Tuesday, March 8, 2011

இசைமுரசை இசை மூலம் அதனைச் செய்ய வைத்திருக்கிறான்

  சுமார் 15 ஆன்டுகளுக்கு முன் ஈரோடு என் வாசகி சகோதரி மும்தாஜ் பஷீரின் மகன் திருமணத்துக்கு வாழ்த்துரை வழங்க குடும்பத்துடன் சென்றிருந்தேன். அத்திருமணத்தில் கச்சேரி நிகழ்த்த அண்ணன் இசைமுரசு அவர்கள் வந்திருந்தார்கள். இருவரும் ஒரே லாட்ஜில் தங்கியிருந்தோம். அண்ணன் மாடிப்படியில் சற்றே ச்றுக்கி விழ, காலில் நல்ல அடி பட்டு வீங்கிவிட்டது. மும்தாஜின் கணவர் பஷீர் பதறிப்போனார். என்னிடம் இருந்த வலி மருந்துகளைக் கொடுத்தேன். கச்சேரி கூடத் தேவையில்லை. நீங்கள் மணமக்களை வாத்திவிட்டுச் செல்லலாம் என்றார். ஒப்புக் கொள்வது போல மேடைக்கு வந்த அண்ணன், வாத்துரை வழங்கினார். உடல் சுகவீனம் காரணமாக ஓரிரு பாடல்கள் மட்டும் பாடுவதாகச் சொல்லி விட்டு கச்சேரியை ஆரம்பித்தார்… பாடினார் பாடினார்… பாடிக்கொண்டே இருந்தார். வழக்கம் போல் கச்சேரி முடிக்கும் நேரம் வரை பாடிமுடித்துவிட்டுத்தான் விடைபெற்றார்… மறக்க முடியாத நிகழ்ச்சி. இசைமுரசு போன்றவர்கள் எப்போதாவது அல்லாஹ் சமுதாயத்துக்கு அளிக்கும் அன்பளிப்பு. அவரைப் போன்றவர்களை பிறருடன் ஒப்பிடுவது சரியல்ல.
மார்க்கத்தை- வரலாற்றை மக்களுக்குக் கொண்டுசெல்வதில் பல வழிகள் உள்ளன. அல்லாஹ் இசைமுரசை இசை மூலம் அதனைச் செய்ய வைத்திருக்கிறான்.அதனை அவர் மிக நிறைவாகச் செய்துகொண்டிருக்கிறார்.
குறைசொல்லுபவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்…. இயங்குபவர்கள் இயங்கிக் கொண்டே இருப்பார்கள்.
ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்கும் தொழிலை நகர்ப்புரத்தில் செய்யாமல் சொந்தக் கிராமத்தில் செய்கிறான் என்றார்கள்… சனி ஞாயிறுகளில் கூட்டத்தில் பேசுவதற்காக ஆஸ்பத்திரியை விட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றித் திரிகிறான் என்றார்கள்.
நான் எனக்குச் சரியென்று பட்டதைச் செய்தேன் … செய்துகொண்டிருக்கிறேன்.
ஒரு முஸ்லிம் தனக்காக மட்டும் வாழ உரிமை இல்லை… சமுதாயத்துக்காக வெளியே   வந்து மெனக்கட வேண்டிய அவசியம் இருக்கிறது…. அதன் பயனை செயல்படும்போதுதான் புரிந்துகொள்ள முடியும்… நம் செயல்பாடுகள் சரியான வழியில் செல்லும்போது இத்தகைய இடையூறுகலைப் பொருட்படுத்தக் கூடாது…
இசைமுரசு அண்ணன் சமுதாயத்துக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.
அல்லாஹ் அவர்களுக்கு எல்லா சிறப்புக்களையும் அளித்து அரவணைத்திருக்கிறான்.

டாக்டர் ஹிமானா சையத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails