ஜிஹாத் என்றவுடன் அல்லாவை நிராகரிப்ப்பவர்களை எதிர்த்து போர் புரிவது என்று பெரும்பாலான மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.
ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும்.
மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல்
அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல்
இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல்
இதேபோல் எல்லா வகையான தீமைகளையும் எதிர்த்து மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும்தான் ஜிஹாத் எனப்படும்.
மனத்தின் தீய எண்ணங்களை எதிர்ப்பது மட்டும் அல்ல மனதை நல்வழியில் ஈடுபடுத்தும் விடா முயற்சியும் ஜிகாத் ஆகும்.
இறைமார்க்கத்தைக் கற்கும் வழியில் மனத்தைப் பக்குவப்படுத்துவது, இஸ்லாத்தின் கடமைகளைச் செய்வது, இறை நெறியின்பால் அழைக்கும் பணியில் மனத்தைப் பொறுமையுடன் ஈடுபடுத்துவது, அவ்வழியில் நேரிடும் கஷ்டங்களைவும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுமாறு மனதைப் பழக்குவது ஆகிய அனைத்தும் ஜிஹாத் ஆகும்.
http://anbudanislam2012.blogspot.in/
No comments:
Post a Comment