கிருத்துவர்களின் வேதமான
பைபிள் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். பழைய மற்றும்
புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் இவற்றில், மூஸா (அலை) மற்றும் அவருக்கு
முந்தைய நபிமார்களின் வரலாற்றை பேசுவது பழைய ஏற்பாடு. ஈசா (அலை) அவர்களின்
வரலாற்றை பேசுவது புதிய ஏற்பாடு.
புதிய
ஏற்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளான mathew mark luke john என்ற இவற்றை
எழுதியவர்கள் யார் என்று தெரியாது. அதேபோல, இவையெல்லாம் ஈசா (அலை) அவர்களது
காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின்னரே தொகுக்கப்பட்டன.
புதிய
ஏற்பாட்டில் தற்போதைய நிலவரப்படி இந்த நான்கு பகுதிகள் தான் இருக்கின்றன
என்றாலும், இது போல பல பகுதிகள் பல பேரால் ஒன்றாம் மற்றும் இரண்டாம்
நூற்றண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை உற்றுநோக்கினால் பல ஆச்சர்ய
தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம்
என்னவென்றால், இவற்றில் பல ஈசா (அலை) அவர்கள் குறித்த இஸ்லாமிய
கருத்துக்களுடன் பரிபூரணமாக உடன்படுகின்றன.
அதிலும்
குறிப்பாக, முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களிடயே தற்போது உள்ள பெரிய
கருத்து வேறுபாடு, ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பாட்டார்களா என்பதே.
ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை என்றும், கொல்லப்படவில்லை
என்றும் குர்ஆன் கூறுகின்றது. ஆனால் கிருத்துவமோ, ஈசா (அலை) அவர்கள்
சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்ததாக கூறுகின்றது.
ஈசா
(அலை) அவர்களது காலத்திற்கு பின்பு எழுதப்பட்ட நாம் மேலே கண்ட (தற்போது
பைபிளில் இல்லாத) ஆரம்ப கால கிருத்துவ புத்தகங்கள் குர்ஆனுடன் முழுமையாக
உடன்படுகின்றன. அதாவது, ஈசா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை என்றே
அவையும் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஈசா (அலை) அவர்களின் தாயாரான
மர்யம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது இளமை பருவ வரலாறும்
குர்ஆனுடன் பூரணமாக ஒத்துப்போகின்றன.
ஓய்வு நேரத்தில், அமைதியான சூழ்நிலையில் இதனை படித்துப்பாருங்கள்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
---------------------------------------------------------------------------------------------------
1 comment:
ஜசாக்கல்லாஹ் அப்பா..
Post a Comment