சவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை!
ஆளும் வர்க்கத்திற்கெதிரான மக்கள் கிளர்ச்சி அரபுநாடுகளில் ஆங்காங்கே தொடர்ந்துவரும் நிலையில், அடுத்துள்ள ஏமனிலும், பஹ்ரைனிலும் நடப்பதன் பக்க விளைவுகள் பெரிய அரபு நாடான சவூதியிலும் ஒருசில பகுதிகளில் மிகக் குறைவான அளவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உணரப்பட்டன.
இந்நிலையில், சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மண்ணின் மைந்தர்களிடம் தொலைகாட்சி வழியே பிரத்யேக உரையொன்றை நிகழ்த்தினார். இறைவனுக்கு அடுத்தபடியாக, அரபு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தன் குடிமக்களுக்கு மனமுவந்து நன்றி தெரிவித்த சவூதி மன்னர், தான் மனம்திறந்து உரையாடுவதாக அப்போது கூறினார். மக்களே தன் கவுரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதில், குடிமக்களுக்கான அநேக சலுகைகளை அள்ளி இரைத்துள்ளார்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மழைப் பொழிந்ததைப் போன்ற அந்த சலுகைகள் விவரம்:
ஆயினும், கடந்த 11m தேதி கூடிய சிறு அளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்ச் 20 அன்றும் தங்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததையொட்டி தலைநகரில் காவல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- -நமது சவூதி செய்தியாளர்
Source : http://www.inneram.com/2011032014698/saudi-sweet-rain-of-concessions

- சவூதி அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மாதம் மூவாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
- சவூதி அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் உடனடி போனஸ்
- வேலையில்லாதவர்களுக்கான உதவித் தொகை மாதம் இரண்டாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
- இராணுவம், பாதுகாப்புத் துறைகள் 60 ,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .
- 500 ,000 புதிய குடியிருப்புகள் கட்ட 250 பில்லியன் சவூதி ரியால்கள் ஒதுக்கீடு.
- வீட்டுக்கடன் சவூதி ரியால்கள் 300 ,000 லிருந்து 500 , 000 ஆக உயர்வு.
- சொந்த குடிமக்கள் வேலைவாய்ப்புறுதியை (சவூதிசேஷன்) விரைந்து நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.
- பல்வேறு பெரு நகரங்களிலும் சிறப்பு மருத்துவ நகரங்கள் அமைக்கப்படும்.
- மன்னருடைய நேரடி கண்காணிப்பில் ஊழல் தடுப்புப் பிரிவு அமைக்கப்படும்.
ஆயினும், கடந்த 11m தேதி கூடிய சிறு அளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்ச் 20 அன்றும் தங்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததையொட்டி தலைநகரில் காவல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- -நமது சவூதி செய்தியாளர்
Source : http://www.inneram.com/2011032014698/saudi-sweet-rain-of-concessions
1 comment:
நல்லவிடயம்தான் வரவேற்கத்தக்க விடயம்
முக்கிய விடயம் என்னவெனில் சவுதி அரேபியாவைப்பொறுத்தவரையில் எந்த வித அசம்பாவிதங்களும் இடம்பெறாது இறைவன் காக்க வேண்டும் காரணம் இஸ்லாத்திற்கு முன்மாதிரியான நாடாக தற்போது விளங்குகிறது அங்கும் பிரச்சினை என்றால் இஸ்லாத்திற்கே பங்கம் ஏற்படும் மாற்றுமதத்வர்கள் எழுந்தவாறாக உரைத்திட வழியாகிடும்
இறைவன் காத்திட பிரார்த்திப்போம்
பகிர்வுக்கு நன்றி
Post a Comment