Thursday, October 31, 2013
Friday, October 25, 2013
முஸ்லிம் இலக்ஷியம் இஸ்லாமே
இஸ்லாமிய சோதரீர்!
இப்பிரபஞ்சத்தில் இறைவனால் அருளப்பட்ட அருட் பாக்கியங்களில் மிக மகத்தானது “இஸ்லாமே” என்பதுதான் ஒவ்வொரு
உண்மை முஸ்லிமுடைய உதரத்திலும் உயிரிலும் ஊறிப் போய் இருக்கும் உள்ளக் கிடக்கை. தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளம் உவந்து உவகை பூத்து, எல்லாம் வல்ல இறைவனுக்கு ‘ஷுக்ரு’ என்னும் கடப்பாடு செலுத்துகிறான். அது மட்டுல்ல; அத்தகைய அரும் பெரும்பாக்கியமாய தீனுல் இஸ்லாத்தை ஆண்டவன் புறத்திருந்து நம் மாந்தர் கோடிக்கு அளித்தருளிய ஏக தெய்வத்தூதர் நபி கரீம் முஹம்மத் (சல்) அவர்களுடைய உம்மத்தில் “நானும் ஒருவனா யிருக்கிறேன்” என்று எண்ணும் போது, ஒவ்வொரு முஸ்லிமும் முகம் மலர்ந்து அகம் குளிர்ந்து, ஏதோ ஒருவகைப் பேரானந்தங் கொள்கிறான்; “அன்ப! நீ முஸ்லிம்தானே?” என்று கேட்டதும், “ஆம், அல்ஹம்து லில்லாஹ்!” என உடனே பதில் அளிக்கின்றான்.

Labels:
இலக்ஷியம்,
இஸ்லாம்,
தாருல் இஸ்லாம்,
முஸ்லிம்,
ரஹ்மத் பாகவீ
Thursday, October 24, 2013
ஜிஹாத் என்றால் என்ன?
ஜிஹாத் என்றவுடன் அல்லாவை நிராகரிப்ப்பவர்களை எதிர்த்து போர் புரிவது என்று பெரும்பாலான மக்கள் தவறான எண்ணம் கொண்டுள்ளனர்.
ஜிஹாத் என்பது விரிவான பொருள் கொண்ட வார்த்தையாகும்.
மனதில் எழும் சைத்தான் தனமான உணர்வுகளை எதிர்த்துப் போரிட்டு நமது மனத்தை அடக்குதல்
அநீதியாளர்களை எதிர்த்துப் போரிடுதல்
இஸ்லாத்திற்கு எதிரான சடங்கு சம்பிரதாயங்களைக் கிள்ளியெறியப் பாடுபடுதல்

இறை நெறி,
மனதை நல்வழி படுத்தும் முயற்சி,
ஜிஹாத்
எது பொறுமை !
( படத்தின் விளக்கம். The message give by the Holy Prophet (Peace BE Upon Him) at the time f Conquering Makkah... He is So humble.....)
சிலர் கடுங் கோபம் வந்தாலோ ,துக்கம் வந்தாலோ நிலை தடுமாறி விடுகின்றனர்.கோபம் கொண்டவர் எதிரியை கடும் சொற்களால் திட்டி பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசிவிட்டு பின் நான் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார் இன்னும் சிலர் கடும் துக்கம் ஏற்பட்டால் கத்தி கதறி அழுது புரண்டு படைத்தவனே உனக்கு பார்வையில்லையா என வசனம் பேசி விட்டு பின் அல்லாஹ் விற்காக சப்று செய்கிறேன் என்பார்கள்.
ஆனால் உண்மையான சப்று (பொறுமை) என்றால் என்ன?
இதோ அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.;
ஓரு முறை மூதாட்டி ஒருவர் ஒரு கப்ரு அருகே அமர்ந்து அழுது புலம்புவதைக் கண்டு சப்று செய்யுங்கள் என்றார்கள்.சொல்பவர் அண்ணல் நபி என அறியாத அம்மூதாட்டி என் வேதனை உமக்கு வந்தால்தான் தெரியும் என்றார்.நபி பெருமான் (ஸல்)அவர்கள் அமைதியாக திரும்பி விட்டார்கள்.அங்கிருந்தோர் வந்தது நபி என அம்மூதாட்டியிடம் கூற பதறிப்போன மூதாட்டி அண்ணலாரின் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டார்
அப்பொழுது நபி(ஸல்)சொன்னார்கள் :
“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “
துன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)
ஸப்ரு என்ற அரபு வார்த்தைக்கு மனதை அடக்குவது ,கட்டுபடுத்துவது
என்பது பொருள் நோன்பிற்கும் ஸப்ரு என்று பெயர்.
அல்லாஹ் நமக்கு பொருமையைத் தந்தருள்வானக! ஆமீன்
தகவல் தந்தவர்
Moulavi Kaniyur Ismail Najee
Labels:
அண்ணல் நபி(ஸல்),
பொறுமை,
மன்னிப்பு
Wednesday, October 23, 2013
அபுபக்கர் (ரழி)
மா நபி;
ஹிஜ்ரத் செய்யும்
வேளையிலும்
ஹஜ்ரத் நீங்கள்
இருந்தீரே!
பலம் கொண்ட
மனதால்;
படைக்கொண்ட எதிரியை
திகைக்க வைத்தீர்;
வரலாற்றைத்
தொடக்கி வைத்தீர்!
உத்தம நபியின்
சத்திய மாணவனாய்;
நித்தமும் சிலிர்க்கும்;
உங்கள் யுத்தத் தந்திரத்தைக்
கேட்கையிலே!
இஸ்லாமிய வேட்கையிலே!
ஹிஜ்ரத் செய்யும்
வேளையிலும்
ஹஜ்ரத் நீங்கள்
இருந்தீரே!
பலம் கொண்ட
மனதால்;
படைக்கொண்ட எதிரியை
திகைக்க வைத்தீர்;
வரலாற்றைத்
தொடக்கி வைத்தீர்!
உத்தம நபியின்
சத்திய மாணவனாய்;
நித்தமும் சிலிர்க்கும்;
உங்கள் யுத்தத் தந்திரத்தைக்
கேட்கையிலே!
இஸ்லாமிய வேட்கையிலே!
Sunday, October 20, 2013
பெண்ணியம் சில புரிதல்கள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.

உங்கள் நண்பன் யார்?
ஹதீஸ் விளக்கவுரை அஷ்ஷெய்க் ர்.ஆ. மின்ஹாஜ் இஸ்லாஹி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.
சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹ{தியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.

Wednesday, October 16, 2013
நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist)
நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள்
Nidur-Neivasal Eid-Ul-Ada
நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் தருணங்கள்
Assalamu Allikkum
Warmest Eid Greetings with wishes for you, friends and family
May this Eid is full of blessings to all of us, Eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.
Ya Allah, I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
Tuesday, October 15, 2013
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013
Assalamu allikkum
warmest Eid Greetings with wishes for you,friends and your family
May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends,
eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.
eid-ul-ada (may you have a blissful Eid) everyone!
I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
Monday, October 14, 2013
Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது
Assalamu Alaikkum
How to Perform Hajj & Umra-step by Step pictures! + HISTORICAL PLACES OF MAKKAH & MADINA
May this EID-UL-ADHA Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!
S.E.A.Mohamed Ali Jinnah, ("nidurali")
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
Sunday, October 13, 2013
இறைவனுக்காக தியாகம் செய்தால் இனமும் அழியாது ... இஸ்லாமும் அழியாது
மக்கா -
மயில்கள்
தோகை விரிக்காத
மணல் காடு !
குயில்கள் வந்து கூவாத
மலைகளின் கூடு !
அது -
சூரியன் மட்டுமே
குளிக்க வருகின்ற
வெயில் நீர் தேக்கம்
சுடு கதிர்கள் மட்டுமே
வேர் விடுகின்ற
கானல் தேசம் !
குழுமையின்
செழுமையே தெரியாத
அந்தத்
தணல பூமியில்தான்
ஹாஜராத் தாயோடு
குழந்தை இஸ்மாயிலையும்
தனிமையில் விட்டு விட்டு
தன் வழியே
திரும்பிச் சென்றார்
நபி இப்ராஹீம் !
Saturday, October 12, 2013
இறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன?
தொழுகை உடல் சார்ந்த வழிபாடு; உண்ணா நோன்பும் அவ்வாறுதான். 'ஸகாத்' எனப்படும் கட்டாயக் கொடை ஒரு பொருளாதார வழிபாடு. புனித ஹஜ் உடல், பொருள் இரண்டும் சார்ந்த வழிபாடு.
இந்த வழிபாடுகள் மூலம் இறைக்கட்டளையை நிறைவேற்றும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கின்ற அதே வேளையில், தமக்கும் தம்முடன் வாழும் சகமனிதர்களுக்கும் அவர் நன்மை செய்கிறார்.
தொழுகையால் உடல் தூய்மையும் உளத்தூய்மையும் அடைகிறார். தாம் செய்த குற்றங்களை எண்ணி இறைமுன் அழுகிறார். இனிமேல் குற்றமிழைக்கமாட்டேன் என்று சபதம் ஏற்கிறார். குற்றங்களிலிருந்து விடுபடுவது அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மையல்லவா?.
உண்ணா நோன்பால் குடலுக்கு ஓய்வு; அதனால் உடலுக்கு ஆரோக்கியம். மதிய வேளையில் பசியும் தாகமும் அவரைவாட்டும்போது, பட்டினியின் கொடுமையை அனுபவிக்கிறார். ஏழை எளியோருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உந்தப்படுகிறார்.
'ஸகாத்' எனும் கட்டாயக் கொடை, சுயநலத்தையும் கருமித்தனத்தையும் செல்வர்களிடமிருந்து அகற்றுவதற்கான அருமையான வழிபாடு. உன்னை அண்டி வாழும் ஏழைகளுக்கு உன் செல்வத்தில் பங்கு உண்டு என்று சொல்கின்ற இறைக்கட்டளைதான் ஸகாத். ஆண்டுக்கு இரண்டரை விழுக்காடு தொகை ஏழை எளியோருக்கு ஒவ்வொரு செல்வரும் கட்டாயமாக வழங்கிவந்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பார்கள்.

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1
இந்தியாவில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சாரங்கள் யாவும் துவேஷத்தை வளர்க்கும் வகையில் திட்டமிடப் பட்டு முஸ்லிம்களுக்கும் சிறுபான் மையினருக்கும் எதிரான திசையில் திருப்பிவிடப் பட்டு இருக்கிறது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிர்கால இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்து கொடுத்து இருக்கிறது. இப்படி தேர்வு செய்யப் பட்டவர் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொலை செய்த பாதககரங்களுக்கு சொந்தக்காரர். தனது ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்குவதே அரசநீதி என்று அவர் நம்பும் நீதி நூல்களிலேயே கூறப் பட்டிருக்க, உயிரிழந்த தனது ஆளுகைக்குட்பட்ட குடிமக்களை காரில் அடிபட்ட குட்டி நாய்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய உயர் குணம் படைத்தவர். இந்தியாவின் பணம் படைத்த பெரும் பணக்காரர்கள் நிறைந்த குஜராத் மாநிலத்தின் வட்டிக்கடை அதிபர்கள், தங்கக்கடை அதிபர்கள், சேட்டுகள் என்று அழைக்கப் படும் இந்தியப் பொருளாதாரத்தை தங்களது கை பொம்மலாட்டமாக்கி வித்தை காட்டும் உயர் சாதியினர் அடங்கிய கார்ப்பரேட் முதலாளிகளும் இந்தியாவில் இந்து தேசியத்தை அமுல் படுத்தி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்க வேண்டுமென்று ஆர்ப்பரித்துத் திரியும் ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் , முன்னாள் ஜனசங்க மற்றும் இந்நாள் பி ஜெ பி யினரும் கை கோர்த்து பெரும் சதித்திட்டத்தின் அடிப்படையில் காய்களை விளம்பரங்கள் மூலமும் பார்ப்பன ஊடகங்கள் மூலமும் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.
Tuesday, October 8, 2013
விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.
பேகம் சாஹிபா
திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார். போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இஸ்லாமிய பெண்கள்,
விடுதலைப் போர்
ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது
என் கேள்விக்கு இறைவனின் பதில்!
================================
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!
துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.
டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.
அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.
Labels:
பிரார்த்தனை,
மருத்துவர்
Monday, October 7, 2013
எல்லா முஸ்லிம் அமைப்பும் எப்படியாவது ஒன்றிணைய வேண்டும்!
இந்தியாவில் 534 தொகுதிகளில் 105 தொகுதிகளில் வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களால் நிச்சயிக்கப் படுகிறது ... - இந்தியா டுடே ...
அதில் 8தொகுதி தமிழ் நாட்டில் உள்ளது .
நம் சமுதாய தலைவர்கள் தொண்டர்கள் இதனை உணர்ந்திருக்கிரார்களா ?...இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்? சிந்தித்தோமா ?
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
Labels:
அனைவரும் ஒரு கட்சி,
இந்திய முஸ்லிம்கள்
Subscribe to:
Posts (Atom)