'நான் சுன்னத் ஜமாஅத்
என் மகன் நஜாத்
ஆனால் நாங்கள் முஸ்லிம்கள் .'
குடும்ப வருத்தத்தை உலகுக்கு முகநூலில் பரப்புவது ஏன் !
உங்களை விட உயர்ந்த மார்க்க மேதைகள் பல கட்டுரையைப் பார்த்து குறை சொல்வதில்லை,சேவை மனதோடு மார்க்கத்தை மக்களுக்கு கனிவோடு அறிய வைக்கிறார்கள் .நம் அறிவு ஆண்டவன் அருளால் தெளிவடையும் .நேர் வழி கிடைக்கும் .இறைவனுக்கு இணை வைப்பது இஸ்லாமிய வழி அல்ல .மற்றும் வாழ்க்கை பாவம் செய்யாமல் வாழ்ந்தால் சிறப்பு .
குறை இருந்தாலும், தன் மகன் குறை செய்தாலும் பொது இடங்களில் தவறை சுட்டிக் காட்ட விரும்ப மாட்டான் .
உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் உங்களை நான் படிக்க சொல்லவில்லை .
உங்கள் விருப்பமான கட்டுரையை நீங்கள் விரும்பியபடி நீங்கள் உங்கள் இடத்தில் எழுதுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு .
நான் சுன்னத் ஜமாத்தாக இருக்கலாம் என் மகன் நஜாத்தாக இருக்கலாம் .ஆனால் நாம் அனைவரும் முஸ்லிம்கள் .
காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும் .குறை சொல்வதும் கண்டிப்பதும் எளிது. அன்புக்கு ஆசைப் படுபவன் அதே நேரத்தில் மரியாதையை மிகவும் நேசிப்பவன் யாரையும் மனம் புண் படுத்த மாட்டான்
பிடிக்க வில்லை என்றால் ஒதுங்கி விடுவேன் ,
உறவு மேன்மையானது .
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க .
ஊரை திருத்த முற்படுவதற்கு முன் அன்பும் கனிவும் அவசியம் வேண்டும்
உங்கள் கருத்தை அடுத்தவர் மீது திணிக்க முயறசிக்காதீர்கள் .உங்கள் கொள்கை உங்களுக்கு உயர்வு .அதேபோல்தான் அடுத்தவருக்கும் .
வேண்டாம் இந்த விரோதம் .
பாசமும் பணிவும் முதலில்
அறிவு அப்புறம் . அவனவன் மார்க்கம் அவனுக்கு .
இறைவன் அனைத்தையும் அறிவான். தீர்ப்பு அவன் கையில்
No comments:
Post a Comment