Tuesday, February 9, 2016

உணர்வுகளற்றவர்கள் ....

 J Banu Haroon
காசை கண்டபின் நேசம் காட்டும் உறவெல்லாம் ...
கடைந்தெடுத்த கள்வர்களிலும் கள்வர்கள் தான் !...

பிட்டுப்போட்ட மனக்கண்ணாடித் துகள்களை ...
மறுபடியும் விரிசலின்றி எப்படித்தான் ஒட்டிவிட ?...

எத்தனை முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் ?...
கவனத்துடன் காத்திருந்த கையறுநிலை ..அவலங்கள் ....


காலால் உதைத்துவிட்ட மனவலிகள் ..தந்த வேதனைகள் ...
கடமைகளை தொலைத்து கப்பலேற்றிவிட்ட தரவுகள் ...

சுகப்பிரசவமாய் சொல்லாடல்கள் ...வில்லாடல்கள் ...
கற்பனை கதைகளாய் .. கன்னிப்பேச்சுகள்... கழிவுகள் ...

கலப்பில்லா சாடல்கள் ..கசையடிகள் ...கல்லடிகள் ..
தண்டனைகள்.. .தாக்குதல்கள் ..தரப்பிரழ்வுகள் ....

பெண்ணாக்கின் மலட்டுச் சொல்லாடல்கள் ..வசைபாடுகள் ..
புண்ணாக்கின் ...புனைவுகள் ..புறம்போக்குத்தனங்கள் ...

இதுவெல்லாம் தகுமா ?...
இறைபொருத்தம் பெறுமா ?...

மரணத்தறுவாயிலும் கலிமாவுக்கு நாக்குதவ ...
மன்னிக்க தக்கவனே மனிதர்களை காப்பாற்று ...!

..J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails