காலையில் எழுந்தவுடன் காபி குடிக்க வேண்டும்,குழந்தைகளை கொஞ்ச வேண்டும்....கடைதெருக்கு சென்று காய் கறி வாங்கி அங்கு சிறிது நேரம் நாட்டு நடப்பு அறிய மனம் விட்டு பேச வேண்டும்,செய்தித்தாள் படிக்க வேண்டும் இது இயல்பு . இதைவிட முக்கியமானது ...
இறைவனிடம் வேண்டி இந்த துவாவை ஒதவேண்டும்.நம்மை மரணமடையச் செய்து பிறகு உயிர் கொடுத்து எழுப்பிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும் நாம் அனைவரும் அவன் பக்கமே திரும்பச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். (அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷுர்)
திரு்வாசகத்தில், திருப்பள்ளியெழுச்சி என்ற பதிகத்தில், “மலரும் எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுதோம்” என மாணிக்க வாசகர் வேண்டுகிறார். விவிலியம் “இந்த நாளை, இறைவன் எமக்குத் தந்தார். இதில் நாம் மகிழ்வோம்” எனக் கூறுகிறது.
காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது.
தினமும் முடிந்த வரை வேகமாக அதி காலையில் நடப்பது மிகவும் நல்லது.
இது உடல் எடை அதிகரிக்கமல் பாதுகாப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
இதய சம்பந்தமான நோய்கள் வருவதிலிருந்து பாதுகாக்கிறது.
வெறும் காலால் நடப்பவரது பாதங்கள் நல்ல நிலையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் காலில் செருப்பணியாமல் நடப்பது மிகவும் நல்லது ...இது ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்,(பாத மசாஜும் நல்லது--படம் ஒரு விளக்கம்)
நடப்பது நல்லது.தரையில் பதியும்படி காலை வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். .
காலையில் நடப்பது நல்ல பலன் தரும். தொப்பையை குறைக்கவும்
மூட்டுவலி ,சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா - மஹாகவி பாரதியார்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment