Saturday, August 20, 2011

புனித ரமளான்-- رَمَضَانَ]

புனித ரமளான்-- رَمَضَانَ]:
மாதம் புனித மாதம்- புதிதாய்
பிறக்கும் ஒவ்வொரு வருடம்

அறம் நல்லறம் கொண்டுவரும்
நோன்பு என்னும் புனித விரதம்

அருள்களை அள்ளி அள்ளி வழங்கப்படும் மாதம்
ஆண்டவனின் சன்னிதானம் அடைப்பெறும் மாதம்
திருக்குர்ஆன் அருளப்பட்ட புனிதமான மாதம்

சங்கைமிகு லைலத்துல் கத்ர் [ஆயிரம் மாதங்களைவிட
சிறந்த இரவு] வந்து இறங்கும் மாதம்
தீங்குசெய்யும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதம்

இறைவனிடம் கேட்டதும் கிடைக்கபடும் மாதம்
இறைச்செய்தி இறக்கப்பட்ட இன்பமான மாதம்
தக்வா என்னும் இறையச்சத்தின் பயிர்ச்சிக்கான மாதம்

சுவர்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம்
நரகத்தின் கதவுகள் மூடப்படும் மாதம்

விடிய விடிய வணக்கங்கள் செய்யப்படும் மாதம்
விடிந்தபின் விரதங்கள் போற்றப்படும் மாதம்

திக்ருகளும் தஸ்பீஹ்களும் ஓதப்படும் மாதம்
தீமைகளை விட்டுவிட்டு தவிர்ந்திருக்கும் மாதம்

நன்மைகளை செய்து செய்து நல்லருள்பெரும் மாதம்
நன்மைஒன்றுக்கு பத்து என பெருக்கித்தரும் மாதம்

ஜக்காத் என்னும் கொடைகள் கொடுக்கப்படும் மாதம்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வாரிவழங்கும் மாதம்

மலையளவு தவறுகளும்- மனம்உருகி
கேட்க்கும்போது மன்னித்தருளும் மாதம்

இறையச்சத்தால் செய்யப்படும் நன்மைக்கேற்ப
முன்செய்த பாவங்களும் மன்னிக்கப்படும் மாதம்.

நோன்பு இது நோன்பு –இதை
நோற்போருக்கு கிடைக்கும் மான்பு

சிறு அரும்பும் விரும்பி வைக்கும்
அருமையான நோன்பு

நீக்கும் இது நீக்கும்
மனித உடலின்- நோயினை நீக்கும்

போக்கும் இது போக்கும்
மனித மனதின்- மாசுவைப் போக்கும்

கொடுக்கும் இது கொடுக்கும்
புதிய சக்தியை இதுகொடுக்கும்

செழிக்கும் அருள் செழிக்கும்
மனித வாழ்வில் அருள் செழிக்கும்

புனித மாதத்தில்;
தீமைகளைவிட்டு விலகியிருங்கள்
நன்மைகளின் பக்கம் திரும்பியிருங்கள்
இறையச்சம்கொண்டு இறையருளை பெற்றிடுங்கள்.

அன்புடன் மலிக்கா
Source : http://niroodai.blogspot.com/



-----------------------------------------------------------------------

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails