Monday, October 7, 2013

எல்லா முஸ்லிம் அமைப்பும் எப்படியாவது ஒன்றிணைய வேண்டும்!


இந்தியாவில் 534 தொகுதிகளில் 105 தொகுதிகளில் வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களால் நிச்சயிக்கப் படுகிறது ... - இந்தியா டுடே ...
 அதில் 8தொகுதி தமிழ் நாட்டில் உள்ளது .

நம் சமுதாய தலைவர்கள் தொண்டர்கள் இதனை உணர்ந்திருக்கிரார்களா ?...இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்? சிந்தித்தோமா ?
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால் தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்?
நம்முடைய உரிமையை சட்டசபையில் எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால் அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில் எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. ஆட்சி கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.
இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். அல்லது நமக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்; இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும் கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.
இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களும், கோரிக்கைப் பேரணிகளும் பொன்னான நம் நேரத்தை வீணடிக்கும் செயல்களாகும். நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்;டப்படுவர் என்பது நிச்சயம்.
பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும்
------------------------------------------------------------------
நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன? இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த விதத்திpல் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான்.
1. அறிவு
2. ஆயுதம்
ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். தமக்காக சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால் ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர் மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம் ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
ஆயதம் ஏந்தி போராடிய அல்லது போராடிக் கொண்டிருக்கிற மற்ற அமைப்புகள் எல்லாம் மறைந்து கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு. உதாரணத்திற்கு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழு பல்வேறு பிரிவுகளாக பிளவுண்டு போயின. தவிர டீழுனுயுடுயுNனுஇ நாகலாந்து, ருடுகுயு போன்ற பல அமைப்புகள் இருந்த அடையாளமே தெரியாமல் மறைந்து போயின. ஆயுதம் ஏந்தி போராடிய போராட்டக் குழுக்களின் நிலை இது. ஆயுதம் ஏந்திய காஷ்மீர் போராட்டக்குழுக்களை இல்லாமல் ஆக்கியதுபோல் முஸ்லிம்களாகிய நம்மையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் மதவாத கட்சிகள் முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுகின்றன.
அறிவு என்னும் ஆயுதம் ஏந்துவது சரியான தீர்வு

-------------------------------------------------------------------
இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பது. நமது அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் இன்ஷா அல்லாஹ்இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.
Source : http://sfrfaizur.blogspot.in

2 comments:

Haji.S. Mohamed said...

Valuable theam ! We should implement !
How ? This is a million doller question.

faizeejamali said...

அல்ஹம்துல்ல்லாஹ் ஆக்கபோர்வமான கட்டுரை ஒர்ருமை அவசியம் அது ஃபர்ழுல் அய்ன
அதர்க்காக யூத க்ரித்துவ திமோகிரசிய்தான் தீர்வு என்பது ஜாஹிலிய்யத் ஆகும் தேசியவாதமே ஜாஹிலிய்யத் தானெ

LinkWithin

Related Posts with Thumbnails