Saturday, December 13, 2014

எது வளர்ச்சி ... !


பாலினத்தின் தன்மைக்கு
உகந்த பொறுப்புகளில்

சீர்பெற்று வலிமைபெற்று
வளமாவதே பரிபூரண வளர்ச்சி ... !

பெண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஆண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஒன்றை ஒன்று மீறுவதல்ல வளர்ச்சி
ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதே வளர்ச்சி
*
(நபியே!)

உங்களது இறைவன்
மலக்குகளை நோக்கி

"நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை
(ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்"

எனக் கூறிய சமயத்தில்
(அதற்கு) அவர்கள்

"(பூமியில்) விஷமம் செய்து
இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்)

அவரை அதில்
(உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா?

நாங்களோ உன்னுடைய
பரிசுத்தத் தன்மையைக் கூறி

உன்னுடைய புகழைக் கொண்டு
உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்"

என்று கூறினார்கள்.
அதற்கவன்

"நீங்கள் அறியாதவற்றை எல்லாம்
நிச்சயமாக நான் நன்கறிவேன்"
எனக் கூறிவிட்டான்.

பின்பு (ஆதமைப் படைத்து)
ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும்
(அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து,

அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி

"(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி
ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே!

இதில்) நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால்

(இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை
எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.

(அவ்வாறு அறிவிக்க முடியாமல்)
அவர்கள் (இறைவனை நோக்கி)

"நீ மிகத் தூய்மையானவன்.
நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர
(வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம்.

நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும்,
ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்"
எனக் கூறினார்கள்.

(பின்னர் இறைவன்) "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை
அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.

அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை
அறிவித்தபொழுது அவன் (மலக்குகளை நோக்கி)

"பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு)
மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று

நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே,
நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும்,

மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக
நான் (நன்கு) அறிவேன்" என்றான்.

பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி)
"ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்"
எனக் கூறியபோது

இப்லீஸைத் தவிர (அனைவரும்)
ஸுஜூது செய்தார்கள்.

அவனோ பெருமை கொண்டு விலகி
(நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.

பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக
அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி)

"ஆதமே!

நீங்கள் உங்களுடைய மனைவியுடன்
இச்சோலையில் வசித்திருங்கள்.

நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில்
(விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள்.

ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள்.
அணுகினால் நீங்கள் இருவரும்

(உங்களுக்குத்) தீங்கிழைத்துக்
கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம்.

எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும்
(தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்)

தவறிழைக்கும்படிச் செய்து
அச்சோலையை விட்டும்,

அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும்
அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான்.

ஆகவே (அவர்களை நோக்கி)

"உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர்.
(இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள்.

உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு.
அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்"
என நாம் கூறினோம்.

பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத்
தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார்.

(அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர்
பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.)

அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான்.
நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும்
அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

(பின்னர்) நாம் கூறினோம்:

"நீங்கள் அனைவரும்
இதில் இருந்து இறங்கிவிடுங்கள்.

என்னிடமிருந்து உங்களுக்கு
(என்னுடைய தூதர்கள் மூலம்)
நேர்வழி நிச்சயமாக வரும்.

(உங்களில்) எவர்கள் என்னுடைய
அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ

அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை;
அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

(அன்றி) எவர்கள் (என்னுடைய நேர்வழியை)
நிராகரித்து என்னுடைய வசனங்களைப்

பொய்யாக்குகின்றார்களோ
அவர்கள் நரகவாசிகளே!

அவர்கள் அதில்
என்றென்றும் தங்கிவிடுவார்கள்."

திருக்குர்ஆன் 2:30-39

--------------------------------------------------------
மதிப்பிற்குரியவர்களே ... !
ஊன்றி கவனித்து சிந்தியுங்கள் ... !
---------------------------------------------------------

"எங்கள் இறைவனே!

எங்களுக்கு நீ இம்மையிலும்
நன்மை அளிப்பாயாக!

மறுமையிலும்
நன்மையளிப்பாயாக!

(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும்
எங்களை நீ பாதுகாப்பாயாக!"

திருக்குர்ஆன் 2:201
*******************************
அ.மு.அன்வர் சதாத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails