Tuesday, June 7, 2011

தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.  ஆதாரம்: நஸயீ 5391, 5444
 
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
 
இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  ஆதாரம்: திர்மிதீ 3355
 
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
 
இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
 
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
 
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.
 
இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.  ஆதாரம்: நஸயீ 1327
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
 
இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
 
இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
சாப்பிடும் போதும், பருகும் போதும்
பி(இ)ஸ்மில்லாஹ்
 
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 5376, 5378
 
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
 
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: திர்மிதீ 1781
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா
 
இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.  ஆதாரம்: புகாரி 5858
 
அல்லது
 
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்
 
இதன் பொருள் : உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.  ஆதாரம்: புகாரி 5459
 
அல்லது
 
அல்ஹம்து லில்லாஹ் என்று கூறலாம்.  ஆதாரம்: முஸ்லிம் 4915
உணவளித்தவருக்காக
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
 
இதன் பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 3805
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா
 
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.  ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396
 
அல்லது
 
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா
 
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.  ஆதாரம்: புகாரி 5165, 3283
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும் பி(இ)ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 3280, 5623
கோபம் ஏற்படும் போது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்
 
இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282
 
அல்லது
 
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 3276
கழுதை கணைக்கும் போது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3303
கெட்ட கனவு கண்டால்
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 6995
நோயாளியை விசாரிக்கச் சென்றால்
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி முத்ஹிபல் ப(இ)ஃஸி இஷ்பி(எ) அன்தஷ் ஷாபீ(எ) லா ஷாபி(எ)ய இல்லா அன்(த்)த ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.
 
இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742
 
அல்லது
 
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி அத்ஹிபில் ப(இ)ஃஸ இஷ்பி(எ)ஹி வஅன்தஷ் ஷாபீ(எ) லாஷிபா(எ)அ இல்லா ஷிபா(எ)வு(க்)க ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.
 
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!  ஆதாரம்: புகாரி 6743
 
அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து
 
பி(இ)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.
 
இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 4082
 
அல்லது
 
லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails