெக்காவில் துவங்கியுள்ளது.

ஹஜ் பயணிகளின் வசதிக்காக மெக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 மற்றும் +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய துணைத்தூதரகம் 24 மணி நேர சேவை வசதியினைத் துவங்கியுள்ள இச் செய்தியினை இந்திய ஹஜ் அமைப்பிற்கான துணைத்தூதர் B. S முபாரக், செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவிலிருந்து இவ்வருடம் மெக்காவிற்குப் பயணமாகும் அனைத்து ஹஜ் பயணிகளுக்கான முன்னேற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. புனித யாத்திரிகர்களுக்கு மினாவிலும் அரஃபாவிலும் மூவேளையும் உணவு வழங்கப்படும். இந்திய ஹஜ் பயணிகளுக்கு இத்தகைய சேவைகளை அரசு வழங்குவது இதுவே முதல் முறை!" என்றார் முபாரக்.
ஹஜ் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களின் இந்திய உறவினர்களிடையே இச்செய்தி பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. 
Source : http://www.satyamargam.com/1576?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Satyamargam+%28SatyaMargam.com%29

எல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்

 இமாம் அபு ஹனீஃபா ( ஹனஃபி மத்ஹபின் ஸ்தாபகர்) இமாமுல் அஃலம்  ( அதாவது உலகிற்கே இமாம்) ( ஹனஃபி மத்ஹபு தான் மத்ஹபுகளிலே அதிகமாக மக்களால் பின்பற்றப்படுவதால் பெரியது)  அவங்களே சொல்லலே அப்ப எப்படி நான் ஃபாலோ செய்ய முடியும் என்றார்.

 நபி ஸல் அவர்களின் உறுதியான செயல்முறை என்கிறோம் மேலும் மற்றொரு மத்ஹபான ஷாஃபி மத்ஹபில் வலியுறுத்தப்பட்டு ஷாஃபி மத்ஹபை பின்பற்றுபவர்களால் தொழுகையிலும் செயல்படுத்தப்படுவதை சொன்னாலும் மேலும் அதில் உள்ள அனுகூலங்களைச் சொன்னாலும் அவருக்கு அதில் உடன்பாடில்லை....... ஹனஃபி இமாம் சொல்லாததால்.

மெத்தப் படித்தவர் மேன்மையான பதவியிலிருப்பவர் ஆனாலும் யோசிக்க வில்லை.   நாளைக்கு  அல்லாஹ் நம்மையெல்லாம் ஹனஃபி முஸ்லீம்கள் எல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள் ஷாஃபி முஸ்லிம்கள் எல்லாம் இந்தப் பக்கம்  ஹம்பலி முஸ்லிம்கள் அந்தப் பக்கம் மாலிக்கி முஸ்லிம்கள் அந்தப் பக்கம் என்றா சொல்வான். 

இது மனதில் ஓடிக்கொண்டிருந்த போது தான் இஸ்லாமிய நாடுகளில் உள்ள மாற்று மதத்தவர்கள் ஏன் பெருமளவில் இஸ்லாத்தை தழுவுவதில்லை என்ற எண்ணமும் எழுந்தது.


மனிதன் ஒரு வித்தியாசமானப் படைப்பு.  வேஷ்டியை தூக்கி எறிநது விட்டு அவன் பெர்முடா அணிவான். பொங்கலுக்கு பதிலாக பிஸ்ஸா சாப்பிடுவான் ஆனால் மதம் என்று வந்து விட்டால் விட்டுக் கொடுக்கவே மாட்டான்.

அதனால்தான் எத்தனையோ நபிமார்கள் ஒரிறைக் கொள்கையை எத்திவைக்க மிகுந்த சிரமப்பட்டார்கள்.

இந்த இஸ்லாமிய நாட்டில் பல முஸ்லிம் அல்லாதார்கள் இருக்கிறார்கள். நான் எண்ணுவேன் இந்த நாட்டில் ஒரு சின்ன முஸ்லிம் பிள்ளை கூட ரோட்டில் சிறுநீர் கழிக்க மாட்டேங்கிறது.  நமது நாட்டிலே சின்னவர்களிலிருந்து பெரியவர்கள் வரை ரோடில் கழிக்கிறார்கள்.  இந்த முஸ்லிம் அல்லாதார்கள் அதை சிந்திந்தால் கூட இந்த இசுலாத்தின் மகத்துவம் புரிந்து அதை ஏற்பார்களே என்று.   அதைப் போல் இறுக்கமான ஆடையணிந்து ஒரு பெண் செல்கிறாள் அவளைக் காமக்கண்ணோடு கண்டு இன்புறுகிறான்.  அவளைத் தொடர்ந்தே மற்றொரு பெண் முழுவதும் புர்கா அணிந்து செல்கிறாள் அவளின் அங்கமெதுவும் அவன் கண்ணில் படவில்லை  அதுமட்டுமா இந்த உன்னதமாக இசுலாத்தின் கற்புநெறியும் அவர்கள் கண்ணில் படவில்லை அதை யோசித்தார்கள் என்றால் அடுத்த கணமே முஸ்லிமாயிடுவார்கள்........  ஏன் ?

இது அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும்...கட்டுரையின் தொடர்ச்சி


With best regards
Kamal
by mail from Kamal

Sunday, November 7, 2010

ஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி?



"எண்ணங்களேச் செயல்களைத் தீர்மானிக்கும்"-என்பதை முதன்முதலாக எண்ணத்தில்திண்ணமாகஇறுத்திக்கொண்டு,இக்கட்டுரையைப்படிக்கவும்;
இப்பயிற்சியும் அக்கருத்தின் அடிப்படையிலேதான் சொல்லப்படுவதாலும், இக்கட்டுரைக் கூறும் செயல்முறை பயிற்சியின் துவக்கம் முதல் இறுதி வரை உங்களின் உள்ளத்தை ஓர்மைப் படுத்திக் கொண்டு தொழ வாருங்கள்:
ஓளு: எல்லா முஸ்லிம்கட்கும் அறிமுகமான ஒன்று தான். இருப்பினும்.
இப்பயிற்சியிலும் கூட துவக்கம் முதல் இறுதி வரைக் கீழ்க்காணும் முறையில்
எண்ணத்தில் பயிற்சி கொடுக்கவும்:
ஒளு செய்யப்போவதாக உள்ளத்தாலும்- உதட்டாலும் உறுதிபட இறுத்திக் கொள்க.
(உடல் முழுவதும் மழையில் நின்று நனைந்தாலும் கூட உள்ளத்தில் "ஒளு" என்ற எண்ணம் இல்லாத வரை, அவ்வாறு மழையில் நனைந்து விட்டதனால் ஒளு ஆகிவிடாது)
பிஸ்மி சொல்லி துவங்கும்போழ்தே, மணிக்கட்டு வரை செய்த பாவங்கள் களைவதாக எண்ணிக் கொள்க;அவ்வாறே, வாய்க்கொப்பளித்தல்-முகம் கழுவுதல்-முழங்கை வரை
கழுவுதல்-தலைக்கு தண்ணீரால் தடவுதல்-  செவிகட்கு தடவுதல் மற்றும் இரு
கால்களைக் கழுவுதல் வரை முறையெ வாயால் பேசிய பாவம்;முகத்தில் உள்ள புலன்களால் புரிந்த பாவம்; கைகளால் செய்த பாவம்; தலையால் செய்த பாவம்; செவியால் கேட்ட பாவம் மற்றும் கால்களால் பாவமான செயல்கட்கு நடந்து சென்றவைகள் யாவற்றயும் நினைவுக்குக் கொண்டு வருக; அப்பாவங்கள் இதோ களைவதாக அகத்தில் உறுதிபட இறுத்திக் கொள்க.(ஓர் அதிசயம்; ஆனால் உண்மை: தண்ணீர் பட்டால் இரும்பிலும் துரும்பு ஏறும்; ஆனால், ஒளுவின் தண்ணீரால் உள்ளத்தின் துருவும் அகலும்!!!!!)
பாங்கு: முதல் அழைப்பான "சூர்" ஊதப்படுவதாகவும்; அதனால் யாவரும் "மௌத்" ஆகிவிட்டதால் உலகமே அமைதியாகி விட்டதாகவும் உள்ளதில் எண்ணிக் கொள்க.
(அதனாற்றான், பாங்கோசைக் கேட்கும் பொழுது, நமது துன்யாவின் நினைவுகள் யாவும் நிறுத்திவிட வேண்டப்படுகின்றது)

அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் ...

அல்லாஹ் யாருக்கேனும் நன்மையை செய்ய நாடி விட்டால் அவரை மார்கத்தில் அறிவாளியாக்கிவிடுகிறான் என்றார்கள்  நபி (ஸல்) 

அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் சம மாகாது என்றார்கள்  அவர்கள்

பள்ளியில் படிக்கும் காலத்து பார்த்திருப்போம்...........

சில பிள்ளைகள் பாஸ் செய்தால் போதும் அதாவது 35 – 40 மார்க் வாங்கினால் போதும் என்றிருப்பார்கள்

சில பிள்ளைகள் சுமாராக வாங்கினால் போதும் அதாவது 50-60 மார்க் வாங்கினால் போதும்  என்றிருப்பார்கள்

சிலர் 100க்கு 100 வாங்க விழைவார்கள்.   இந்தப் பிள்ளைகள் நன்றாக படிப்பதோடு மட்டுமல்லாமல் கலர் பென்சில் அழிப்பான் போன்றவற்றோடு சென்று விடைத்தாளை அழகுற எழுதி வண்ணங்களால் கோடிட்டு 100க்கு 100 வாங்குவார்கள்.

தொழுகையின் நிலைகளும் அவ்வாறு தான்  தொழுகையில் 100க்கு 100 வாங்க வேண்டும் என்றால் அதன் நிலைகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும்.

நான் நமது நாட்டில் பணி செய்து கொண்டிருந்த போது என்னுடன் பணியாற்றிய இரணடு மூத்த முஸ்லிம் அதிகாரிகளுடன் தொழச் செல்வேன்.  ஒருவர் பருமனாக இருப்பார் 

நான்கு ரக் அத் தொழும்போது (ஃபர்ல்)   ஒவ்வொரு ரக் அத்திலும் இரண்டாம் ஸ்ஜ்தா முடிந்து பின் உட்கார்ந்து பின் கைகளை தரையில் ஊன்றி எழுந்திருப்பது என்பது நபி பெருமானாரின் வழி முறை இது ஷாஃபி மத்ஹபிலும் உள்ளது. 

ஆனால் அவர் ஹனஃபி ஆகவே அவ்வாறு செய்ய மாட்டார் கையை ஊன்றாமல் எழும் போது கனமான அவர் தடுமாறுவார்.   மேலே விழுந்திடுவாறோ என நான் பயப்படுவேன். 

நான் அவரிடம் “ஒவ்வொரு ரக் அத்திலும் இரண்டாம் ஸ்ஜ்தா முடிந்து பின் சில நொடிகள் உட்கார்ந்து பின் கைகளை தரையில் ஊன்றி எழுந்திருப்பது என்பது நபி பெருமானாரின் வழி முறை இது ஷாஃபி மத்ஹபிலும் உள்ளது” அதை நீங்கள் ஃபாலோ செய்யலாமே ஏன் டைரக்டாக ஸஜ்தா முடிந்த வுடன் நேரடியாக எழுந்து நிலைக்கு வர முயலுகிறீர்கள் இதனால் உங்கள் பாலன்ஸ் தவறி தடுமாறுகிறீர்களே என்றேன்.   அதை ஃபாலோ செய்தீர்கள் என்றால் பாலன்ஸ் தவறாது அதல்லாமல் எத்தனையாவது ரக் அத் என்பது கூட ஞாபகம வருமே என்றேன்.......


அதற்கு அவர் சொன்ன பதில்  (தொடரும்)
 தொடர்ச்சிபடிக்க எல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்
With best regards
Kamal
by mail from Kamal
               

ஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்

இஸ்லாம் எனும் மகத்தான மதத்திற்கு இந்தப் பயங்கரவாதிகள் தவறான பொருள் கொண்டு இழுக்கு ஏற்படுத்துகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

"வன்முறை ஒருபோதும் வேற்றுமைகளைத் தீர்க்காது" என்ற ஒபாமா "அப்பாவிகள் மீதான வன்முறையை இந்த பயங்கரவாதிகள் நியாயப்படுத்த முயல்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

இன்று மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் அன்சாரி என்கிற முஸ்லிம் மாணவரின் ஜிஹாத் பற்றிய கேள்விக்கு விடையளிக்கையில் வன்முறையால் வேற்றுமைகளைக் களைய முடியாது என்பதை நாம் அடிப்படையிலேயே அறிந்துகொள்ள வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டார்.

"நான் கருதுகிறேன், ஒருசில பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்தை தவறாகப் பொருள் கொண்டு அப்பாவிகளின் மீதான வன்முறைகளை நியாயப்படுத்த நினைக்கிறார்கள். அது ஒருபோதும் சரியல்ல" என்றார் ஒபாமா.

Saturday, November 6, 2010

ம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை

''நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்
"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்



நாக‌ப்ப‌ட்டினம் மாவ‌ட்ட‌ம், ம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள‌ ஒரு அமைதியான‌ கிராம‌ம்தான் வடகரை அறங்கக்குடி .  அல்லாஹவின் கிருபையால் இந்த வருடம் (2010) 20 பள்ளி மாணவர்களுக்கும் 2 கல்லூரி மாணவர்களுக்கும் உதவி செய்துள்ளார்கள் .  எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தொன்மைமிக்க இந்த  ஊரில்  எந்த நல்லது கெட்டது நடந்தாலும், கூட்டமைப்பை கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயல்படுவார்கள். நம்மூரைப்போல் இன்னோர் ஊர் ஆகுமா என்று திருப்தி அடைவார்கள்  இந்த ஊர் மக்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர் .சிங்கப்பூரில் அதிகமாக உள்ளனர் .

LinkWithin

Related Posts with Thumbnails