Wednesday, June 8, 2011

பாஸித்தின் "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ பூத்த விதம் !

ப்ளாக்கர் நண்பன் Version 2.0

"ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ உங்கள் அன்போடும், ஆதரவோடும் ஒரு வருடத்தைக் கடந்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இந்த இனிய தருணத்தில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான், இணையம் மற்றும் ப்ளாக்கர்

பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.
                                                                                                                                
அந்த ப்ளாக் நான் சார்ந்த மார்க்கம் தொடர்பானது. எப்பொழுதாவது சென்று அப்டேட் செய்து விட்டு வருவேன். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜிமெயில் ஐடி கிடைத்ததும் அதிலேயே பதிவெழுத (அதாவது Copy&Paste செய்ய) ஆரம்பித்தேன்.

கணினியில் Programming Language-ஐ பொறுத்தவரையில், பதினோராம் வகுப்பில் படித்த HTML-ஐத் தவிர வேறு எதுவும் தெரியாது. பிறகு copy&paste தளமாக இருந்தாலும் அதனை அழகுப்படுத்துவதும், விளம்பரப்படுத்துவதும் எப்படி? என்று பல ஆங்கிலத் தளங்களில் கற்றுக் கொண்டு வந்தேன், இன்னும் கற்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பது ப்ளாக் தொடங்கிவிட்டேன். அவற்றில் மூன்றைத் தவிர மற்றவைகளை Delete செய்துவிட்டேன். அதற்கு காரணம் என்ன எழுதுவது என்று தெரியாததுதான்.

கடந்த வருடம் எனது உறவினர் நீடூர் அலி அவர்கள் மூலம் தமிழ்மணம், தமிழிஷ்(தற்போதைய இன்ட்லி), இன்னும் சில வலைப்பூக்கள் அறிமுகமானது. பிறகு ஒரு நாள் நாம் கற்றுக் கொண்ட ப்ளாக்கர் தொழில்நுட்பங்களையே பதிவிட்டால் என்ன? என்று தோன்றியது. உடனே ப்ளாக்கர் நண்பன் என்று பெயரிட்டு இந்த வலைப்பூவை தொடங்கி ஒரு பதிவையும் எழுதினேன்.
                                                   
பிறகு அடுத்தப் பதிவு எழுதுவதில் ஒரு சிக்கல். அது HTML Code-ஐ HTML ஆகக் காட்டுவது. HTML Code-ஐ கொடுத்தால், அது Code ஆக தெரியாமல் அதன் வெளியீடாக (Output) தெரிந்தது. அப்பொழுது அதனை சரி செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன். காரணம் Basically I Am சோம்பேறி!.

பிறகு சகோதரி கண்மணி அவர்களின் பிலாக்கர் டிப்ஸ் என்ற தளத்தைக் காண நேரிட்டது. அதில் அவர் ப்ளாக்கர் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதி வருகிறார். அந்த ப்ளாக்கை பார்த்ததும் தான் மீண்டும் பதிவெழுத வேண்டுமென்ற ஆசை வந்தது. மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, முன்சொன்ன HTML பிரச்சனையை சரிசெய்து பின் மீண்டும் பதிவெழுத தொடங்கினேன். மூன்றாவது பதிவிற்கு தான் முதல் பின்னூட்டமே கிடைத்தது. 

பிறகு கிடைத்த பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் என்னை இன்னும் அதிகமாக எழுதத் தூண்டியது. நான் கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.


இதுவரை  ப்ளாக்கர் நண்பன் தளத்தில்:

40 பதிவுகள் (சராசரியாக ஒன்பது நாட்களுக்கு ஒரு பதிவு)
700+ பின்னூட்டங்கள் (என்னுடைய பின்னூட்டங்களையும் சேர்த்து)
13,000+ வருகையாளர்கள் (Unique Visitors)
40,000+ முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன (Page Views)
200+ நண்பர்கள் (Followers)

நினைவில்  நிற்கும் தருணங்கள்:

1. நண்பர் அஸ்ஃபர் அவர்களின் முதல் பின்னூட்டம்.

2. நண்பர் பிரபு அவர்களின்  சுதந்திர மென்பொருள் தளத்தின் தொழில்நுட்ப வலைப்பூக்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது.

3. தமிழ்மணம் விருதுகள் 2010-ல் முதல் இரண்டு சுற்றுகளைக் கடந்தது.

4. அலெக்ஸா ரேங்கில் முன்னேறி வருவது.

5. இவையனைத்தையும் விட  முகம் தெரியாத பல நண்பர்களைப் பெற்றது.

அதிகமான வாசகர்களை இத்தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் ஆறு தளங்கள்:
  1. இன்ட்லி
  2. சுதந்திர மென்பொருள்
  3. தமிழ்மணம்
  4. தமிழ் 10
  5. தட்ஸ் தமிழ்
  6. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்

அதிகம் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்: 


உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகிறது, உங்கள் சந்தேகங்கள் நான் நிறைய கற்றுக் கொள்ள உதவுகிறது. என்னால் நீங்கள் கற்கவில்லை, உங்களால் நான் கற்கிறேன்.

ப்ளாக்கர்  நண்பன் Version 2.0

இந்த இரண்டாம் ஆண்டில் புதிதாக ஒரு முடிவு எடுத்துள்ளேன். அது ப்ளாக்கர் பற்றி மட்டுமல்லாமல் பிற இணையம், தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகளையும் எழுதலாம் என நினைக்கிறேன். அதனால் தான் உங்கள் கருத்துக்களை அறிவதற்காக Sidebar-ல் கேள்வி கேட்டிருந்தேன். ஓட்டு போட்ட பதினெட்டு நபர்களில் பதினோரு நபர்கள் "பிற செய்திகளையும் எழுதலாம்" என்று சொல்லியிருப்பதால் இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.

என்னால் அனைத்து நண்பர்களின் பெயரையும் இங்கு குறிப்பிட முடியவில்லை. இருப்பினும்,

 இதுவரை பின்னூட்டங்கள் மூலமும், மெயில்கள் மூலமும் ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,

என்னுடைய இந்த தளத்தின் சுட்டியை தங்கள் தளங்களின் Sidebar-லும், பதிவுகளிலும் பகிரும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,
  
இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கும்,

எனது உளமார்ந்த   நன்றி!    நன்றி!    நன்றி!


என்றும் நட்புடன்,

ப்ளாக்கர் நண்பன் (எ) நூ.ஹ. அப்துல் பாஸித்
Source: http://bloggernanban.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails