Tuesday, November 9, 2010

நமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்

அன்பார்ந்த அனைத்து சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

இரண்டு மூன்று நாட்களாக நானெழுதி வரும் எழுத்துக்களை கண்ணுறும்   சகோதரர்கள் சிலர் நான் தவ்ஹீத் ஜமாத் அனுதாபியோ என்றெண்ணலாம் என்னைப் பொறுத்தவரை இசுலாத்திற்கு ஊழியம் செய்யும் அனைவர்களையும் நான் நேசிக்கிறேன். 

நான் அறிந்த சில விசயங்களை உங்களோடுப் பகிர்ந்து கொள்வதே நமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும் என்பதற்காகத் தான்

மேலும் இந்த வேகமான காலத்தில் நீண்ட கட்டுரைகளைப் படிக்க நம்மில் யாருக்கும் நேரமில்லை என்பதால் தினமும் சிறிய அளவில் பதிவு செய்கிறேன். 

ஒரு முறை மத்ஹபுகளைப் பின்பற்றாதச் சகோதரர் ஒருவர் என்னிடத்தில் தப்லீக்கைப்பற்றி குறைப்பட்டுக் கொண்டார் அவர்கள் செய்வது சரியில்லை என்றார். நான் சொன்னேன் இஸ்லாத்தை வளர்ப்பத்தில் அவரவர்கள் அவரவர்களுக்குரிய பங்களிப்பைச் செய்கிறார்கள் அந்த முறை அடிப்படை இசுலாத்தை தகர்க்காதவரை அதையேன் குறை சொல்கிறீர்கள் என்றேன்


இன்று நம்மில் யாரும் காதியானியிசத்தை (அஹ்மதியா முஸ்லிம் கொள்கையை) ஏற்க மாட்டோம் ஏனென்றால் அது அடிப்படை இசுலாத்தையே கேள்வி கேட்பது இறுதி நபித்துவத்தை ஏற்க மறுப்பது என்பதால்

ஏன் என்றேன் நண்பரிடம் “ இல்ல தப்லீக் கிதாபுல ஒரு வேளை தொழுகையை விட்டா ஒரு ஹூகப் காலம் நரகமாம் இது எங்கேங்க உள்ளது...... இதை ஏத்துக்க முடியுமா என்றார்

நான் அவரிடம் அதையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.  ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.  நம்ம வீட்டில் சிறு குழந்தையைப் பார்த்து பால்கனிக்கு போகவேண்டாம் என்கிறோம் .

அது அறியாப் பிள்ளை நாம் எதற்கு சொல்கிறோம் என்று புரியாத வயது.  நாமும் அங்கே போய் எட்டிப் பார்த்தால் கீழே விழுந்திடுவாய் என்று சொன்னால் அதற்கும் புரியாது அல்லது அப்படி செய்து பார்த்திடுமோ என்று பயப்படுவோம்.............  எத்தனை தடவைச் சொன்னாலும் அது கேட்க மாட்டேங்கிறது ஆர்வக்கோளாறில் பால்கனிக்கு சென்று வெளிஉலகை ஆசையோடு பார்க்கிறது நமக்கோ உள்ள வேலை பிள்ளையோடே இருக்க முடியாது...... 

எனவே அந்தப் பிள்ளையைப் பார்த்துச் சொல்கிறோம்.......அங்க போகக் கூடாதும்மா......... ஊ இருக்குது பேக்கா இருக்கான் என்கிறாம்............ அதற்குப் புரியாது இருந்தாலும் நம் கண்ணையும் தொனியையும் சாடையையும் வைத்து ஐயோ அங்கே ஏதோ ஒரு வேண்டாத பொருள் இருக்கு போலிருக்கு என்று பயந்து அங்கே போகாமலிருக்கிறது. 

நம்முடையது நல்ல நோக்கம் ....பிள்ளை பால்கனிக்குப் போகக் கூடாதென்பது விழுந்திடுமே என்பதால் ......ஆனால் நல்லதனமாகச் சொன்னால் கூட புரியாததால் கேட்கவில்லை.  எனவே ஒரு தவறான முறையை கையாளுகிறோம்.  கையாண்ட முறை தவறானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறது அப்படி எடுத்துக் கொள்ளுங்களேன்.  

வேப்ப மர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப்  போகையில
சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க என்ற  பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருகிறது.


தப்லீக் கிதாபில் உள்ளது........... தொழ வைக்க வேண்டும் என்பது நோக்கம் அதற்காக ஒரு பயமுறுத்தலை அதாவது ஒரு தொழுகையை விட்டால்  (ஒரு ஹூகப் காலம்) நரகமாம் ( இதற்கான ஆதாரம் எனக்குத் தெரியாது ) என்று வைத்துக் கொள்ளுங்களேன் என்றேன்.

அவர் பேசவில்லை மறு பேச்சு.   நாளை நான் என் நண்பன் வாழ்வில் தப்லீகால் ஏற்பட்ட திருப்பு முனையோடு வருகிறேன்.  இன்ஷா அல்லாஹ் தொடரும் 
With best regards
Kamal
by mail from Kamal

1 comment:

புல்லாங்குழல் said...

ஆரோக்கியமான கருத்து வேறுபாடு ஒரு வளர்ச்சி. இன்று அது வீக்கமாய், வியாதியாய் போய்விட்டது. இத்தகைய தருணத்தில் உங்கள் நல்லெண்ணத்திற்கு என் ஆதரவை தெரிவித்து கொள்கின்றேன். வாழ்த்துக்கள் நணபரே!.

LinkWithin

Related Posts with Thumbnails