இரண்டு சாட்சிகள் - அவசியம்
அவ்வளவுதான் திருமணம் முடிந்தது
இதுதான் இஸ்லாமிய திருமணம்
மொழி எந்த மொழியாகவும் இருக்கலாம்
மொழி- மணமகன் மணமகள் ,சாட்சிகள் அறிந்தவையாக இருந்தால்தானே ஒப்புதலும் சாட்சிகளும் கொடுக்க முடியும்.
ஊர் முறைபடி தற்காலங்களில் மணமகன் மணமகள் ஒப்புதலுக்கு அடையாளமாக அவர்களது கையெழுத்தும் சாட்சிகள் கையெழுத்துகளும் வாங்கிக் கொள்கின்றார்கள்
இது ஒப்பந்த பத்திரமாக பாதுகாக்கப் படும்
நபி (ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்தியது (துவா)
நபி வழியில் திருமண வாழ்த்து.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி). நூல் : அஹ்மத், அபூதாவுத்.
மணமக்களை வாழ்துவது
நபிமார்கள் வாழ்ந்தபடி வாழுங்கள் என்று அரபியில் யாரோ எழுதிவைத்ததை மனனம் செய்து வாழ்த்துவதும் வழக்கமாக இருந்து வருகின்றது .ஆனால் அதனை இப்பொழுது தமிழில் அதனை மொழிபெயர்த்தும் மார்க்க அறிஞர்கள் சொல்லத் தொடக்கி விட்டது பாராட்டுக்குரியது.
மற்றும் பலர் இனிய தமிழில் வாழ்த்துவதும் நடைமுறையில் உள்ளது
No comments:
Post a Comment