Thursday, October 24, 2013

எது பொறுமை !


( படத்தின் விளக்கம். The message give by the Holy Prophet (Peace BE Upon Him) at the time f Conquering Makkah... He is So humble.....)

சிலர் கடுங் கோபம் வந்தாலோ ,துக்கம் வந்தாலோ நிலை தடுமாறி விடுகின்றனர்.கோபம் கொண்டவர் எதிரியை கடும் சொற்களால் திட்டி பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசிவிட்டு பின் நான் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார் இன்னும் சிலர் கடும் துக்கம் ஏற்பட்டால் கத்தி கதறி அழுது புரண்டு படைத்தவனே உனக்கு பார்வையில்லையா என வசனம் பேசி விட்டு பின் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார்கள்.

ஆனால் உண்மையான சப்று (பொறுமை) என்றால் என்ன?

இதோ அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.;
ஓரு முறை மூதாட்டி ஒருவர் ஒரு கப்ரு அருகே அமர்ந்து அழுது புலம்புவதைக் கண்டு சப்று செய்யுங்கள் என்றார்கள்.சொல்பவர் அண்ணல் நபி என அறியாத அம்மூதாட்டி என் வேதனை உமக்கு வந்தால்தான் தெரியும் என்றார்.நபி பெருமான் (ஸல்)அவர்கள் அமைதியாக திரும்பி விட்டார்கள்.அங்கிருந்தோர் வந்தது நபி என அம்மூதாட்டியிடம் கூற பதறிப்போன மூதாட்டி அண்ணலாரின் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டார்

அப்பொழுது நபி(ஸல்)சொன்னார்கள் :

“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “
துன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)

ஸப்ரு என்ற அரபு வார்த்தைக்கு மனதை அடக்குவது ,கட்டுபடுத்துவது
என்பது பொருள் நோன்பிற்கும் ஸப்ரு என்று பெயர்.
அல்லாஹ் நமக்கு பொருமையைத் தந்தருள்வானக! ஆமீன்

தகவல் தந்தவர்
Moulavi Kaniyur Ismail Najee



-----------------------------------

 (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails