Sunday, December 13, 2015

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' ....


அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை இழந்துவிட்டதாக அதிபர் மாளிகை அறிவிப்பு..!!

http://edition.cnn.com/…/donald-trump-josh-earnest-disqual…/

'டொனால்டு டிரம்ப்' கூறிய கருத்து அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது

மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் பற்றி அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் இப்படி பேசியிருப்பதை முஸ்லிம்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் அமெரிக்கா அரசாங்கம் , அமெரிக்க மக்கள் (அதிபர் பதவிப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜெப் புஷ், கிறிஸ் கிறிஸ்டி, பெர்னீ சாண்டர்ஸ் ஆகியோ உள்பட) பல வெளிநாட்டு அரச்சங்கங்களும் மக்களும் சரமாரியாக கண்டித்திருக்கிறார்கள்.. இவரை இங்கிலாந்துக்கு வருவதை தடைசெய்யவேண்டும் என இங்கிலாந்து மக்கள் இதுவரை 5,51,449பேர்கள் Petition அளித்துள்ளார்கள்...

https://petition.parliament.uk/petitions/114003


இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை 'டிரம்ப்' இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத் தலைமையகம் : முஸ்லிம்களுக்கு எதிராக அறைகூவல் விடுப்பது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல ...

ஸ்காட்லாந்தில் உள்ள Robert Gordon University (RGU) என்ற பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தொழில்துறையில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக கடந்த 2010ம் ஆண்டு ட்ரம்பிற்கு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்திருந்தது.தற்போது, அந்த கெளரவமிக்க பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக நேற்று மாலை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ட்ரம்பிற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரியானதாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தொடர்ந்து எதிர்த்து வருவது தங்கள் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பிற்கு ஏற்பட்ட கலங்கமாக கருதுகிறோம்.எனவே, ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளதாக’ அந்த அறிக்கையில் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் : மதவெறியை தூண்டும் வகையில் 'டொனால்டு டிரம்ப்' பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

இஸ்லாமிய எதிர்ப்பால் பாப்புலர் ஆகிவிடலாம் என்கிற 'டொனால்டு டிரம்ப்' வெறுப்பு அரசியலை அமெரிக்காவும், உலகநாடுகளும் ஒட்டு மொத்தமாக கண்டித்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது ... இதுபோல பன்முகதன்மை கொண்ட நமது இந்தியாவிலும் இது போன்ற அனைத்து வெறுப்பு அரசியல் சாக்கடைகளை அடியோடு ஒழித்து கட்டப்பட்டால்தான் நாடும் நாட்டுமக்களும்முன்னேற முடியும் என்கிற பேருண்மையை இந்திய பிரதமரும், அவரது கட்சியும் உணர்ந்து செயல்படமுன் வரவேண்டும்

- தக்கலை கவுஸ் முஹம்மத்

தகவல் தந்தவர் தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails