மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு சீரமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது, சென்னை எழும்பூர் கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்ட்ரேட், பிணையில்லா கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
“கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில் சட்டத்தை மீறி வெளிநாடுகளிலிருந்து ரூபாய் 2 கோடி வசூலித்துள்ளதாக 2004 ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணைக்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் ஆஜர் ஆகாததால் நீதிமன்றம் இந்த கைது உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Source : http://www.inneram.com
No comments:
Post a Comment