Wednesday, August 10, 2011

இஸ்லாமியச் சட்டம்


மாற்றுச் சட்டங்கள்
ஏமாற்றும் உலகை;
கற்பழித்தாலும்
கரம்காட்டிச் சிரிப்பான்;
என்னக் கொடுமை!

ஓட்டையுள்ளச் சட்டம்
ஒழிக்காதுத் தீமை;
தடுக்க நினைத்தாலும்
போகும் வேகம் ஆமை!

குறையில்லாத
மறைத் தந்த வேதம்;
இல்லாதச் சட்டமில்லை;
வெல்லாத நீதியில்லை!

எட்டுத்திக்கும் ஒலிக்கும்
ஒயாத நேர்மை;
எல்லோரையும் ஒன்றாகக் காணும்
இஸ்லாமியப் பார்வை!

இரும்பாய் தோணும்
சட்டங்கள் கயவனுக்கு;
கடுமையானச் சட்டங்கள்
முகம் சிரிக்கும் நல்லவனுக்கு!

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்;
கயமைக்குக் கொடுமை;
நேர்மைக்கு இனிமை!

கிடைக்கும் நேரம்
படித்திடுங்கள் மறைவேதம்;
சவால் விட்டுச்சொல்லும்
கண்டுபிடியுங்கள் குறையேதும்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails