Thursday, May 19, 2011

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.

"ஒரு பெருந்துயரத்தின் சாரலோடு பொழுதுகள் விடிகின்றன...! மாறாவடுக்களின் துயரஅலறல் தேசங்களெங்கும் முட்டிமோதி மனிதம் வாழும் இதயங்களெல்லாம் விழிநீரோடு எதிரொலித்திடினும் எவராலும் நீக்க முடியா ஒரு பெருந்துயரத்தின் சாரலோடு பொழுதுகள் கழிகின்றன...!"
- எம்.ரிஷான் ஷெரீப்


இலங்கையிலிருந்து வெளிவரும் 'விடிவெள்ளி' வார இதழில் இன்றைய தினம் (19.05.2011) வெளிவந்திருக்கும்  M.ரிஷான் ஷரீப் கவிதைத் தொகுப்பு 'வீழ்தலின் நிழல்' குறித்த விமர்சனம். நன்றி - விடிவெள்ளி இதழ்

  'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும்  'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழ்ந்தது .
தொகுப்பை கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் உமா ஷக்தி பெற்றுக்  கொண்டார்தொகுப்புடன் சேர்த்து மொத்தம் எட்டு ஈழத்து நூல்கள் அந் நாளில் வெளியிடப்படவிருக்கின்றன.

இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய அறிமுகம்
கீழே...
.

  பூக்கள் விசித்தழும் மாலை

வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும் 
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்
மொட்டுக்களாகிப் பூத்திடும்
விடிகாலையில்

மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்

காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

M.ரிஷான் ஷரீப் வலைப்பூக்கள்

Website
Channel One
News presenter
News Editor, Producer, Program Presenter and VJ
சிறந்த எழுத்தாளர். அருமையான கவிதை எழுதுவதில் வல்லவர் .பல கவிதைகளுக்கு பல பரிசுகள் வாங்கியுள்ளார்.   இவர் எழுதிய அறிய சிறந்த கவிதைப் புத்தகங்கள் வெளிவந்து பாராட்டும் பெற்றுள்ளார்

1 comment:

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிகவும் நன்றி அன்பு நண்பரே :-)

LinkWithin

Related Posts with Thumbnails