உகாண்டா தேர்தலோடு பலரது மன நிலைகளும் பலவிதத்திலும் அறியத் தக்கதாகி விட்டது...
மறுமை நாளில் "யா நப்சு
யா நப்சு " என்று ஒவ்வொருவரும் சொல்லும் வேளையைப் போல் பலரும் அவரவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் பாங்கை பார்க்க நேர்ந்தது..
நான் இருக்கும் இடத்தைப் பொறுத்தவரை பலரும் 15 ந் தேதியே இந்தியா நோக்கி பறந்து விட்டார்கள்..
என்னுடன் இருந்த ஒரு இஸ்மாயிலி கம்பாலா போகிறேன் என்று சொல்லி துபாய் போய் விட்டார்..
தெரிந்தவர்கள் அவர் அவருக்கு தெரிந்தவர்களை அழைத்து அருகில் வைத்து கொண்டனர்..
என்னையும் அழைத்த அன்பு உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
ஐடியா சொன்னவர்கள் பாஸ்போர்ட் வைத்துக் கொள்ளுங்கள்,ஏர் டைம் போட்டுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஐடியா கொடுத்தார்கள்..ஆனால் யாருக்குமே என்னச் செய்வதென்று தெரியாத நிலை தான்..
பத்து பேர் நம்மூர் ஆட்கள் இருந்தால் நாமும் இங்கு இருக்கலாம்..என்ற மனநிலையில் பலர் இருந்தனர்..
ஒருவரை பார்த்து ஒருவர் சமாதானம் கொள்ளலாம் என்ற நிலை தான்...
பயந்து போன பலர் ஊருக்கு டிக்கட் போட்டு பறந்து விட்டார்கள்..
ஆப்பிரிக்கர்களின் வெறுப்பான பேச்சுக்களும் பலரின் பயத்தை அதிகரிக்க வைத்திருந்தது..
இப்போது முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்து மீண்டும் முசோலினி அவர்களே ஜனாதிபதியாக பதவியேற்றதில்
எல்லோரும் சமாதானமாக இருக்கிறார்கள்..
நேற்று முன்தினம் வரை என்ன நடக்குமோ என்ற மனநிலையில் தான் பலர் இருந்தனர்..
மக்கள் அனைவரையும் பெரிய ஆபத்திலிருந்து பாதுகாத்து அருள் புரிந்த வல்ல நாயனுக்கே எல்லா புகழும்...
No comments:
Post a Comment