Friday, March 30, 2012

இறைவன் நம்முடன் இருக்க கவலையும் பயமும் ஏன்!


எண்ணங்களும், உணர்வுகளும், மனோநிலைக்கும் மற்றும் இதயத்திற்கும் ஒன்றோடன்று தொடர்புடையது. மனம் கவலையால் பாதிக்கப்பட்டால் அது உடல் ஆரோகியத்தையும் பாதிக்கும். தேவையில்லாமல் கவலையை மனதில் வரவைத்துக் கொண்டு உடல் நலத்தினை பாதிக்க வழி செய்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.நல்ல சிந்தனை இறைவணக்கம் மன அமைதிக்கு அடித்தளம். நம்மைவிட பல விதங்களில் பாதிக்கப் பட்டவர்கள் பலர் இருக்க நம்மை நாமே தாழ்வாகவும், குறைவாகவும் எண்ணி, எண்ணி  வீணான கவலைகளில் ஆழ்த்திக் கொள்வது வேண்டாத ஒன்று .
நல்லதையே நினையுங்கள் ,நல்லதையே செய்ய முற்படுங்கள். இது மனதிற்கு மகிழ்வினைத் தருவதுடன் ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.

Tuesday, March 27, 2012

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம்  நிர்ணயம் செய்து வருபவன்.
இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)
கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை  மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاَةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لاَ نَسْأَلُكَ رِزْقا ً نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (அல்குர்ஆன்  20 : 132)
உன்னிடமிருந்து அல்லாஹ் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். அதனால் விளையும் நற்பலன்களும் உன்னையே வந்தடைகின்றன.
அவன் உன்னிடம் தன்னை மட்டுமே வணங்கவேண்டும்; எதையும் இணையாக்கக் கூடாது என்பதையே விரும்புகிறான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْق ٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி எனக்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும் அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 56, 57, 58)
அல்லாஹ்தான் நமது ரப்பு, நாம் அவனுடைய அடிமைகள். அவன் யாவற்றையும் வளர்த்து காப்பவனாக இருக்கின்றான். அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடியார்களாக நாம் இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மீது இடைவிடாது பொழிந்துகொண்டிருக்க அவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நிராகரித்தால் அவனுக்கு மாறு செய்தால் அது எவ்வளவு பெரிய வெட்கங்கெட்ட செயலாகும்.
மனிதர்கள் எவரேனும்  உபகாரம் செய்திருந்தால் அவருக்கு மாறுசெய்யவும் அவரது விருப்பத்துக்கு முரணாகவும் நடப்பதற்கு நீ நிச்சயமாக வெட்கப்படுகிறோம். அவ்வாறிருக்க நாம் அடைந்திருக்கும் அனைத்து அருட்கொடைகளும் அவனது உபகாரம்தான்.  தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுவது அது அல்லாஹ்வின் அருளினால்தான. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மாறு செய்வது எப்படி நியாயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَة ٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (அல்குர்ஆன்  16 : 53)
وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِه ِِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَج ٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيداً عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلاَةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلاَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன்  22 : 78)

Saturday, March 24, 2012

துபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)

துபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அமைதி மாநாடு
Dubai International Peace Convention is being organized by Mohammed Bin Rashid Al Maktoum Award for World Peace (Government of Dubai) in association with Al Manar Center in partnership with Islamic Affairs & Charitable Activities Department (IACAD). DIPC 2012 will be a 3 day event to be held on 12th 13th & 14th April 2012 at Dubai World Trade Centre, Dubai. For further details, kindly logon to http://www.peaceconvention.com/

பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தக்வா "தற்காத்தல்"

 தக்வா தரும் பாடம்
தக்வா என்றால்   "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய "அல்லாஹ்" நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.

 நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது தக்வாவின் விரிந்த பொருளாகும்.

"அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றை செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் "தக்வா"வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவனாக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.

ஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், "நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்" என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை தமது தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கிறார்.

ஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனதில் இறையச்சம் மிகுந்து என்றும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு,  தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.

இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது.
ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Source : http://www.satyamargam.com/

                                       தக்வா-என்றால்-என்ன?
Taqwa- Piety
View another webinar from Xenia Y

Thursday, March 22, 2012

3 டி வலைத்தளம் (அல்ஹம்துலில்லாஹ் | அற்புத வலைத்தளம்)



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.



 
கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து, 3 டி அழகான படங்களை தொடர்ந்து பாருங்கள்
தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள்    http://3dmekanlar.com/




Wednesday, March 21, 2012

புனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவிப்பு.

ஜெட்டா:--   நாகை மாவட்டம் மயிலாடுதுறை  மற்றும் தஞ்சைப் பகுதியைச் சார்ந்தோர் ஒரு குழுவாக, சவூதி அரேபியாவில் உள்ள   மக்காவிற்குப் புனிதப்  பயணம் மேற்கொண்டனர், மஹ்தியா ஹஜ் சர்வீஸ் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை மக்காவிற்கு  அழைத்துச் சென்றது.

புனிதப்பயணமாக சவூதி அரேபியாவிற்குச் செல்லும் பெண்கள்  இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட ,  தக்க துணையின்றிப்  பயணம் செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிப்பதில்லை.இந்நிலையில் மஹ்தியா நிறுவனம் மூலம் மக்காவுக்குச் சென்ற மயிலாடுதுறைப் பகுதியைச் சேர்ந்தத  நான்கு பெண்மணிகள்  திரும்பவும் இந்தியாவுக்கு வருவதற்குரிய தக்க துணையை இந்நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை. இதை அறியாத இவர்கள் இந்தியாவிற்குத் திரும்புவதற்காக ஜித்தா விமான நிலையம் சென்றபோது விமான நிலையத்தில் அதிகாரிகள் இவர்களைத் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.இரு  முறை முயன்றும் இப் பெண்மணிகள் நாடு திரும்ப அனுமதிக்காமல், மக்காவிற்கே திருப்பி அனுப்பப் பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த முன்னாள் தமிழக வக்புவாரியத் தலைவர்  ஹைதர் அலி  ஜித்தா தமிழ்சங்கத்தைச் சேர்ந்த  ரஃபியா மற்றும் முகமது சிராஜுதீன் ஆகியோரைத்  தொடர்பு கொண்டார்.இவர்களின் முயற்சியால் ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இந்த வாரத்துக்குள்  இந்த நான்கு பெண்மணிகளையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியும் என்று தெரிய வருகிறது.
Source : http://www.inneram.com/

தாவாவும் தப்லிக்கும் !

 தாவா  என்றால் அறிவித்தல்  தப்லிக் என்பது  பரப்புதல்  அதாவது  இஸ்லாமிய வழிபடும் முறைகளும்   மற்றும் அதன்  கொள்கைகளையும் மக்களுக்கு ஏற்றி வைத்தல் என்பதாகும் . இதனை கையாளும் முறைப்பற்றி   முஸ்லிம்களிடையே  பல கருத்து வேறுபாடு உள்ளது . அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை .இங்கு தெரிந்த சில விளக்கம் தர விருப்பம். ஆண்டவன்தான் அதன்  உண்மைநிலையை  அறிவான் .

“தாவத்”- என்றால் அழைப்புப்   பணியைச் செய்தல் ஆகும் . தாவத் என்பது   தாவுதலாகாது .அதாவது  மத மாற்றத்திற்கு செயல் படுவதாக கருதுவது  மடமை, இஸ்லாம் சொல்லியபடி   இறைவனை தொழும் மற்றும் அதன்  நற்காரியங்களில்  மற்றவர்களையும்    ஈடுபட தங்கள் வசம்  அவர்களயும்  இணைந்துக்  கொள்ளும்படி மக்களை  மார்க்க வழியில்அழைப்பதுதான்.  இந்த தாவாவின்  சிறப்பாகும் .இது நபிமார்களும் அவர்களது  தோழர்களும் மற்றும் அவர்கள் வழி வந்தவர்களும் செய்த சேவையாக கருதப்படுகின்றது . முஸ்லிம் மக்களில் சிலர்  இந்த தாவத் பணியில்  தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர் , அவர்களில் மிகவும் படித்தவர்களும்,செல்வந்தர்களும்  அடங்குவர் . 
இவர்கள் நல்லவர்  கெட்டவர் என  யாரையும்  வேறுபடுத்திப் பார்ப்பதில்லை .நோக்கம் அனைவரும்  இஸ்லாம் காட்டிய வழிகாட்டுதலைப் பேணி நடக்க வேண்டும்  என்பதே. தொழுகையை கடைபிடித்துக் கொள்ளுங்கள்  அதுவும் முடிந்தவரை பள்ளிவாசலுக்கு வந்து தொழுங்கள்  அவ்விதம் நீங்கள்  செய்தால் உங்களிடமுள்ள அணைத்து கெட்ட பழக்கங்களும் உங்களை   விட்டு நீங்கி விடும் என்ற உயர்ந்த சிந்தனையோடு தப்லிக் ஜமாத்தினர்    செயல்படுகின்றனர் . குடிப் பழக்கம் உள்ளவரையும் அவர்கள்  அழைக்கத் தவறுவதில்லை . குடியை  வெறுத்தாலும் அவர்கள் குடிகாரனை வெறுப்பதில்லை .அவரும் நல்வழிப் பட வேண்டும்  என்ற உயர்ந்த சிந்தனை .  தாவாவில் சில  நாட்கள் அது ஒரு நாளோ  ,ஒரு வாரமோ அல்லது நாற்பது நாட்களோ  பள்ளிவாசலில் அவர்களுடன் இருந்து அந்த சேவையில் ஈடுபடும் போது அது அவர்களுக்கு  தங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன் முறையான இஸ்லாமிய வாழ்வின் முறையில்  அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதுடன் மற்றும் அனைவருக்கும் அதனால் நன்மை வந்தடையும் என்ற ஆழமா  நம்பிக்கை .  இப்போதுள்ள மார்க்க போதகர்கள் , பள்ளிவாசல் இமாம்கள் பள்ளிவாசலில் இஸ்லாமிய கருத்துக்களை சொல்வதோடு நிறுத்தி விடுவார்கள்.அதோடு தங்கள் வேலை முடிந்து விட்டதாக கருதுகின்றனர் .  அவர்களது தொண்டு  பள்ளிவாசலுக்கு வெளியே இருப்பதில்லை .ஆனால் இந்த தாவா சேவையில் (தொழ அழைப்பது ) பள்ளிவாசலுக்கு வெளியேயும்  செய்பவர்கள்  பலர் . இவர்கள்   'தப்லிக் ' 'தாவா'சேவை செய்பவர்கள் என அழைக்கப் படுகின்றனர்  இது மிக்க நல்ல சேவைதான் . வரவேற்கப்பட வேண்டியதுதான் .
 ஆனால் அவர்கள்  தொடர்ந்து   தொழுதுவருபவர்களையும் ,இறைநேச பக்தியுடையவர்களையும்  திரும்ப ,திரும்ப  அழைப்பதும் ,அவர்களின் நேரத்தினை தேவையில்லாமல் எடுத்துக் கொள்வதும்  இவர்கள்  கருத்துக்கு உடன் பட்டு அவர்களை இக்கட்டான   நிலைக்கு உட்படுத்தப்படுவதும்தான்  சிறுது நெருடலை உண்டாக்கி விடுகின்றது. அவர்கள் தொழுகை முடிந்து அவசரமாக தங்கள் வேலையில் ஈடுபட முற்படும்போது  அவர்களை தடுத்து நிறுத்தி பேச முற்படும்போது  கேட்பவர் தடுமாற்றத்திற்கு  ஆளாகும் நிலையை அறிந்துக் கொள்ளாமல் இருப்பது  நற்பயனை அளிக்காது . 



  தயவு செய்து இதனையும் கிளிக் செய்து படிங்கள்  
 IT'S SARF: என்னுடைய தப்லிக் அனுபவம்.

Saturday, March 17, 2012

OPPORTUNITIES for Ladies மகளிரே!! வாருங்கள்!!

OPPORTUNITIES
for Ladies

~ Come and Rock ~

Ameeraga Thamiz Mandram
proudly presents
for International Women's Day

A complete variety of programme to give opportunity to Women's Talent
in the presence of a
LEGEND LADY
 
on Friday the 4thMay 2012
 
  • Do you like to participate? * Do you wish to show your talent to the world? * Do you have courage to challenge people? *Do you want to win exciting prizes?
 YES YOU ARE THE ONE WE ARE LOOKING FOR 

Wanted to see your daughter walking in a Ramp in style? This is for girl’s age group 3 to 9 only
~~~~~~~~~~~~~
Wanted to prove that you are a great cook?  'Suvai Arasi 2012' a cooking competition on 13th April @ 3.30-4.30 pm

Essay Competition in Tamil - write at home and submit. Topic 'Feminism in my view' (in Tamil only), after registration terms & details will be sent.
~~~~~~~~~~~~
Arts & Craft - Craft work out of Recycled / waste items - do at home and submit on 13th April @ 4 - 5 pm

~~~~~~~~~~~~
Want an opportunity for your kids to showcase their dance talent, we are extending a chance for them on our stage. Call 050 7175439

Lots more....
 
Come & register your name with us on or before 6th  April
Write your name, contact number, email id with a brief note about your talent to us
 
Only members can participate so don’t wait to enroll your membership with us.
For more details please write to us: atmuae@gmail.comor call 055 3896973/ 050 3445375

மகளிரே!! வாருங்கள்!!

அமீரகத் தமிழ் மன்றம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
பெருமையுடன் வழங்கும்
மகளிர்களின் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு
ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில்


வெள்ளிக்கிழமை 4 மே 2012
  • நீங்கள் கலந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறீர்களா? * உங்களது தனித்திறமையை உலகிற்குக் காட்ட வேண்டுமா? * வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்த விருப்பமா? * சவால்களைச் சந்திக்கும் தைரியம் இருப்பவரா? * கவர்ச்சிகரமான பரிசுகளை அள்ளிச்செல்ல வேண்டுமா?
உங்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்

நாகரீக மேடையில் உங்கள் குழந்தை அசத்தல் உலா வர ஆசையிருக்கிறதா? - 3 முதல் 9 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான போட்டி
~~~~~~~~~~~~~
நீங்கள் தேர்ந்த சமையல் கலைஞர் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமா? உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இதுதான்
சுவை அரசி 2012” சமையல் போட்டி – ஏப்ரல் 13, மதியம் 3:30-4:30 மணிக்கு
கட்டுரைப் போட்டி - தலைப்பு 'பெண்ணியம் எனது பார்வையில்' பெயர் பதிவு செய்த பிறகு மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். வீட்டிலேயே எழுதி அனுப்பலாம்.
கைவினை பொருட்கள் தேவையற்ற தூக்கியெறியும் பொருட்கள் கொண்டு செய்து சமர்ப்பித்தல் – ஏப்ரல் 13, மதியம் 4:00-5:00 மணிக்கு
~~~~~~~~~~~~~
உங்கள் குழந்தை நடனமாடக் கூடியவரா? அவருக்கு நடனமாடுவதற்கான வாய்ப்பை உருவாக்க விரும்புகிறீர்களா?
அழையுங்கள் 050 7175439

இன்னும் பல..

வாருங்கள்! போட்டியில் கலந்து கொள்ள
பெயர்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: ஏப்ரல் 6
உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் உங்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

இத்தனை வாய்ப்புகளும் உறுப்பினர்களுக்காகத்தான்
எனவே உறுப்பினர்களாக உங்களைப் பதிவு செய்து கொள்ளத் தவறாதீர்கள்!
மேலதிக விபரங்களுக்கு: atmuae@gmail.com| 055 3896973 | 050 3445375



by mail from Jazeela

Friday, March 16, 2012

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரக்கதுஹு....

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே...

எனக்கு கிடைத்த் படி இந்த தகவலை உங்களுடன் பகிர்கிறேன், நீங்களும் ஏனேய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பரப்புங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக! 

வஸ்ஸலாம்.... 


தயவுசெய்து இதன் பிரதியைப்பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின்   உதவியால்இன்ஷா அல்லாஹ்!

1. 
ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ்கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்குசென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445


2. 
இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. 
சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலைசென்னை - 06

4. 
ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலைசென்னை - 06

5. B S. 
அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் மூர்ஸ் ரோடுசென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. 
சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்ஜாவர் பிளாசாநுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைசென்னை - 34

7. 
முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைசென்னை - 34

8. 
மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. 
முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்ஜபார்ஷா தெருதிருச்சி.

10. 
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலைசென்னை - 03

11. 
தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெருஅண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. 
அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலைஎழும்பூர் - சென்னை – 08

13. 
ராஜகிரி பைத்துல்மால்கீழத் தெருராஜகிரி - 614 207

14. 
டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலைசென்னை

15. 
ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 
மகாராஜா சூர்யா ராவ் ரோடுஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. 
மியாசிபுதுக் கல்லூரி வளாகம்பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலைதேனாம்பேட்டைசென்னை - 18
 
தயவுசெய்துஇவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன். 

by mail from : maraim hasan

Thursday, March 15, 2012

வெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் !

  நான் ஒடுக்கப்பட்ட பெண்ணாக நீங்கள் என்னை நினைப்பதனை நான் அறிகின்றேன் அதற்கு முக்கியமாக காரமாக நீங்கள் சொல்வது நான் உடுத்தும் ஆடை . ஹிஜாப் அணிந்து செல்வது எந்த தவறுமில்லை மற்றும் இது நன்மையான பயனையே தரும் 
ஆடை பாதி ஆள் பாதி என்பார்கள் , அதன் உண்மையான பொருள் சுத்தமான ஆடையணிந்து அசிங்கான ஆடை அணியாமல் இனக்கவர்ச்சியை
தூண்டாமல் இருப்பதேயாகும் . பெண்களுக்கே உள்ள தனித்த குணம் வெட்கம். .வெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் . என்னுள்ளே இருக்கும் சிறப்பு நாணமும்,அடக்கமும்,தான். மனதளவில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் தான்  பெண்மைக்கு  பெருமை தருகின்றது . நான் ஒரு முஸ்லிம் நான் விருபிய ஆடையை விரும்பி அணிந்தாலும் அதற்கு ஒரு வரைமுறை உண்டு .அதனை மிகவம் பெருமையாகவே கருதுகின்றேன் .என் ஆடல் அழகை  என் கணவர் கண்டு களிப்பதில் எந்த தவறுமில்லை. நான் கவர்ச்சி தரும் ஆடைகளை அணிந்து மற்றவர்களின் மனதினை கெடுத்து அதனால் விளையக்கூடிய தவறான செயல்களுக்கும் பாவமான் காரியங்களுக்கும் நான் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. இவ்விதம் நான் உடுத்தும்  உடையால் என் உரிமை சிறிதும் பாதிக்கப்படவில்ல. மற்ற பெங்களிப் பெண்களை போலவே கல்வி கற்க பாடசாலைக்கு,  கல்லூரிக்கு செல்வதற்கும்  மற்றும் அலுவலகங்கள் செல்வதற்கும் இஸ்லாம் எந்த தடையுமில்லை

Wednesday, March 14, 2012

படைச்சதுதான் படைத்தான் ஆசிரியரை ஆண்டவன் ஏன் படைத்தான் .

இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்

குழந்தை இவ்வுலகில் வர இறைவனது அருள் வேண்டும். அந்த எல்லாம் வல்ல,கருணை மிக்க எங்கும் நிறைத்த  இறையோனைப் பற்றி தெரித்துக் கொள்ள சிறந்த ஆசிரியர் தேவை. அந்த ஆசிரியர் இறைபக்தி உடையவராக இருப்பது நல்லது .
முதலில்  இறைவனது பெயரைச் சொல்லியும் அவனது அருள் நாடியும்  அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...குழந்தைக்கு    பெயர் சூட்டுவதோடு தாய் தனது பாலை தன்  குழதைக்கு    ஊட்டிவிடுகின்றாள்.  அது தொடர்கின்றது அதுவே அந்த குழந்தை இறைவனின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கின்றது . 

 கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். -3:7.-குர்ஆன்

அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வயின் மீது நாட்டம் கொள்கின்றான்

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.-குர்ஆன்
என்ற திருமறையின்  வார்த்தையை மனனம் செய்து அதன் நம்பிக்கையோடு படிக்கும் போது அவனது கல்வி அறிவு வளர்சியடைகின்றது   
 எது நல்லது எது கெட்டது என்பதனை தெரிந்து நல்லது  நாடி கெட்டதை விட்டு விலகி வாழ  முயல்கின்றான். அந்த ஆசிரியரும் ,தாயும்,தந்தையும் மற்றும்  உடன் இருப்போரும் நல்லவர்களாக இருந்து  விடும்போது அவனது வாழ்வும் சிறப்படைகின்றது . அதுவே மாற்றமாக இருக்க நேரிட்டால் அனைத்தும் கெட்டு அவனது வாழ்வு மோசமாகிவிடும் . அதனால் நாம் ஆசிரியரை தெரிவு செய்வதில்  கவனம் தேவை.
'
நம் வாழ்வு உயர்வாக அமைய சிறந்த ஆசிரியர் அவசியம் தேவை.  
தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர் உங்களில் உயர்ந்தோர் - நபி மொழி
மனிதனுக்கு அறிவை தந்த இறைவன் தனி மனிதனுக்குள் அடைத்து வைக்காமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதையே விரும்புவான். அது தேடிக் கிடைக்கும் போது சிறப்பாக அமையும் .
எப்படி கற்பது
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
  - திருக்குறள்

கற்றுக் கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.- திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.- திருக்குறள்

தாயின் மகிழ்வு 
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.( குறள் எண் : 69 )
விளக்கம்
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

படைச்சதுதான் படைத்தான் ஆசிரியரை ஆண்டவன் ஏன் படைத்தான் .

இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்

குழந்தை இவ்வுலகில் வர இறைவனது அருள் வேண்டும். அந்த எல்லாம் வல்ல,கருணை மிக்க எங்கும் நிறைத்த  இறையோனைப் பற்றி தெரித்துக் கொள்ள சிறந்த ஆசிரியர் தேவை. அந்த ஆசிரியர் இறைபக்தி உடையவராக இருப்பது நல்லது .
முதலில்  இறைவனது பெயரைச் சொல்லியும் அவனது அருள் நாடியும்  அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...குழந்தைக்கு    பெயர் சூட்டுவதோடு தாய் தனது பாலை தன்  குழதைக்கு    ஊட்டிவிடுகின்றாள்.  அது தொடர்கின்றது அதுவே அந்த குழந்தை இறைவனின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கின்றது . 

 கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். -3:7.-குர்ஆன்

அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வயின் மீது நாட்டம் கொள்கின்றான்

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.-குர்ஆன்
என்ற திருமறையின்  வார்த்தையை மனனம் செய்து அதன் நம்பிக்கையோடு படிக்கும் போது அவனது கல்வி அறிவு வளர்சியடைகின்றது   
 எது நல்லது எது கெட்டது என்பதனை தெரிந்து நல்லது  நாடி கெட்டதை விட்டு விலகி வாழ  முயல்கின்றான். அந்த ஆசிரியரும் ,தாயும்,தந்தையும் மற்றும்  உடன் இருப்போரும் நல்லவர்களாக இருந்து  விடும்போது அவனது வாழ்வும் சிறப்படைகின்றது . அதுவே மாற்றமாக இருக்க நேரிட்டால் அனைத்தும் கெட்டு அவனது வாழ்வு மோசமாகிவிடும் . அதனால் நாம் ஆசிரியரை தெரிவு செய்வதில்  கவனம் தேவை.
'
நம் வாழ்வு உயர்வாக அமைய சிறந்த ஆசிரியர் அவசியம் தேவை.  
தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர் உங்களில் உயர்ந்தோர் - நபி மொழி
மனிதனுக்கு அறிவை தந்த இறைவன் தனி மனிதனுக்குள் அடைத்து வைக்காமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதையே விரும்புவான். அது தேடிக் கிடைக்கும் போது சிறப்பாக அமையும் .
எப்படி கற்பது
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
  - திருக்குறள்

கற்றுக் கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.- திருக்குறள்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.- திருக்குறள்

தாயின் மகிழ்வு 
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.( குறள் எண் : 69 )
விளக்கம்
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

Tuesday, March 13, 2012

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண்: 3
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?
பதில்:
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு – உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு – போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.
பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு – மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.
A. பாபிலோனிய நாகரீகம்:
பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

Monday, March 12, 2012

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்: உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

துபாஷ் காதிரின் முன்னோர்கள்
துபாஷ் அப்துல் காதிரின் முன்னோர் இளையான்குடியிலிருந்து நத்தம் அபிராமத்துக்குக் குடிபெயர்ந்து வந்தனர். இவர்களை இளையான்குடியில்” புகையிலைக் கட்டை வகையறா” என்று கூறப்படுகிறது.

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உயர்ந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த பல்வேறு வரலாற்றை நாம் படித்திருக்கிறோம்.

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கையில் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்த இராமநாதபுர மாவட்டம் அபிராமம் நத்தத்தில் பிறந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை சில ஆவணங்களுடன் எழுதி இருக்கிறேன்.

இளமைப்பருவம்
கி.பி.1847 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நத்தத்தில் இவர் பிற்ந்தார்.

இவரது தந்தை பெயர் கலுங்கு இராவுத்தர். இவருக்கு முத்து முஹம்மது என்ற தம்பியும் மீராக்காள் என்ற தங்கையும் இருந்தனர். காலங்கள் உருண்டோடியது. தம் பதினெட்டு வயதை எட்டிய பொழுது வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். குடும்பம் நொடித்தது.

இளமையில் பட்ட கஷ்டங்கள்இவர் சிறுவராயிருக்கும் போது அடிக்கடி தம் அன்னையிடம் முட்டை பொறித்துக் கேட்பாராம். வறிய நிலையில் இருந்த அன்னை தனயனின் ஆசையை நிறைவு செய்ய இயலாததால் கண் கலங்கி ஒரு நாள் வேப்பெண்ணெய்யில் முட்டையைப் பொறித்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். அன்னை சொல்லாமல் சொன்ன உண்மையைப் புரிந்துகொண்ட இவர் அன்றிலிருந்து இறுதிவரை முட்டை உண்பதே இல்லை என்று கூறுவர்.

வறுமையின் பிடியிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது. அதுவே வரலாற்றில் முத்திரை பதித்தது. மீண்டும் உங்களைப் பார்க்கும்போது ஒரு கோடீஸ்வரனாகவே வந்து பார்ப்பேன் என தன் அன்னையிடம் சூளுரைத்தார்.

காரிருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் உதிப்பது போல வறுமைப் பேயைத் துரத்துவதற்காக புதிய இடத்தை நோக்கி புறப்படலானார்.

பர்மா பயணம்

தென் கிழக்காசிய நாடான ஐராவதி நதிக்கரையில் அமைந்த கலைகள் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் பர்மாவுக்குப் பயணமானார். கம்பீரத் தோற்றம் அதுதான் இவரது வாழ்க்கையின் ஏற்றம். அதனால் அவருக்கு ஏற்பட்டது ஒரு மாற்றம்.

நார் பூவாக மாறியது வானத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப் போல இவரது வாழ்க்கையில் எதிர்பாராத ஒளி பிறந்தது. ஆம் பூவோடு சேரும் நாரும் மணம் பெறுவது போல இவருக்கு திருச்சியைச் சேர்ந்த எஹியா மெளலானா என்ற பெரியாரின் தொடர்பு கிட்டியது.

அந்தப் பெரியார் இவரை ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இருந்தும் இவர் காத்திருந்தார்.

அந்தக் காத்திருத்தல் ஒரு சரித்திரத்தை மாற்றி எழுதப் போகிறது என்பது வறுமைக் காதரின் வாட்டமுள்ள நெஞ்சுக்குத் தெரியாது. இறுதியில் சுபுஹுத் தொழுகை முடித்து வந்த அந்தப் பெரியவர் உபதேசித்தார்.

‘உனக்கொரு எதிர்காலம் உண்டு அதனால் கொலை மற்றும் கொள்ளைக் கும்பலை விட்டு அகன்று விடு' என்றுரைத்தார். மனம் மாறினார், மணம் வீசினார். திருந்திய அவர் அங்கு ஒரு பர்மியப் பெண்ணை மணந்து கொண்டார்.

ஏறுமுகம் தந்தது துறைமுகம்அன்று முதல் அவர் வாழ்க்கை உச்சக் கட்டத்தை அடையத் துவங்கியது. மனைவியின் மூலமாகக் கிடைத்த மூலதனத்தையும் தம் மூளை எனும் மூலதனத்தையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். பெரிய கப்பல்கள் மற்றும் மற்றும் லாஞ்ச் போன்ற சிறிய படகுகள் மூலமும் வியாபாரம் செய்தார். கப்பல்களில் வரும் ஐரோப்பியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது மொழியை திறம்படக் கற்றுக் கொண்டார்.

ரங்கூன் “Soliya muslim association” இவருக்கு“Honourable Magistrate”என்ற பட்டம் கொடுத்தது.
இவரைப் பாராட்டி “KHAN BAHATHOOR”என்ற பட்டம் வழங்கப்பட்டது
(ஆதாரம்: ”THE RANGOON TIMES” - 1919 - june -03)

இவரது திறமையை மெச்சிய ஆங்கிலேய அரசு தம் அரசவையில் இவரை ஒரு அங்கத்தினராக (Fellow of Royal Society) ஏற்றுக் கொண்டது.

காசிம் பிரதர்ஸ் & கம்பேனி.ஆங்கிலேயர் நட்பைப் பெற்று வணிகம் தொடங்கிய இவர் தனியாகத் தானும் தன்னுடைய சகோதரர் முத்து முகம்மதுவும் சேர்ந்து காசிம் பிரதர்ஸ் & கம்பேனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

இதுவே அவர் பிற்காலத்தில் வணிகம் செய்து பெரும் செல்வந்தர் ஆகவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் நட்பைப் பெறவும், பாரதியாருடன் அறிமுகம் ஆகவும் காரணமாக அமைந்தது.

இரங்கூன் காசிம் பிரதர்ஸ் & கம்பேனியில், இவர் தம் மூத்த மருமகன் N.M. சேக் அப்துல் காதிரையும், இளைய மருமகன் விஜயன் அப்துல் ரஹ்மான் அம்பலத்தையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார்.

இரங்கூன் நகரில் கப்பல் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முகவராகவும் இருந்து வந்தார். அத்துறைமுகத்தில் நிற்கக்கூடிய கப்பல்களுக்கு உணவு மற்றும் நிலக்கரி போன்றவற்றை விநியோகம் செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது.

பிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன் கம்பெனியின் ஏஜென்டான “புல்லக் பிரதர்ஸ்” இவரின் வணிக ஆற்றலை உணர்ந்து இவரைத் தம்முடைய பங்குதாரர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.

அபரித வாணிப வளர்ச்சிகி.பி. 1881ல் இவரது வாணிபம் பெரிதும் வளர்ந்தோங்கியது. இவர் இரண்டு சிறிய கப்பல்களுக்கும் 62 ராட்சஸப் படகுகளுக்கும் அதிபரானார்.

திருச்சி எஹியா மெளலானாவின் நட்பு ஒழுக்கத்தையும் நேர்மையையும் கற்றுத்தர அவற்றுடன் அவரது திறமையும்சேர்ந்து வியாபாரத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தோங்கினார்.

மனைவியர் நால்வர்இவர் பர்மியப் பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்களை மணம் முடித்துக் கொண்டார். அவர்களின் சொந்த ஊர்கள் முறையே 1, ரங்கூன், 2, நத்தம் 3, காரியாபட்டி 4, ஆந்திரா முதலியன ஆகும்.

இவருக்கு இந் நான்கு மனைவியர் மூலம் 9 ஆண் மக்களும் 9 பெண் மக்களும் பிறந்தனர். ஆலிம்களைப் பெரிதும் மதித்த இவர் தம் பெண் மக்களில் ஒருவரை ஆலிம் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார்.

தம்முடைய பூர்வீகத்தலமான இளையான்குடி தொடர்பைப் புதுப்பிக்க விரும்பிய அவர்,

அவருக்கு மச்சான் முறையான நூருத்தீன் மதாறுப்புலவரின் மக்களான ஷேக் அப்துல் காதிருக்கு தம் மகள் ஆமினா பீவியையும், இராவுத்தர் நெய்னாருக்கு தம்முடைய இளவல் துபாஷ் முத்து முகம்மதுவின் மகள் பல்கீஸ் பீவியையும் மணம் முடித்துக் கொடுத்தார்.

நூருத்தீன் மதாறுப் புலவர் குடும்பத்துக்கும் தம் குடும்பத்துக்கும் ஏற்படுத்திய திருமண உறவுகளால் இளையான்குடிக்கும் நத்தம், அபிராமத்துக்கும் இடையே உறவுப் பாலம் ஏற்படுத்திக் கொடுத்தார் துபாஷ் அப்துல் காதிறு. இன்றளவும் ஆலமரம் போல் மண உறவுகளால் இரண்டு குடும்பங்களும் படர்ந்து வளர்ந்து வருகின்றன.

துபாஷ் காதிரின் புகழை அறிந்த மகா கவி பாரதியார் தம் நண்பர் வ.உ.சி. நிறுவனத்தில் துபாஷ் அப்துல் காதிர் பங்கு வாங்க வேண்டுமென வேண்டினார். அதற்கு அவர் “ எனக்குப் பங்கு வாங்க விருப்பமில்லை வேண்டுமென்றால் ஒரு தொகையைக் குறிப்பிடுங்கள், நான் அதைத் தந்து விடுகிறேன் என்றார் பெருந்தன்மையுடன்.


துபாஷ் காதிர் அவர்கள் பர்மாவில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியைக் கொண்டு தம் சொந்த ஊரில் ஒரு அழகிய பள்ளி வாசலைக் கட்டினார்.

பர்மாவில் உள்ள பள்ளி வாசல்களின் கட்டிடக் கலை அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இப்பள்ளி இன்றும் பொலிவோடு திகழ்ந்து வருகிறது. அழகான தோற்றமும், விண்ணை முட்டும் அளவிற்கு மினராக்களையும் இப்பள்ளி வாசல் பெற்று விளங்குகிறது.

சிற்றூரில் இப்படி ஒரு பள்ளி வாசலா! என்று காண்போர் நெஞ்சங்களை வியப்பூட்டி வருகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப் பட்டாலும் இன்றுள்ள கட்டிடக் கலை அம்சங்களுக்குச் சவால் விடும் அளவிற்கு திகழ்ந்து வருகிறது.

துபாஷ் காதர் இப்பள்ளி வாசலைப் பராமரிப்பதற்காக1, keelaparuthiyur 2, serumangulam ஆகிய கிராமங்களை பள்ளிக்காக வக்பு செய்தார்.

இவர் பர்மாவிலிருந்து இந்தியா திரும்பும் போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக பார்த்திபனூர் அருகிலுள்ள சூடியூரில் பிரத்யோகமாக இரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அவர் ஊருக்கு வருகிறார் என்றால் ஊரே விழாக்கோலம் கொண்டு விடும். வழி நெடுகிலும் அவரை மகிழ்வுடன் வரவேற்பர்.

அப்போதைய வெள்ளைக்கார ஆளுநர் ஒருவர் மதுரையில் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு இராமநாதபுரம் ராஜா , சிவகங்கை மன்னர் போன்றோரிடம் நன்கொடை கேட்டார்.

அவரவர் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்தனர். ஆனால் துபாஷ் காதிரோ வெற்றுக் காசோலையை ( Blank cheque ) க் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதைக் கண்ணுற்ற அந்த வெள்ளை ஆளுநர் அனைவர் அளித்த நன்கொடைக்கு மேல் ரூ. 100 எழுதி அந்தச் செக்கை ஏற்றுக் கொண்டதோடு துபாஷ் காதிரின் பெருந்தன்மையையும் பாராட்டினார்.

THANKS TO: ABIRAMAM NATHAM.COM

INFO BY: Mohamed Zulfihar, Ministry Of Health,
Sultanate of Oman. GSM: 968-92272959

-----
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

Thursday, March 8, 2012

படிக்கட்டுகள்... ஏற்றம் - 9

எந்த நம்பருக்கு போட்டீங்க?...


இது இப்போதைக்கு அடிக்கடி மொபைல் ஃபோன் நம்பர் மாற்றுபவர்களின் கேள்வி. இது ஏதொ சின்ன பசங்க கேட்டால் பெரிய விசயமில்லை. ஒரு தொழிலில் இருப்பவர்கள் அடிக்கடி நம்பர் மாற்றுவது ' என்னமோ கள்ள வேலை செய்றான்யா" என உங்களிடம் பேசிவிட்டு 'சிகப்புபொத்தானை" அழுத்துபவர்கள் சொல்வது சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கூட கேட்பது எப்படி உங்கள் காதில் விழாமல் போனது?.
ஏர்செல்லெ இவ்ளதான், ஏர்டெல்லெ 100 SMS  ஃப்ரீயாமே என மாதத்துக்கு ஒரு நம்பர் மாற்றும் யாரும் பணக்காரனாகிவிட்டார்கள் என்று நான் இதுவரை கேள்விப்படவில்லை.  முதலில் இது போன்ற பிஸ்னஸ் டெக்னிக்கில் விட்டில் பூச்சி மாதிரி விழுந்து விட்டுபங்குசந்தைக்கே அட்வைசர் மாதிரி பேசுபவர்களிடம் சொல்ல வேண்டிய வார்த்தை...ஸ்ஸப்பா....முடியலெ!!”.

Wednesday, March 7, 2012

இன்று உலக பெண்கள் தினமா இந்த பெண்கள் தினம்?

பெண்கள் தினம் உருவானது எப்படி?

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பலவகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நன்றி: நக்கீரன் (மார்ச்-2011)

இன்று உலக பெண்கள் தினமா இந்த பெண்கள் தினம்?

பெண்கள் தினம் என்று ஒரு நாளை குறிவைத்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்துவிட்டதாக மேதாவி(?) மேற்கத்தியவாதிகளும், பெண்ணுரிமை பாதுகாவலர்கள் (?) என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் இந்திய அறிவுஜீவிகள்(?) என்று நம்மிடையே நாடகமாடுகிறார்கள் என்பது மட்டுமே நிதர்சனம்.

முழுவதும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்திலும் பெண்களின் இனக்கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் போலி நாகரீக பெண்களை நினைத்து வேதனைப்படுவதா? சிரிப்பதா?

டென்னிஸ் விராங்கனையின் ஆடைக்கு வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் வைத்திருக்கும் நிரந்தரக் காரணம் “ஆடையைப் பார்க்காதே; பெண் விளையாடும் விளையாட்டை பார்” என்பது. பெண்கள் பெண்களாக வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும்.

நான் எப்படியும் இருப்பேன் என்று கலாச்சார சீர்க்கேட்டால் அறைகுறை அடையுடன்  வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே நிற்கிறார்கள். அப்படியே கிடைக்கும் போலி உரிமை தான் கிழவியானாலும் தன் இளம் வயது அறைகுறை ஆடை புகைப்படங்கள் இன்றைய வளர்ச்சியடைந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தன் பேரன் மற்றும் கொள்ளுப்பேரன்மார்களின் காம உணர்ச்சி தூண்டுதலுக்கு அவ்வகை புகைப்படங்கள் காரணமாகி விடப்போவது என்பது தான் பெண்ணுரிமையா?

இன்றைய நிலை, பெண்களை பாலியல் கொடுமை செய்து அதை மொபைல் போனில் படங்கள் எடுத்து ஆயிரக்கணக்கில் இணையத்தில் காணொளியை இலவசமாகவும், காசுக்காவும் வெளியிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் வக்கிரபுத்தி கொண்ட பொறம்போக்கு அநாகரீக மிருகங்கள். இதை பற்றி எழுதவோ, குரல் எழுப்பவோ,  தடுக்கவோ முடியவில்லையே பெண் சுதந்திரம் என்று பேசும் அறிஜீவிகளாலேயே. கூகுல் குதிரை போன்ற தேடல் தளங்களும் தட்டியவுடன் உடனே வாரி வழங்குகிறது.

உலகிலேயே பெண் பாலியல் கொடுமைகளுக்கு பதிக்கப்படும் சமுதாயங்களில் முஸ்லீம் சமுதாயம் மிக மிக மிக குறைவே. ஏதாவது ஒரு நாள் இந்தியாவில் பல பகுதிகளின் பாலியல் கொடுமைகள்  நடைப்பெறவில்லை என்ற செய்தி வந்தால் அது அன்றைய தினத்தின் மிக ஆச்சரியமான செய்தியாகவே இருக்கும். இந்த லட்சனத்தில் பெண்கள் சாதனை பட்டியல் என்று ஒரே ஒரு நாளில் மட்டும் தங்களின் செய்தி ஊடகங்களின் புகழ்பாடி செய்திகள் வெளியிட்டு பெண்களிடம் நாடகமாடி காலாச்சார சீரழிவை தினிக்கிறார்கள் மேற்கத்திய போலி நாகரீக மேதாவிகளின் புரோகிதர்கள் உலகெங்கும் ஏன் அதிகம் நம் நாட்டிலும்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, இஸ்லாம் பெண்ணடிமையை தூண்டுகிறது என்றெல்லாம் இன்று புலம்பி பிழைப்பு நடத்திவரும் மேதாவிகளுக்கு பதில் தரும் விதமாக, உலக புகழ் பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் சகோதரர் காலித் யாஸீன் அவர்கள் ஆற்றிய செற்பொழிவுகளிலிருந்து ஒரு சில பகுதியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். (இந்த காணொளி நம் அதிரைநிருபரில் ஏற்கனவே பதிந்திருந்தாலும், மீண்டும் உங்கள் பார்வைக்கு சூழல் கருதி மீள்பதிவு செய்கிறோம்.)



