புதிய செய்தி கிரிக்கெட் விளையாட்டு வீரர் சாகிர் கான் கோவிலுக்கு சென்று வேண்டினாராம் . திரைப்பட நடிகை இவருக்கு காதலி. இவர் எப்படி வேண்டுமானாலும் வாழ அவருக்கு உரிமை இருப்பினும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற பெயர்தாங்கிகளாக முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு இருப்பதுதான் நமக்கு வேதனை . இவர் போல் பலர் . ஆனால் மற்றவர்கள் இவர்களைப் பார்த்து வழி கெடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எண்ணம்.
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (-1:4. அல்ஃபாத்திஹா திருக்-குர்ஆன்)
நாம் மற்ற மதத்தினரை குறை காணும் எண்ணம் நமக்கு இல்லை .அது அவர்கள் வழி .
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
( -109 - ஸூரத்துல் காஃபிரூன் திருக்-குர்ஆன்)
இதுதான் இஸ்லாமிய வழி ,
1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல
(அல்ஃபாத்திஹா திருக்-குர்ஆன்)
No comments:
Post a Comment