Thursday, December 25, 2014
ஒரு சொல்.- நிஷா மன்சூர்
ஒருசொல் உருவாக்கும் விளைவுகள் பாரதூரமனவை
உதாரணமாக மதுபோதையிலிருக்கும் ஒருவன் நம்மீது மோதிவிடுகிறான்,மோதியது மட்டுமல்லாமல்
"ஏய்,பாத்து வாய்யா....ங்கொ....."
என்று கடுமையாக வைதுவிடுகிறான்.
நம் மனோநிலை எப்படி இருக்கும்...??
ராங்கா வந்ததுமில்லாம எம்மேல மோதிட்டு என்னையே பாத்துவான்னு சொல்றியா...அதுவும் தாய் தொடர்பான அசிங்கமான வசவு வார்த்தையோட.
நம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை ரெளத்ரம் தாண்டவமாடுகிறது,நம் சிந்தனை உணர்வு எல்லாம் கோபத்தின்
அதீத உச்சத்தினால் தடுமாறிவிடுகிறது,
அவனை அடிக்கப் பாய்கிறோம்,
அவனை கடுமையாக தண்டிக்கத் துடிக்கிறோம்,
நம் அறிவுகூட திகைத்து நிற்க..உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க
மிகுந்த வெறியோடு அவனை அணுகுகிறோம்.
நிற்க,
என்ன நடந்தது இப்போது...???
சுயநினைவில்லாத ஒரு குடிகாரன் ஒரு பொய் சொன்னான்,
அவ்வளவுதானே.
அதற்கு ஏன் நாம் இவ்வளவு பதட்டப்பட வேண்டும்..??
அவன் செய்த தவற்றைக்கூட நம்மால் மன்னிக்க முடிகிறது,
ஆனால் அந்த சொல் நம்மை புரட்டிப் போட்டு விடுகிறது.
ஒரு சொல்,
அதிலும் ஒரு அவதூறு
நம்மில் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது..???
ஒரு அவச்சொல்லால் நம் மொத்த உணர்வுகளையும் ஆக்ரமித்து
நம் சிந்தையை தடுமாற வைக்குமெனில்
நம்மைக் கொலைகாரனாகக்கூட ஆக்கவைக்க முடியுமெனில்
ஒரு நற்சொல்லால் எத்தகைய விளைவுகளை உண்டாக்க முடியும்...???
அன்பான அரவணைப்பான சொல்களால் இதயங்கள் சாந்தமடைவதையும்
நமக்குப் பிடித்தமானவர்களின் சொற்கள் நம்மை இயக்குவதையும்
உணர முடிகிறது.
எனில்,
இறைமறை குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாக (கலாமுல்லாஹ்) கருதப்படுகிறது,சாதாரண மனிதனின் பேச்சுக்கள் நம் சிந்தையை ஆக்ரமிக்கும்போது இறைவனின் பேச்சு நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது...???
பெரும் மலையும் சுக்குநூறாக வெடித்துவிடும் என்று சொல்லப்படுகிற
இறைமறையின் வசனங்கள் ரசூலுல்லாஹ்வின் கல்பில் அல்லவா இறக்கிவைக்கப் பட்டது...??
இப்போது நம்மில் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தின
இறைமறை வசனங்கள்...???
சையதினா உமர் (ரலி) அவர்கள் சிந்தையைத் திசைதிருப்பியது
இந்த இறைமறை வசனங்கள்தான் அல்லவா...???
என்னவாயிற்று நமக்கு....??
தினந்தோறும் ஓதுகிறோம்.
சுதேசி நல்லா கிராத் ஓதுவார்,அப்துல் பாசித் அற்புதமாக ஓதுவார் என்று தினந்தோறும் கேட்கிறோம்.
எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்துகொண்டு சலனமின்றி அல்லவா இருக்கிறோம்...???
நம் இதயங்கள் திரையிடப் பட்டுவிட்டனவா...???
நம் சொரணை மரக்கடிக்கப் பட்டுவிட்டதா...????
நிஷா மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment