எங்கள் கண்மணி நாயகம் நபிகள் ( ஸல் ) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் !
பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !
அன்புக்கணவர் அலீ ( ரலி ) , பிள்ளைகள் ஹசன் ஹுசைனோடு இனிய வாழ்வு வாழ்ந்த பிராட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய இயலவில்லை.
காரணம்...
உடலில் வலுவில்லை !
அப்போது ஒரு போரை முடித்து வந்த பெருமானார் ( ஸல் ) அவர்கள், போரில் கிடைத்த பொருட்களையும் அடிமைகளையும் உரியவர்களுக்கு பங்கு வைத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
செய்தி அறிந்த ஃபாத்திமா நயகியார் தந்தையிடம் வந்து , தயங்கித் தயங்கி ...வீட்டு வேலை செய்ய முடியாத தனக்கும் ஒரு பணிப்பெண்ணைத் தரும்படி வேண்டி நின்றார்கள்.
கருணை நபிகள் கனிந்த முகத்தோடு மகளைக் கண்டு...
" என் கண்மணி மகளே... உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனாலும் ணீ இதற்கு ஆசைப்பட வேண்டாம். இருப்பதைக் கொண்டு பொறுமையாய் இரு. இறைவன் உனக்கு எல்லா பாக்கியங்களையும் மறுமையில் தருவான் " என்றார்கள் .
தந்தை சொல்லுக்கு மறு சொல் சொல்லாத ஒரு மகள் உலகில் உண்டென்றால் அது எங்கள் உயிருக்கு உயிரான பாத்திமா நாயகியார்தான்.
வாப்பா சொல்லை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுதும் ஏழையாகவே வாழ்ந்தார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் மகத்தான நற்பாக்கியங்களை வாரி வாரி வழங்குவானாக...ஆமீன்.
அருமை மகளுக்கு வீரர் அலியாரை மணமுடித்து கொடுத்தபோது ,எங்கள் மஹ்மூது நபிகள் மகளுக்கு சீதனமாக என்ன கொடுத்தார்கள் தெரியுமா ?
மூங்கில் கட்டிலொன்று
தோல் விரிப்பு ஒன்று
தோல் தலையணை ஒன்று
தோல் துருத்தி ஒன்று
மாவரைக்கும் திரிகைகள் இரண்டு
மண் குடம் இரண்டு...
இவ்வளவுதான்...
இதைக் கொண்டுதான் அந்த சீமாட்டி பெருவாழ்வு வாழ்ந்தார்கள்.
மக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரி...
கதீஜா பிராட்டியார் பெற்றெடுத்த பிள்ளை
பார்போற்றும் பெருந்தகை பெருமானாரின் வாச முல்லை ..
எங்கள் கண்மணி ஃபாத்திமா வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும் இந்தப்படம் !
இது பாத்திமா நாயகியார் உபயோகித்த பொருட்கள்.
மதீனாவிலுள்ள அவர்களின் வீட்டில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பாடிருந்த பொருட்கள் !
Abu Haashima
No comments:
Post a Comment