Saturday, August 20, 2011

லைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )


லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும்.
கண்ணியமும், மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்: 
(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.(97:1-5)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.(97:1)
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? 
(97:2) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.(97:3)

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்
اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
லைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )ரமளான் மாதத்தின் கடைசிப் பத்துநாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21, 23, 25, 27,29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும். 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 
லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப்பத்துநாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்.அறிவிப்பவர் :ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி  ''இஃதிகாப்'' என்ற அரபி வார்த்தைக்கு ''தங்குதல்'' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர். ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187) தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029) இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.
இஃதிகாப்  ரமளானின் கடைசிப்பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்து காட்டியுள்ளார்கள். 
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி,முஸ்லிம், அஹ்மத்  
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹ்தொழுது விட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம்: புஹாரி,முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவுத் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆன் ஓதியும், திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும். ரமளானுடைய நாட்களில் கேட்கவேண்டிய துஆ ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். 
الْعَفْوَ فَاعْفُ عَنِّي 
('''அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னி'') பொருள் : யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பதை விரும்புபவன்.(ஆகவே)என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!   
மேற்கண்ட  துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
FROM: M.NASEER ALI  . DUBAI  .UAE

2 comments:

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஜஸாக்கல்லாஹ் க்கைர்

VANJOOR said...

உரிய தருணத்தில்
உவகையான‌
உன்னதமான‌
உண்மை உரைக்கும்
உத்தம‌ ப‌திவு.

தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ந‌ற்ப‌ணி.


வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

LinkWithin

Related Posts with Thumbnails