வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை 1992 டிசம்பர் 6ம் நாள் இடித்தார்கள்.
அப்போதே சங் பரிவாரக் கும்பல்...." இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து பள்ளியும் தர்காவும் கட்டி இருக்கிறார்கள். அவற்றையும் இடித்து கோயில் கட்டுவோம் " என்று சொன்னார்கள்.
இப்போது தாஜ்மகாலை கோயில் என்று சொல்ல அரம்பித்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முஸ்லிம் அறிஞர்கள்
பத்திரிகையாளர்கள்
மாற்று மத சமூக ஆர்வலர்கள்
ஒரு விஷயம் குறித்து வெகுவாக ஆதங்கப்பட்டார்கள். அது...
முஸ்லிம்களிடமும் அவர்களின் ஜமாத்துகளிடமும் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை உரியமுறையில் ஆவணப்படுத்த் தவறியதால் அந்த சொத்துக்களை யார்யாரெல்லாமோ அனுபவிக்கிறார்கள்.
வக்ப் வாரியமும் அவற்றை சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்று சொன்னார்கள்.
இந்திய முஸ்லிம்களின் வரலாறையோ தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகளையோ இன்னும் முழுமையாக யாரும் ஆவணப்படுத்தவில்லை என்ற குறையும் இருந்தது.
அப்போதுதான் தமிழ் முஸ்லிம்களின் அரலாறுகளை ஆய்ந்து பார்க்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
ரிபாயி சாஹிப் அவர்கள்
எஸ்.எ.கமால் அவர்கள்
எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்கள் போன்ற ஒரு சிலரே கொஞ்சம் வரலாறுகளை செதுக்கிவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.
வருஷங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
சங்க பரிவாரங்களின் மிரட்டலுக்கு பயந்து சில பழமையான பள்ளிவாசல்களின் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க சித்திரங்களைக்கூட அவசர அவசரமாக அழித்தார்கள். அதையெல்லாம்
பார்த்து மனம் சங்கடப்பட்டது.
நிறைய ஜமாத்துகளுக்கு அவர்களின் ஊர் வரலாறே தெரியாமலிருந்தது.
தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை.
அப்போதுதான் குமரிமாவட்ட முஸ்லிம்களின் வரலாறை தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
அதற்கான முயற்சிசலில் இறங்கினேன்.
என் தம்பி சைபுல்லாஹ் மிகுந்த உற்சாகத்தோடு எனக்கு உறுதுணையாக இருந்தான்.
அப்படி ஒரு முயற்சியில் இறங்கும்போது தனியாளாக செயல்படுவதைவிட ஒரு அமைப்பு பின்னணியோடு செயல்பட்டால் நல்லது என்று நான் கருதியதால் எங்கள் கோட்டாறு பள்ளித்தெரு ரஹ்மானிய்யாச் சங்கத்தின் உதவியை நாடினேன்.
அவர்களும் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு தீர விசாரித்து ஏராளமான அபிப்பிராயங்களை அலசி ஆராய்ந்து ரஹ்மானிய்யாச் சங்க பெயரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தார்கள் .
அதன்பிறகு நான் எழுத்துப் பணியை ஆரம்பித்தேன்.
அதில் நான் எதிர்கொண்ட பிரச்சினைகள் , சிரமங்கள் , மனித வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
வார்த்தைகளால் என்னை வதைத்தவர்கள்
காழ்ப்புணர்வோடு கரித்தவர்கள்
வக்கணையோடு சொற்சிலம்பமாடியவர்கள்
முயற்சி வெற்றிபெறக்கூடாதென்று
நேமிசம் வைத்தவர்கள் ...
அப்பப்பா....
அந்த அனுபவங்களைச் சொல்கிறேன்...
இன்ஷா அல்லாஹ் ! தொடரும் ...Abu Haashima
Abu Haashima
பிரபலங்கள் வரிசையில் கவிஞர் அபூ ஹாஷிமா வாவர்
No comments:
Post a Comment