Sunday, July 31, 2011

அறிவியல் அதிசயம் - MJM Iqbal

விண்வெளி சுற்றுலா...
வளைகுடா நாடுகள் பெட்ரோல் எண்ணை வளத்தை நம்பியே உள்ளன. பெட்ரோல் விற்பனை மூலம் ஏராளமான பணம் சம்பாதித்த அரபு நாடுகள் அந்த பணத்தை முதலீடாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தங்கள் நாடுகளை வளப்படுத்தி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேடு எனப்படும் துபாய் நாட்டின் சமீப கால வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் உள்ளது. வர்த்தகம், கட்டுமானத்தொழில், பொழுது போக்கு அம்சங்கள்... என்று பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து வேகமாக முன்னேறி வருகிறது ஐக்கிய அரபு எமிரேடு.

துபை, ஷார்ஜா, ரசல் கைமா உள்பட 7 அமீரகங்கள் இணைந்து ஐக்கிய அரபு எமிரேடு ஆக உருவானது. இதில் ஒவ்வொரு அமீரகமும் ஒவ்வொரு துறையில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டு அதில் முதலீடுகளைச்செய்து முன்னேறி வருகிறது. குறிப்பாக துபையில் வர்த்தகம், கட்டுமானத் தொழில் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் உலக அதிசயங்களை உருவாக்குதல் சுற்றுலா போன்ற துறைகள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதே போல ரசல்கைமா அமீரகம் விண்வெளி மற்றும் விண்வெளி சுற்றுலா துறையில் ஆர்வம் காட்டி வருகிறது.

ஸ்பேஸ் போர்ட் எனப்படும் விண்வெளி தளங்களை அமைப்பது, அதன் மூலம் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவற்றில் ரசல்கைமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி ரசல்கைமாவில் விண்வெளி தளம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருக்கிறது.

இது தவிர இந்த தளத்தில் இருந்து முதன் முதலான ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த ஒருவரை விண்வெளிக்கு அனுப்பவும் முடிவு செய்து உள்ளனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள தனியார் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக வளர்ந்து வரும் அரபு நாட்டின் சாதனை முயற்சிகளை இந்த வாரம் காண்போம்.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ரஷியா முன்னணியில் உள்ளது. இதில் ஹநாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு வகையான விண்வெளி ஆய்வுகள் நடத்தி வருகிறது.

அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றை விண்வெளியில் நிறுவி உள்ளனர். இந்த ஆய்வு நிலையத்துக்கு அமெரிக்கா மற்றும் ரஷிய வீரர்கள் அடிக்கடி சென்று அங்கு தங்கி இருந்து ஆய்வுப் பணிகளை நடத்தி வருகின்றனர்.

நாசா ஆய்வு நிலையம் போல பல்வேறு நாடுகளும் தங்கள் நாடுகள் சார்பில் விண்வெளி ஆய்வு நிலையங்களை நிறுவி ஆராய்ச்சிப்பணிகளை நடத்தி வருகிறது. இந்தியா சார்பில் ஹஇஸ்ரோ' (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன்) என்ற அமைப்பு விண்வெளி ஆய்வுப்பணிகளை கவனித்து வருகிறது.

அரசு நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது பல தனியார் அமைப்புகளும் விண்வெளி ஆய்வில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் படி ரஷியாவின் சோயுஸ் கலம் மூலம் விண்வெளிக்கு தலா ஒரு வீரரை ஒவ்வொரு முறையும் ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனம் அனுப்ப முடியும்.

ரஷியா மற்றும் அதன் பக்கத்து நாடுகள் இணைந்து சோவியத் ïனியன் என்ற பெயரில் ஒருங்கிணைந்து இருந்தது. அப்போது அமெரிக்காவுக்கு இணையாக, இன்னும் சொல்வதென்றால் அமெரிக்காவை விட ஒரு பங்கு மேலாக விண்வெளி துறையில் ரஷியா முன்னணி வகித்தது. இந்த நிலையில் சோவியத் ïனியன் நாடுகள் தனித்தனியாக சிதறின. ரஷியா மட்டும் வல்லரசு நாடாக தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்துக்கு போதுமான நிதியை ரஷியா நாட்டால் ஒதுக்க முடியவில்லை.

இதையடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தனது சோயூஸ் விண்கலம் மூலம் பயணி ஒருவரை அழைத்துச் செல்வதன் மூலம் நிதி திரட்ட ரஷியா முடிவு செய்தது. இதற்காக ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்து கொண்டது. இதன் படி சோயூஸ் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிச்செல்லும் போது அதனுடன் சுற்றுலா பயணி ஒருவரும் சென்றார். இந்த திட்டத்தின் படி இது வரை 3 பேர் விண்வெளிக்குச்சென்று திரும்பி உள்ளனர். முதன் முதலாக 2001-ம் ஆண்டு டென்னிஸ் டிட்டோ சோயூஸ் கலம் மூலம் சர்வதேச விண்வெளிக்குச்சென்றார். டென்னிஸ் டிட்டோ அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவன அதிபர் ஆவார்.

அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்க் ஷட்டில் ஒர்த் சோயூஸ் விண் கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். அடுத்து 3-வது நபராக விஞ்ஞானியும் தொழில் அதிபருமான கிரிகோரி ஒல்சன் விண்வெளிக்குச் சென்றார். இவர்கள் அனைவரும் தலா 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்தி விண்வெளிப்பயணம் சென்றனர். இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்கள் வரை கட்டணமாக செலுத்தி விண்வெளி வீரருக்கான பயிற்சிகள் பெற்று 10 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து திரும்பினார்கள்.

இவ்வாறு விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ள ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த இலக்காக அரபு நாடுகளை குறிவைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் அதி வேகமாக வளர்ந்து வரும் ஐக்கிய அரபு எமிரேட்டை இலக்காக வைத்து அங்கு கால்பதித்துள்ளது ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ரசல்கைமா பகுதியில் விண்வெளி தளம் அமைத்துள்ளது. ஸ்பேஸ் போர்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விண்வெளி தளம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி எரிக் ஆண்டர்சன் கூறும் போது...

'அடுத்த 20 அல்லது 25 ஆண்டு களுக்குள் விண்வெளி சுற்றுலா மிக முக்கியமானதாகி விடும். பணக்காரர்கள் உல்லாசப்பயணமாக வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல பூமியில் இருந்து விண்வெளி மற்றும் நிலவு போன்ற பக்கத்து கிரகங்களுக்கு சுற்றுலா செல்லும் நிலை உருவாகும்.

இதற்கு ஏற்ப விண்வெளியில் ஒட்டல்கள் மற்றும் நிலவில் குடிஇருப்புகள் அமைக்கும் திட்டங்களும் தயாராகி வருகிறது. சுமார் 25 லட்சம் முதல் 1 கோடி ரூபாய்கள் வரை செலவு செய்ய தயாராக இருப்பவர்கள் இந்த விண்வெளி சுற்றுலா செல்ல முடியும். உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பலர் இந்த விண்வெளி சுற்றுலாவில் ஆர்வமாக உள்ளனர். இந்த சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் அரபு நாட்டில் விண்வெளித் தளம் அமைக்க இருக்கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ரசல்கைமாவில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மொத்தம் 1200 கோடி ரூபாய்கள் வரை முதலீடு செய்யப்படும். ரசல்கைமாவில் அமைய இருக்கும் விண்வெளி தளத்துக்கு அதன் ஆட்சியாளர்களும் உதவ முன் வந்துள்ளனர். ரசல் கைமாவின் பட்டத்து இளவரசரும் அதன் துணை ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் சாகர் அல் காசிமி இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து இருக்கிறார். இந்த அனுமதியின் மூலம் ஸ்பேஸ் அட்வன்சர்ஸ் நிறுவனம் ரசல்கைமா வானவெளியை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை அனுப்ப முடியும். இது தவிர ரசல்கைமா அரசு இந்த திட்டத்தில் சுமார் 135 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யவும் முன் வந்துள்ளது. இது தவிர பல்வேறு தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்ய விருப்பம்
தெரிவித்துள்ளன.

ரசல்கைமாவில் அமைய இருக்கும் விண்வெளி தளத்தில் இருந்து புறப்படும் விமானத்தின் மூலம் ஒரே நேரத்தில் 5 பேர் வரை விண்வெளிக்கு சுற்றுலா செல்ல முடியும். ஒரு நபருக்கு கட்டணம் சுமார் 45 லட்சம் முதல் 66 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இங்கிருந்து பயணம் செய்ய இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 4 நாட்கள் மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் முடிந்த பிறகு அவர்கள் விமானம் மூலம் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கு அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தங்கி இருப்பார்கள்.

இந்த விண்வெளி சுற்றுலாவில் முதன் முதலாக ஐக்கிய அரபு நாட்டைச்சேர்ந்த அட்னான் அல் மைமானி என்பவர் செல்கிறார். இது பற்றி மைமானி கூறும் போது,'விண்வெளிப்பயணம் எனது நீண்ட நாள் லட்சியமாக இருந்தது. அது நிறைவேற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது', என்றார். இந்த பயணத்துக்காக இவர் 50 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்தி இருக்கிறார்.

இனி வரும் காலத்தில் தேனிலவுக்கு விண்வெளி பயணம்செல்லும் காலம் வரத்தான் போகிறது.

Jazakkallahu Hairan நன்றி
நன்றி Source : http://chittarkottai.com/mjmiqbal/adisayam21.htm





தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலை..
அபுதாபியில் தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் ஒலி, ஒளி குருந்தகடு வெளியீடும் இன்னிசை மாலையும் நிகழ்ந்ததில் ஒரு பகுதி.
Jazakkallahu Hairan நன்றி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails