Sunday, January 1, 2012

சீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு ..!



ts
மிகவும் புராதான பழமை வாய்ந்த சீனா மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் சீனாவில் கண்டுபிடிப்பு. இந்த குர்ஆன் கையால் எழுதப்பட்டு கடந்த 1912-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குர்ஆனை முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 100 வருட புராதான குர்ஆன் ஆனது லன்ஸ்ஹௌ பல்கலைகழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் கலாச்சார ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குர்ஆனை ஷா ழோங் மற்றும் மாபுழு ஆகிய இரண்டு புகழ்பெற்ற இமாம்கள் மொழிபெயர்த்ததாக நம்பப்படுகிறது என்று பல்கலைகழகத்தின் தலைவர் டிங் சிரேன் கூறியுள்ளார். ஷா மற்றும் மா ஆகிய இமாம்கள் 1909 ஆம் ஆண்டு இந்த குர்ஆனை மொழிபெயர்க்க தொடங்கி கடந்த 1912-ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளனர் என்று பல்கலைகழக ஆராய்ச்சியாளர் டிங் தெரிவித்துள்ளார்.

தாம் சீனா மொழியில் மொழிபெயர்த்த குர்ஆனை ஷா மேலும் இரண்டு கைப்பிரதிகளை எடுத்துள்ளார் என்றும் அது வேலன்ஸ்ஹௌ  மாகாணத்தில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 20-ம் நூற்றாண்டில் குர்ஆனுக்கு மேலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தானும் தன்னுடைய சக பணியாளர்களும் இந்த மூன்று பிரதிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் டிங் தெரிவித்துள்ளார்.

மேலும் டிங் கூறியுள்ளதாவது நிபுணர்களின் கருத்துப்படி இஸ்லாம் சீனாவில் கடந்த 618 முதல் 907 ஆண்டிற்குள் டாங் வம்சத்தின் காலத்திலேயே பரவி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அப்போதைய அறிஞர்கள் எங்கே தாங்கள் குர்ஆனை தவறாக மொழிபெயர்த்து விடுவோமோ என்று நினைத்து விட்டுவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
தகவல் தந்தது  Kamakshi Narayan

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails