Wednesday, June 29, 2011

அனைத்து நேரமும் அல்லாஹ்வை (இறைவனை) நினைப்போம்!


எதையும் செய்ய ஆரம்பிக்கும் பொழுது
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (ஆரம்பம் செய்கின்றேன் )

எதையும் செய்ய  நினைக்கும்போது
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்  நாடினால் 

தவறை எண்ணி வருந்தும் போது
அஸ்தஹ்பிருள்லாஹ்
 அல்லாஹ் பிழை  பொறுப்பானாக

பிரச்சனைகள் ஏற்படும் போது
தவக்கல்து   அல்லாஹ்
அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டேன்

நற்செய்தி கேள்விப்படும் போது
மாஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் நாட்டப்படி (நடந்துள்ளது )

எதையும் ஆச்சரியத்துடன் புகழும் போது
சுப்ஹானல்லாஹ்
அல்லாஹ் பரிசுத்தமானவன்

யாரையும் வழி அனுப்பும் போது
feeபி அமானில்லாஹ்  
அல்லாஹ்வின் பாதுகாப்பில் {சென்று வருக)

தர்மம் செய்யும்  போது  
feeபீஸபீலில்லாஹ்
அல்லாஹ் பாதையில் (கொடுக்கிறேன்)

தும்மல் வரும் போது
அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே (உரியது )

பிறர் தும்மும்போது 
யர்ஹமுகல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

யாருக்கும் நன்றி கூறும்போது
ஜஸாகல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு  நற்கூலி வழங்குவானாக 

பாதகமான சூழ்நிலை ஏற்படும் போது
நஊதுபில்லாஹ்
அல்லாஹ் நம் (அனைவரையும்) காப்பாற்றுவானாக

நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்போது
fபதபாரகால்லாஹ்
அல்லாஹ் மிக உயர்ந்தவன்

சத்தியம் செய்யும்  போது
வல்லாஹி பில்லாஹ்
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை (மீறமாட்டேன் )
(அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதனை தவிர்ப்பது நல்லது )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails