சரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மை கடமையாக உள்ளது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக் கூடாது. எனினும், உண்மையில் சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும் பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.
ஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல என்று சொல்கிறார்கள் பெண்கள் நமக்கு பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள் மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர் நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.
தெளிவான வழிகாட்டி நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண் செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்"
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.
கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்".
பாரதியாரின் பாடிய மறக்க முடியாத வரிகள்
” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:
இது தவிர ஒரு பெண் கரு கலைப்பு சமூகங்களில் இருந்து வருகிறது அதுவும் தாய்மார்கள் (அவர்களே பெண்ணாக இருந்து)இதனை செய்வது கொடுமை. பெண்ணை வளர்ப்பதும் பாதுகாப்பதும் திருமணம் சுமையாக வந்து சேரும் என்ற தவறான எண்ணம் கொண்டு இவ்வித முடிவுக்கு வருகின்றனர். தேவைக்கு பயந்து குழந்தைகளை கொள்ளாதீர்கள் அவர்களுக்கு தேவையானதை இறைவன் அளிப்பான். இளவயதிலேயே திருமணம், கணவர்கள் மூலம் சித்திரவதை, மாமியார் கொடுமை படுத்துவது, நாத்தனாரின் அலட்சியப் போக்கும், கிண்டலும் இவைகள் பெண்ணாக இருந்து பெண்ணுக்கு இழைக்கப் படும் தீமைகளாக இருபதனைக் காண்கிறோம்.
"ஒரு ஏழை பெண் தனது இரண்டு மகள்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள் . நான் அந்த தாயிடம் மூன்று பேரித்தம் பழங்கள் கொடுத்தேன். அத்தாய் தனது இரண்டு பெண்ணுக்கும் ஒவ்வொரு பேரித்தம் கொடுத்தாள் பிறகு அவள் தான் ஒன்று எடுத்து சாப்பிட தன் வாயில் போட முயலும் போது , அவரது மகள்கள் அதை சாப்பிட தங்களது ஆசையை வெளிப்படுத்தினார்கள் . உடனே அத்தாய் தான் உண்ண இருந்த அந்த பேரித்தம் பழத்தினையும் பிரித்து தன் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தாள், கொடுத்த பாங்கும் நோக்கமும் தனக்கு மிகவும் கவர்ந்தது" என அன்னை ஆயிஷா தெரிவிக்கின்றார்கள்.
இதுதான் பெண்ணின் பெருமை.
No comments:
Post a Comment