சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
அந்த பாதிப்புகளை அகற்றுவதற்கு
முஸ்லிம்கள் பட்ட பாடுகளும்
கொஞ்ச நஞ்சமல்ல.
* ஜாதி மத பேதம் பாராமல் ...
* தாங்கள் தங்குவதற்கு வாடகைக்கு வீடு கூட தராத மக்களுக்கு ...
* தங்களை பயங்கரவாதிகளாய் எண்ணி ஒதுங்கிய மக்களுக்கு ...
அவர்களையும் தங்களின்
சொந்தங்களாய் எண்ணி
அவர்களின் வீடுகளையும் கோயில்களையும் சுற்றி குவிந்து கிடந்த கழிவுகளை எந்த அருவருப்புமின்றி
முஸ்லிம்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பதை நாமறிவோம்....
இது விளம்பரத்திற்காகவோ
ஆதாயத்திற்காகவோ செய்த சேவை அல்ல.
இதெல்லாம் முஸ்லிம்களின் ரத்தத்தில் ஊறியது.
1400 வருடங்களுக்கு முன்னால்
மக்காவில் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை நபிபெருமானார் ஏற்றி வைத்தார்கள்.
அதை ஏற்றுக் கொள்ளாத குறைஷிகள்
நபிகளாரை சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள்.
மக்காவில் வாழ்ந்த ஒரு மூதாட்டி
அதிகாலை நேரங்களில் அண்ணலார் வரும்வரை காத்திருந்து அவர்களின்மீது
குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டிக் கொண்டிருந்தாள்.
பெருமானார் புன்முறுவலோடு அவற்றை தங்கள் மேனியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு கடந்து செல்வார்கள்.
ஒருநாளல்ல...
இருநாளல்ல ...
பல நாட்கள் தொடர்ந்து நடந்தது இந்த அநியாயம்.
ஒருநாள் வழக்கம்போல் நபிகளார் நடந்து வரும்போது அந்த மூதாட்டியைக் காணவில்லை.
மஹ்மூது நபிகளின் மனம் துணுக்குற்றது.
இன்று அவள் தன்மீது குப்பை கொட்டும் வாய்ப்பை இழந்த்தை எண்ணி அவள் வருந்தக் கூடாதே என்று நினைத்து சத்தம் கொடுத்தார்கள். அப்போதும் அவள் வரவில்லை.
அப்போது ஒருவர் , அந்த பெண்மணி உடல் நலமில்லாமல் படுத்திருப்பதை நபிகளிடம் சொன்னார்.
அது கேட்டு மனம் வருந்திய பெருமானார் , வீட்டின் உள்ளே செல்ல அனுமதி பெற்று உள்ளே சென்றார்கள்.
அந்த மூதாட்டி உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக கிடந்தார்.
அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு ...
அவள் நோயிலிருந்து நிவாரணம் பெற அல்லாஹ்விடம் அண்ணலார் துஆ கேட்டார்கள்.
அல்லாஹ்வும் அந்த துஆவை ஏற்று மூதாட்டிக்கு உடல் நலத்தை வழங்கினான்.
தன்னை தண்டிக்கத்தான் முஹம்மத் வந்திருக்கிறார் என்று எண்ணி அஞ்சிய மூதாட்டி ...
இன்னல் செய்த தன்னை மன்னித்து
தனக்கு உதவி செய்த மன்னர் முஹம்மதரின் மாண்பைக் கண்டு
கண்கலங்கினாள்.
தன் தவறுக்கு வருந்தினாள்.
கருணை நபிகளாரின் கரம் தொட்டு இஸ்லாத்தைத் தழுவினாள்.
உபத்திரவம் செய்தவருக்கும்
உபகாரம் செய்தவர்
எங்கள் கண்மணி ரஸூலுல்லாஹ்.
அவர்களை பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் எப்படி இருப்பார்கள்
என்பதற்கு இந்த வெள்ள நிவாரண
அற்ப்பணிப்பு பணிகளே சாட்சி !
Abu Haashima
No comments:
Post a Comment