Friday, July 8, 2011

ஹஜ் யாத்திரை - அஸ்வத் கல்லைத் தொடும்போது எற்படும்...EMOTIONAL DEVOTEE AFTER TOUCHING BLACK STONE HAJARUL

"ஹஜருல்அஸ்வத்" இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும்.

அஸ்வத் கல்லைத்  தொடும்போது எற்படும் உணர்ச்சியான உள் மனது காணுங்கள்.

ஒரு தாயின்(தன் மகள் ஆயிஷாவுக்கு   கஹ்பதுல்லாஹ்வில் ) உதவி உண்மையில் நம் மனதையும்  நெகிழ வைத்து கண்களில் நீர் வடியச் செய்கின்றது.

" கை வலிக்குதா! " மகளின் நேசமான கேள்விக்கு பாசமான தாயின் பிரியமான நேசத் தடவுதலின்  மாமருந்து.இது பாசத்தின் பிணைப்பு. இந்த நிகழ்வு   நம் மனதினை குலுங்கச் செய்கின்றது .பாச பரிமாற்றம் ! இதுதான் ஆழ் மனதின்  இனிய தொடர்பு. தாய்மையும் சிறப்பு அறியாதார் யார்! தாய் தன பிள்ளை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். அதுவும் உடல் ஊனமுற்ற பிள்ளைக்கு அவள் செய்யும் பணிவிடை அளவற்றது.   “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என்ற  நபி மொழிக்கு மாற்று மொழியேது !

  EMOTIONAL DEVOTEE AFTER TOUCHING HAJARUL ASWATH with her daughter physically challenged ayisha inside KABATULLAH





உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு சுல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)
 உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ சுல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்.


  உறவினர்களைப் பற்றிய அல் குரானின் குறிப்பில், நாம் கட்டாயமாக அன்பு செலுத்த வேண்டிய உறவினர்களைப் பற்றி மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிடப் பட்டு உள்ளது.


".....................(நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை", அன்றியும், எவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் , நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கிறான்"
(அல் குரான்; 42 : 23 )

அல்லாஹ் எங்களுக்கு செய்த பேரருளுக்கு நாம், அல்லாஹ்வுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்பதைப் பற்றி விளக்குகின்ற புனித அல் குரான் வசனம் இது.




3 comments:

Unknown said...

very informative n touchy..infact u r wonderful person and most loving man in universe

VANJOOR said...

நெஞ்சத்தில் ஊறிடும் உணர்வுதனையே
எழுத ஓர் வார்த்தை
இல்லையே.

mohamedali jinnah said...

மனம் மணம் வீச பாசமலர் தேவை. இதயம் என்று ஒன்று இருப்பின் அதில் நெஞ்சத்தில் ஊறிடும் இறக்கம் என்ற உணர்வு இருபத்துதானே இயல்பு. உங்களது உள்மனது காட்டும் பரிவுனைக் கண்டு என் மனம் நெகிழ்கின்றது.

LinkWithin

Related Posts with Thumbnails