திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிகமாக கோரிய மூன்று தொகுதிகளைத் திமுக கூட்டணியிலுள்ள திமுக, பாமக மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை கட்சிக்கொரு தொகுதியாக பகிர்ந்தளிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி மு க - காங்கிரஸ் கூட்டணியின் பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாக இன்று டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் பிற்பகல் தொடங்கியது.
இதில் தி.மு.க. சார்பாக மு.க. அழகிரி மற்றும் தயாநிதிமாறனும் காங்கிரஸ் சார்பாக பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல் மற்றும் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகவும், காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஆலோசனைக்குப்பிறகு டெல்லியில் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு,அக்கட்சி கோரியபடி தான் நிர்ணயித்த தொகுதிகளை விட மூன்று தொகுதிகள் அதிகமாக தி.மு.க.ஒதுக்கியுள்ளது.
காங்கிரசுக்கு,அக்கட்சி கோரியபடி தான் நிர்ணயித்த தொகுதிகளை விட மூன்று தொகுதிகள் அதிகமாக தி.மு.க.ஒதுக்கியுள்ளது.
அதிகமான மூன்று தொகுதிகள் பாமக விடமிருந்து பெற்றுத் தரப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில், அதற்கு பாமக எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், கூட்டணி கட்சியினரிடையே நடந்த பேச்சு வார்த்தையினைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (1), முஸ்லீம் லீக் (1) தொகுதிகளை விட்டுத்தர விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : http://www.inneram.com/2011030814188/dmk-pmk-and-muslim-leegue-will-share-for-congress
No comments:
Post a Comment