Saturday, July 16, 2011

இது முறையா? ஒரு ஐயம்!

   ஒரு அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது . அதற்கு எதிரே அந்த அரபிக் கல்லூரியின் நிர்வாகத்திலுள்ள  பள்ளிவாசலில் , விழாவின் காரணத்தினை முன்னிட்டு லுகர்(பகல் ) நேர ஜமாஅத் தொழுகையினை முப்பது நிமிடங்கள் அப்பொழுது மட்டும் தள்ளிப் போட்டு வாசல் கதவினையும்  பூட்டி விட்டனர் .பாங்கு சொல்லப் பட்ட பின்பு அந்த பள்ளிக்கு தொழ வந்தவர்கள் பள்ளிக்கு உட் சென்று தொழ முடியாமல் மிகவும் வருத்தமடைந்தனர் . பின்பு பன்முறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கதவினை திறந்து விட்டனர் .விழாவின் காரணம் காட்டி தொழுகை நேரத்தினை  தள்ளிப் போடுவதும் அதற்காக பள்ளிவாசல் கதவினை  பூட்டுவதும்  சரியா! தவறா!
நீங்கள் தயவு செய்து மார்க்க சட்டம் தெரிந்தவர்களை கேட்டு எழுதுங்கள். மார்க்கத்தில் தவறான விளக்கத்தினை தவிர்க்க முயலுங்கள்.
இந்தக்  கட்டுரை யார் மனதினையும் பாதிக்கும் நோக்குடன் எழுதியது அல்ல . மார்க்க விளக்கம் மக்கள் அறிய வேண்டும் என்ற நல் நோக்குடன் எழுதப்பட்டது. 
   
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

Surat Al-Baqarah (The Cow) - سورة البقرة

அல்குர்ஆன் 2:114

Sahih International
And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosques and strive toward their destruction. It is not for them to enter them except in fear. For them in this world is disgrace, and they will have in the Hereafter a great punishment.
Tamil NEW
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

Source: http://quran.com/2/114
-------------------------------------------------------------------------
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2


The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
Jazak Allahu khayr جزاك اللهُ خيراً


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails