முன்பெல்லாம் பரிசளிக்கும் சூழல் வரும்போதெல்லாம் ஆயிரத் தெட்டு குழப்பங்கள் நிலவும். கடிகாரம் வாங்கி கொடுப்போமா, பூ ஜாடி வாங்கி கொடுப்போமா என்றெல்லாம் விழி பிதுங்கும்வரை மனதோடு பட்டிமன்றம் நிகழ்த்தியதுண்டு. புத்தகங்களோடு நட்புறவு பலமான பின், எந்த விசேஷ தருணமென்றாலும் பரிசுக்கு முதலும் இறுதியுமான முடிவு 'புத்தகம் தான் டாட்' என்ற நிலைக்கு மாறியது.
இதிலும் ஓர் குறை இருந்துவந்தது. இந்திய முஸ்லிம்கள் குறித்து திரிக்கப்பட்ட வரலாறுகளையே படித்து பதிந்து பழக்கப்பட்ட மனம் கொண்டோர்க்கு, அதை தகர்த்தெறியாவிடினும், ஓரளவுக்கேனும் உண்மையை புரிந்துகொள்ள ஏதுவான வரலாற்று புத்தகங்களை பரிசளிக்கவோ பரிந்துரைக்கவோ நிறைவான புத்தகம் + நம்பகமான புத்தகம் பரிசளிப்பதற்காக, தேடுவதில் அதிகமே மெனக்கெட்டதுண்டு. "ஏன் இஸ்லாமியர்கள் வரலாற்றுப் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை என்ற நெடுங்கால குறையை செ.திவான் தீர்த்து வைத்ததில் ஓரளவு திருப்தியிருந்தது. இதோ அதே வரிசையில் அதிரைநிருபர் தளத்தில் தொடராக வெளிவந்து சென்னை சாஜித புக் செண்டர் பதிப்பகத்தாரின் வெளியீடாக என் கைக்கு வந்து சேர்ந்தது அந்த பொக்கிஷம் "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு".
Saturday, February 27, 2016
‘ஸல்’ என்பதன் பொருள்
பெற்ற தாய், தந்தையை விட வும், இன்னும் சொல்லப் போனால் தன் உயிரினும் மேலாகவும் முஸ்லிம்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள்கூட ஏதாவது அவரிடம் கூற வேண்டுமென்றால், ‘என் தாயும், தந்தையும் உங்களுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்’ என்று சொல்லி தொடங்குகிற வழக்கம் இருந்தது.
இதனால்தான் அவர்கள் பெயரை எழுதும்போதும், சொல்லும்போதும் ‘ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்’ (இறைவனின் கருணையும், சாந்தியும் அவர்களுக்கு உண்டாவதாக) என்று எழுதுவதும், சொல்லுவதும் வழக்கம். இதைச் சுருக்கமாக ‘ஸல்’ என்று குறிப்பிடுவார்கள். இது நபிகளாருக்காக இறைவனிடம் மக்கள் செய்யும் பிரார்த்தனை ஆகும். இது ‘ஸலவாத்’ எனப்படும். எனவே நபிகளாரின் பெயர் வரும்போதெல்லாம் சுருக்கமாக ‘ஸல்’ என்பது அடைப்புக் குறிக்குள் குறிப்பிடப்படுகிறது.

விமர்சனங்களை வென்றவர்
கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.
சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
Wednesday, February 24, 2016
ஞானப் பயணம் - 03
WRITTEN BY நூருத்தீன்.
போய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் அது. தேட வேண்டும். ஆங்காங்கே பரவியிருந்த தாபியீன்கள், அறிஞர்கள் ஆகியோரை
முதலில் இனங்காண வேண்டும். அப்படியானவர்கள் வாயிலாகத்தான் கல்வியில் ஞானம் பெற முடியும். அடிப்படையிலிருந்து தொடங்கி தெளிவான கல்வியைக் கற்க முடியும். கல்வி, ஞானம் என்ற பெயரில் மற்றவர்களிடம் நிறைந்திருந்தவை வாதங்களும் மெய்ஞானத்திற்கு எதிரான முரண்களும்தான் என்பதை உணர்ந்தார் அபூஹனீஃபா (ரஹ்).

Saturday, February 20, 2016
என்ன நடக்குமோ என்ற மனநிலையில் தான் ..வெளிநாட்டு வாழ்க்கை
Saif Saif
உகாண்டா தேர்தலோடு பலரது மன நிலைகளும் பலவிதத்திலும் அறியத் தக்கதாகி விட்டது...
மறுமை நாளில் "யா நப்சு
யா நப்சு " என்று ஒவ்வொருவரும் சொல்லும் வேளையைப் போல் பலரும் அவரவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் பாங்கை பார்க்க நேர்ந்தது..
நான் இருக்கும் இடத்தைப் பொறுத்தவரை பலரும் 15 ந் தேதியே இந்தியா நோக்கி பறந்து விட்டார்கள்..
என்னுடன் இருந்த ஒரு இஸ்மாயிலி கம்பாலா போகிறேன் என்று சொல்லி துபாய் போய் விட்டார்..
தெரிந்தவர்கள் அவர் அவருக்கு தெரிந்தவர்களை அழைத்து அருகில் வைத்து கொண்டனர்..
என்னையும் அழைத்த அன்பு உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

Tuesday, February 9, 2016
மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய வாழ்க்கைச் சரிதத்தோடு ஒட்டித் திருக்குர்ஆனில் புதைந்துள்ள பல கருத்துக்களையும் அக்கருத்துகளின் விளக்கம் போன்ற சரிதங்களையும் தமது நூலான "தித்திக்கும் திருமறை"யை இப் பாருலகுக்கு அளித்தவர் தான் மெளலானா அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ,பி.டி.ஹெச். அவர்கள்.
கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை விடத் தூய்மையானது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
கல்வியின் பெருமையை ஓர் அறிஞனின் பேனாவில் உள்ள துளி மை, வீரமரணம் எய்தியவனுடைய இரத்தத்தை விடத் தூய்மையானது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
உணர்வுகளற்றவர்கள் ....
J Banu Haroon
காசை கண்டபின் நேசம் காட்டும் உறவெல்லாம் ...
கடைந்தெடுத்த கள்வர்களிலும் கள்வர்கள் தான் !...
பிட்டுப்போட்ட மனக்கண்ணாடித் துகள்களை ...
மறுபடியும் விரிசலின்றி எப்படித்தான் ஒட்டிவிட ?...
எத்தனை முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் ?...
கவனத்துடன் காத்திருந்த கையறுநிலை ..அவலங்கள் ....

Monday, February 8, 2016
எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா !!
எத்தனைக்கோடி இன்பம்
இத்தரணியில் வைத்தவன் !
அத்தனையும் அனுபவிக்க
ஆன்மாவைத் தந்தவன் !
பூவுக்குள் தேனை
புகுத்தியே வைத்தவன் !
சாவுக்கு நேரத்தை
சரிபார்த்து வைத்தவன் !
பாலையும் குருதியும்
பசுவுக்குள் பிரித்தவன் !
பால்வீதி கோள்களை
பாதையில் வகுத்தவன் !
கருணை செய்வாய் யா அல்லாஹ்!
பழுதுப்பட்ட என் உள்ளத்தை
பக்குவப்படுத்து யா அல்லாஹ்;
அழுதுக்கொண்டு கேட்கிறேன்
அரவணைப்பாய் யா அல்லாஹ்;
உனையன்றி உதவி செய்ய
ஒருவருமில்லை யா அல்லாஹ்;
என் பலவீனத்தை முறையிட
உன்னிடமே கரைகிறேன் யா அல்லாஹ்;
பக்குவப்படுத்து யா அல்லாஹ்;
அழுதுக்கொண்டு கேட்கிறேன்
அரவணைப்பாய் யா அல்லாஹ்;
உனையன்றி உதவி செய்ய
ஒருவருமில்லை யா அல்லாஹ்;
என் பலவீனத்தை முறையிட
உன்னிடமே கரைகிறேன் யா அல்லாஹ்;
Subscribe to:
Posts (Atom)