இச்சொற்பொழிவு ஆங்கிலத்தில் இருந்தாலும், சாதாரன ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கும் புரியும்படி உள்ளது. இறைவனின் மார்க்கமான இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மார்க்கம் என்பதை மேற்கத்திய கலாச்சார மேதாவிகள் புரிந்துக்கொள்ளட்டும்.

போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு, இஸ்லாமிய வாழ்வியலின் வசந்தம், உலக மனிதர்கள் அனைவருக்குமாக அருளப்பட்ட  திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் சிந்தித்து பார்த்தார்கள் என்றால் 1429 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

இஸ்லாத்தினைக் குறை கூற முற்படும் முன்னர் தங்களின் வழிபாட்டு சடங்குகளோ, மதங்களோ பெண்ணுரிமை பற்றி என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒன்றுக்கு பலமுறை முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்திடுவர்.

பிறப்பதில் உள்ள உரிமை, அறிவைப் பெருக்குவதில் உரிமை, கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப், திருணத்தில் உரிமை, திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை, வாரிசு உரிமை என்று எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள ஒரே மார்க்கம் இனிய இஸ்லாமிய மார்க்கம்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "மனிதர்களிலேயே நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?" என்று மூன்று முறை திரும்பத்திரும்ப கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் "உனது தாய்தான்!" என்றும் நான்காவது முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் எனும் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் தங்கள் வீட்டை ஆட்சி செய்து ஒவ்வொரு நாளையும் கொண்டாடி சந்தோசமாக இருந்து வருகிறார்கள். இஸ்லாத்தில் பெண்ணுரிமை பற்றி அறிய வேண்டுமா? நடிகை குஸ்பு, எழுத்தாளர்(?) தஸ்லீமா நஸ்ரின், சல்மான் ருஸ்டி (பல வருடங்களாக இவர்களை பற்றியே பேசுறவய்ங்க, வேற ஆளுங்க இன்னும் கிடைக்கல போல) போன்ற பெயர் தாங்கிகளிடம் இன்னும் ஏன் மாரடிக்கிறீர்கள், எங்கே பெண்ணுரிமை சிறைப்படுத்தப்படுகிறது என்று கை நீட்டுகிறீகளோ அங்கே சென்று இஸ்லாமிய நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து வரும் இஸ்லாமிய பெண்களிடம் கேட்டுப்பாருங்கள் தெளிவான பதிலும் கிடைக்கும் உங்கள் உள்ளத்தை உருக்கும் மார்க்கமும் உள்புகும் உங்கள் இதயங்களிலும் இடம் தேடி இன்ஷா அல்லாஹ்.

(தகவல்கள் சேகரிக்கும்போது உதவிய இஸ்லாம்கல்வி மற்றும் சத்தியமார்க்கம்  என்ற இரண்டு இணையதளங்களுக்கும் மிக்க நன்றி)

- அதிரைநிருபர் குழு.
http://adirainirubar.blogspot.com/2012/03/blog-post_08.html

Monday, March 5, 2012

உழைப்பின் சிறப்பு உள்ளத்தின் மகிழ்வு!

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
 
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)
ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)
உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)
பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி
:
  நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.
சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

Saturday, March 3, 2012

பெண்களுக்கு திரையிடுவது அவசியமா?

தயவு செய்து இந்த ஆய்வை முழுமையாகப் படிக்கவும்.

பெண்களுக்கு திரையிடுவது அவசியமா?

கேள்வி : ஜும்ஆ நடைபெறும் போது பெண்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் பள்ளியில் திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பதில் : முஃமின்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடவேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் நம்முடைய மனோஇச்சைகளைப் புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப் படுவதே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையாகும்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا  (الأحزاب 33 : 36(
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார் 

Thursday, March 1, 2012

இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்.

இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகளை பரப்பப்படுகின்றன,அதே நேரத்தில் நமது சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படும் விதத்தில் செயல் படுகின்றனர். அதிலும் மிகவும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அதனைச் சார்ந்த ஊடகங்கள் இதில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.ஆனால் அவைகளின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்புவதாக இல்லை. இஸ்லாம் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் மக்கள் இதனால் அதிகமாகியே வருகின்றனர். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது. நாம் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் மனதில் இந்த தவறான பொய் பிரசாரங்களை உடைத்தெரிந்து இஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒரு நாட்டம் மேற்கொள்ளவேண்டும்

LinkWithin

Related Posts with Thumbnails