“அண்ணல் நபிகள் பெருமானார் அவர்களே! மஹ்ஷரில் உங்களைப் பின்பற்றியவர்களின் குற்றம் குறைகளுக்காக இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு வழங்க யாசிப்பீர்களாம். இதை நான் படித்து இருக்கிறேன்.
பெருமானார் அவர்களே! உங்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உலகில் உள்ள எந்த முஸ்லிம்களுக்கு வேண்டுமானாலும் பாவமன்னிப்புக் கேட்டு இறைவனிடம் மன்றாடுங்கள். ஆனால் இந்திய முஸ்லிம்களுக்காக மட்டும் பாவ மன்னிப்பு கேட்டு இறைவனிடம் மன்றாடாதீர்கள்.
ஏனென்றால், உங்களை எங்களுக்குத் தெளிவாகவும், சரியாகவும், பூரணமாகவும் வெளிக்காட்டி இருந்தால் எங்களுக்கும் மிகப் பெரிய ஈடேற்றம் கிடைத்து இருக்கும்.
இதை இந்திய முஸ்லிம்கள் செய்யத் தவறி விட்டார்கள். இவர்களுக்குக் கிடைத்த உன்னதமான தானியத்தைத் தங்களுக்குள்ளேயேப் பதுக்கிக் கொண்டார்கள். இந்தப் பதுக்கல்காரர்களுக்காக தயவு செய்து நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள்”.
இப்படி ஒரு துஆவை (பிரார்த்தனையை) அந்த இப்தார் நிகழ்ச்சியில் ராஜ் நாராயணன் கேட்டார்.
No comments:
Post a Comment