காயிதேமில்லத் அவர்கள், இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா மீது பேரன்பு காட்டியவர்...
பேரன்பு கொண்ட காயிதேமில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும், நானும் இசைமுரசு அவர்களின் இல்லம் சென்று நலம் விசாரித்தோம்..
தனது சென்னை இல்லத்திற்கு காயிதேமில்லத் பெயரை சூட்டிய இசைமுரசிடம் அவர்மகன் நௌஷாத்தும், நானும் தாவூத்மியாகானை அறிமுகம் செய்ய காயிதேமில்லத் பேரனை எனக்குத்தெரியாதா? என்றார்.
பாட்டாலும்,பாசமிகு கூட்டாலும், தன் பாட்டனாரின் மனம் கவர்ந்த இசைமுரசுக்கு தனது மகளின் திருமண அழைப்பு கொடுத்து வாழ்த்து பெற்றார் தாவூத்மியாகான்..
அப்போது நெகிழ வைக்கும் சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் தாவூத்மியாகான்...
ஓர் இரவு நேரம்..
சாப்பிட அமர்கிறார் காயிதேமில்லத்..
அந்நேரம், தொடர்ந்து உச்ச தொனியிலேயே பாடியதால் நாகூர் ஹனீஃபா ரத்தவாந்தி எடுத்துவிட்ட தகவல் காயிதேமில்லத்துக்கு வருகிறது.
உடனே உணவைப் புறந்தள்ளிப் பதறி எழுந்த பாசத்தலைவர் ஹனீஃபாவின் உடல்நிலை சீராகும் வரை அவர் உடனிருந்துள்ளார்.
”மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே” என்ற பாடலை ஹனீஃபாவைப் பாடவைத்து அடிக்கடி கேட்டு மகிழ்பவர் காயிதேமில்லத்.
நோய்வாய்ப்பட்டு அந்த பாசத்தலைவர் படுக்கையில் இருந்த வேளையில், மரணிப்பதற்கு 10 நாள் முன்பு இறையருட்கவிமணி பேரா.கா.அப்துல்கஃபூர், எஸ்.எம்.ஷரீஃப் எம்.பி., நாகூர் ஹனீஃபா ஆகியோர் காணவந்துள்ளனர்..
இறையருட்கவிமணிக்கு, தான் இயற்றிய நபிமணி மாலையை காயிதேமில்லத் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய ஆவல். படுக்கையில் கிடக்கும் தலைவரின் முன்பு பாடல்களை எழுச்சியோடு பாடி அரங்கேற்றுகிறார் இசைமுரசு..
“ஆதி இறைவன் தூதர் நபி
அன்பே வடிவாம் நாதர் நபி”
மரணப்படுக்கையிலும் இப்பாடல் காயிதேமில்லத்தின் மனதை மலர வைத்துள்ளது...
அன்னார் இறக்கும் வரை முகத்தில் நாயகநேசத்தால் உண்டான ஒளி இருந்தது என்றார் தாவூத்மியாகான்...
எவ்வளவோ செய்திகள்...
கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றியது...
புலவர் ஆபிதீன், கவிஞர் காசிம், கா.அப்துல் கஃபூர் ....இத்தகைய புலமையும்,செழுமையும் கொண்ட கவிஞர்கள் காயிதேமில்லத்தால் ஆதரித்துப் போற்றப்பட்டுள்ளனர்.
இசைமுரசின் குரல் இவர்களின் கருத்துக்கு வாகனமாகவும்,கவிதைக்கு மோகனமாகவும் இருந்துள்ளது...
பழைய இளைஞர்கள்(?) தங்களின் தங்கத் தலைவராம் காயிதேமில்லத்தைப் பற்றி பேசும் போது காட்டுகிற உற்சாகம் இருக்கிறதே...அதைப் பார்க்கவேண்டும்..
அந்த காலத்தின் குரலாய் ஒலித்த இசைமுரசை ஒவ்வொருமுறை சந்திக்கும் போதும் அந்த நினைவுகள் சங்கீதமாகின்றன...
தகவல் Haja Gani
நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு.
"நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா
மர்ஹூம் நீடூர் அ.மு.சயீத் அவர்கள் எனது உடன் பிறந்த சகோதரர்
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
https://www.youtube.com/watch?v=OEO5VoBdnrA
2 comments:
அன்பு காயிதே மில்லத் அவர்கள் மற்றும் இசைமுரசு இருவரின் நட்பைப் படிக்கையில் பெரும் பரவசம்... உண்டாகின்றது.
நிஜாம் பக்கத்தில் புதிய பதிவு (அம்மா சொன்ன கதை) படித்துவ் விட்டீர்களா?
Post a Comment